பஞ்சமகால் மாவட்டம்
பஞ்சமகால் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
மத்திய குஜராத் மாவட்டங்கள் | |
நாடு | இந்தியா |
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | குசராத்து |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 23,88,267 |
மொழிகள் | |
• அலுவலக மொழிகள் | குஜராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
பஞ்சமகால் மாவட்டம் (Panchmahal), மேற்கு இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் மத்திய குஜராத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத் தலைமையகம் கோத்ரா நகராகும். உலக அளவில் பேசப்பட்ட கோத்ரா தொடருந்து எரிப்பு நிகழ்வு இம்மாவட்டத்தில் 27 பெப்ரவரி 2002இல் நடந்தது. இங்குள்ள சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்காவை, யுனேஸ்கோ நிறுவனம் உலகப் பண்பாட்டுக் களங்களில் ஒன்றாக தேர்வு செய்துள்ளது.[1]
வருவாய் வட்டங்கள்
[தொகு]- கோத்ரா
- ஹலோல்
- கலோல்
- ஜம்புகோடா
- மோர்வா-ஹடாப்
- கொகாம்பா
மாவட்ட எல்லைகள்
[தொகு]கிழக்கிலும், வடகிழக்கிலும் தகோத் மாவட்டம், தெற்கு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கில் வதோதரா மாவட்டம், மேற்கில் கேதா மாவட்டம், வடமேற்கில் சபர்கந்தா மாவட்டம், வடகிழக்கில் மகிசாகர் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது பஞ்சமகால் மாவட்டம். [2]
பொருளாதாரம்
[தொகு]இந்தியாவின் 640 மாவட்டங்களில், இம்மாவட்டம் பொருளாதாரத்தில் மிகவும் வறுமைமிக்க மாவட்டமாக இந்திய அரசின் பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தால் 2006ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. குஜராத் மாநில அரசின் பிற்படுத்தப்பட்ட பகுதிக்கான மானியம் பெறும் ஆறு மாவட்டங்களில் இதுவும் ஒன்று. [3]
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்ட மக்கட்தொகை 2,388,267. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 458 நபர்களாக உள்ளனர். ஆண்-பெண் பாலின விகிதம் 1000-945ஆக உள்ளது. எழுத்தறிவு விகிதம் 73.32%ஆக உள்ளது.
பண்பாட்டுக் களம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ | title=Champaner-Pavagadh Archaeological Park | publisher=[http://whc.unesco.org United Nations Educational, Scientific and Cultural Organization
- ↑ "Census GIS India". Censusindiamaps.net. Archived from the original on 2015-04-25. பார்க்கப்பட்ட நாள் 2013-07-10.
- ↑ Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]