பம்மனேந்தல்
பம்மனேந்தல் | |||
— கிராமம் — | |||
அமைவிடம் | 9°17′22″N 78°21′50″E / 9.289392°N 78.363869°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | இராமநாதபுரம் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | பி. விஷ்ணு சந்திரன், இ. ஆ. ப [3] | ||
ஊராட்சி மன்றத் தலைவர் | சி.கார்த்திக் | ||
மக்கள் தொகை | 828 (2001[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
பம்மனேந்தல் (ஆங்கிலம்:PAMMANENDAL) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு சிற்றூர். கமுதி வருவாய் வட்டத்தின் 37 ஆவது எண்கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:37) ஆகும்.[4][5]
முக்கிய பயிர்[தொகு]
இங்கு நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), பருத்தி, மிளகாய் அதிகமாக விளைகின்றன. இது வறட்சி மாவட்டம் என்பதால் இங்கு சீமைக் கருவேல மரம் (விறகுகளால் தயாரிக்கப்படும் அடுப்புக்கரி தயாரிக்கும் பொருட்டு) முகனையாக வளர்க்கப்படுகிறது.
அமைவிடம்[தொகு]
கமுதியிலிருந்து பெருநாழி செல்லும் வழியில் கமுதியிலிருந்து சுமார் 19 கி.மீ.தூரத்திலும், பெருநாழியிலில் இருந்து 7 கி.மீ.தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 325 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து வட கிழக்கே சுமார் 6 கி.மீ தூரத்தில் பறவைகளின் சரணாலயம் காஞ்சிரங்குளம் கண்மாய் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பம்மனேந்தல் கிராமத்தில் 828 பேர் வசிக்கின்றார்கள்.இதில் ஆண்கள் 403,பெண்கள்425 பாலின விகிதம் 960. எழுத்தறிவு பெற்றவர்கள் 372 பேர். இதில் 271 பேர் ஆண்கள்; 101 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 53.22. ஆறு வயதுக்குட்பட்டோர் மொத்தம் 129 ஆண் குழந்தைகள் 66,பெண் குழந்தைகள் 63 ஆவர்.[6]
நிர்வாக அலகு[தொகு]
- மாவட்டம்: இராமநாதபுரம்
- வருவாய் கோட்டம்: பரமக்குடி
- வட்டம்: கமுதி
- வருவாய் கிராமம்: பம்மனேந்தல்
- ஊராட்சி ஒன்றியம்: கமுதி
- ஊராட்சி மன்றம்(பஞ்சாயத்து): பம்மனேந்தல்
வெளி இணைப்புகள்[தொகு]
அடிக்குறிப்பு[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-05-21.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-30.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர்28, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)CS1 maint: unfit URL (link)