பந்திபோரா
பந்திபோரா | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் பந்திபோரா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 34°25′00″N 74°39′00″E / 34.4167°N 74.6500°E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) |
மாவட்டம் | பந்திபோரா மாவட்டம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 20,176 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | உருது |
• பேச்சு மொழி | காஷ்மீரி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 193502 |
இணையதளம் | http://bandipore.gov.in |
பந்திபோரா (Bandipore) (English: /ˌbændɪˈpɔː/) or Bandipora) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்த பந்திபோரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். பந்திபோரா நகரம் உளர் ஏரியின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. பந்திபோரா நகரத்தின் முப்புறங்களிலும் மலைகளாள் சூழப்பட்டுள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 17 வார்டுகளும், 5,584 வீடுகளும் கொண்ட பந்திபோரா நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 37,081 ஆகும். அதில் ஆண்கள் 20,176 மற்றும் பெண்கள் 16,905 ஆகவுள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4245 (11.45%) உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 838 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 75.13% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இசுலாமியர் 95.04%, இந்துக்கள் 4.57% மற்றவர்கள் 0.39% ஆகவுள்ளனர்.[1]