பனி பாசு
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
Bani Basu | |
---|---|
![]() பாணி பசு | |
பிறப்பு | 11 மார்ச்சு 1939 கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | எழுத்தாளர், ஆங்கிலப் பேராசிரியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஸ்வேத் பதாரேர் தாலா, மைத்ரேய ஜாதகா, காந்தர்பி, எக்குஷே பா |
பாணி பசு (Bengali: বাণী বসু, 11 மார்ச் 1939[1]) சாகித்ய அகாதமி விருது பெற்ற ஒரு இந்திய வங்காள எழுத்தாளர், கட்டுரையாளர், விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் பேராசிரியர்.
கல்வி
[தொகு]அவர் லேடி பிரபோர்ன் கல்லூரியிலும் ஸ்காட்டிய சர்ச் கல்லூரியிலும் முறையாகப் பயின்றார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் அவர் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2]
தொழில்முறை வாழ்வு
[தொகு]ஜன்மபூமி மாத்ருபூமியை வெளியிட்டதன் மூலம் புதின எழுத்தாளராகத் தனது எழுத்துப் பணியைத் தொடங்கினார். தனது தொழில்முறை வாழ்வைை 1980-ல் "ஆனந்தமாலா" என்ற ஒரு சிறார் இதழில் ஒரு எழுத்தாளராகத் தொடங்கினார். பின்னர் "தேஷ்" உள்ளிட்ட அக்காலத்தின் பிற இதழ்களிலும் தன் படைப்புகளை வெளியிட்டார்.
அவர் ஒரு புதின, சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், மற்றும் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான எழுத்தாளர் எனப்பலவாறாக அறியப்படுகிறார். அவரது சில புனைகதைகள் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.[3] அவரது புனைகதைகள் பரந்த அளவில் பாலினம், வரலாறு, தொன்மம், சமூகம், உளவியல், இளமைப் பருவம், இசை, பாலியல் நோக்குநிலை, இயற்கைக்கு அப்பாற்பட்டவை உள்ளிட்ட பலவற்றைக் கருப்பொருளாகக் கொண்டவைு.
படைப்புகள்
[தொகு]அவரது முக்கிய படைப்புகள்
- ஸ்வேத் பதாரேர் தாலா (வெண் பளிங்குக்கல் தட்டு), (1990)[4][5]
- காந்தர்பி, (1993)
- மோகனா, (1993)
- எக்குஷே பா (இருபத்தோரு அடி), (1994)
- மைத்ரேய ஜாதகா (மைத்ரேயின் ஜாதகம்), (ஸ்த்ரீ பதிப்பகத்தால் மைத்ரேயாவின் பிறப்பு என வெளியிடப்பட்டது), (1999)
- உபன்யாஸ் பஞ்சக் (1999)
- அஷ்டம் கர்ப்பா (எட்டாவது கர்ப்பம்), (2000)
- அந்தர்காட் (தேசத்துரோகம்)
- பஞ்சம் புருஷ் (ஐந்தாவது மனிதன்)
- கானமிஹிரேர் தீபி (2009)
- கராப் சேலே
- மெயேலி அட்டார் ஹல்சல்
அவர் கவிதைகளையும் எழுதியுள்ளார், பிறமொழிகளிலிருந்து பெங்காலிக்கு வெகுவாக மொழிபெயர்த்துள்ளார்.
விருதுகள்
[தொகு]- தாரா சங்கர் விருது, 1991, அந்தர்காட்டுக்காக
- சாகித்ய சேது சந்திரா, (1995)
- சிரோமோனி விருது, (1997)
- ஆனந்த புரஸ்கார், (1997), மைத்ரேய ஜாதகாவுக்காக
- மகாதேவி பிர்லா விருது, (1998)
- சாகித்ய அகாதெமி விருது (2010), வங்காள இலக்கியத்தில் அவரது பங்களிப்புகளுக்காக
சான்றுகள்
[தொகு]- ↑ "Bani Basu - Bengali Writer: The South Asian Literary Recordings Project (Library of Congress New Delhi Office)". Loc.gov. 1939-03-11. Retrieved 2012-07-15.
- ↑ "Bani Basu". veethi.com. Retrieved 2021-10-01.
- ↑ "Basu, Bani".
- ↑ Singh, Smita (November 10, 2020). "Book Review: Bani Basu's A Plate of White Marble Offers A Strong Commentary On The Plight Of Widows In India". SheThePeople.TV. https://www.shethepeople.tv/home-top-video/book-review-bani-basu-a-plate-of-white-marble-translation-bengali-literature-plight-widows/.
- ↑ Basu, Bani (September 30, 2020). "With A Plate of White Marble, Bani Basu's Bengali classic Swet Patharer Thala finds first English translation". FirstPost. https://www.firstpost.com/art-and-culture/with-a-plate-of-white-marble-bani-basus-bengali-classic-swet-patharer-thala-finds-first-english-translation-8842691.html.