பகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுவண்டி
பகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவு வண்டி Bhagat Ki Kothi–Mannargudi Weekly Express | |||
---|---|---|---|
கண்ணோட்டம் | |||
வகை | விரைவுத் தொடர்வண்டி | ||
முதல் சேவை | தொடக்கம் ஏப்ரல் 9, 2015 | ||
நடத்துனர்(கள்) | தென்னிந்திய இரயில்வே மண்டலம் | ||
வழி | |||
தொடக்கம் | பகத் கி கோதி | ||
இடைநிறுத்தங்கள் | 42 | ||
முடிவு | மன்னார்குடி | ||
ஓடும் தூரம் | 2859 கி.மீ. | ||
சராசரி பயண நேரம் | 50 மணி | ||
சேவைகளின் காலஅளவு | வாரமொருமுறை | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | குளிர் ஈரடுக்கு, குளிர் மூவடுக்கு, படுக்கை, முன்பதிவில்லாதவை | ||
இருக்கை வசதி | இல்லை | ||
படுக்கை வசதி | உண்டு | ||
உணவு வசதிகள் | உணவு உள் வசதியற்றது வெளிப்புற உணவு வசதி | ||
பொழுதுபோக்கு வசதிகள் | உண்டு | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
சுழலிருப்பு | 2 | ||
பாதை | 1676 மி.மீ. | ||
வேகம் | 57 கி.மீ/மணி | ||
|
பகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவு வண்டி (Bhagat Ki Kothi–Mannargudi Weekly Express) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள பகத் கி கோதி இரயில் நிலையத்தையும் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மன்னார்குடியையும் இணைக்கும் ஒரு விரைவு இரயில் ஆகும். வாரமொருமுறை 16863 மற்றும் 16864 ஆகிய தொடர்வண்டி எண்களில் இவ்விரைவு இரயில் இயக்கப்படுகிறது.[1] தற்போது அதிவிரைவு வண்டியாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
சேவை
[தொகு]பகத் கி கோத்தி-மன்னார்குடி வாராந்திர விரைவு வண்டிகள் சராசரியாக மணிக்கு 57 கிலோமீட்டர் வேகத்தில் செல்கின்றன. இவை மொத்தமாக 2859 கிமீ வேகத்தை 48.30 மணி நேரத்தில் கடக்கின்றன. இந்த இரயில் தெற்கு இரயில்வே மண்டலத்தால் இயக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி சந்திப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மன்னார்குடியை அடைந்ததும் காலி பெட்டிகள் திருச்சிராப்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பராமரிப்பு பயணத்தின் போது இதே போல எதிர்பாதையில் நீடாமங்கலம் சந்திப்பில் இப்பணி நடைபெறுகிறது.
வழித்தடம் மற்றும் நிறுத்தங்கள்
[தொகு]விரைவுவண்டியின் முக்கிய நிறுத்தங்கள்:
- பகத் கி கோதி
- சோத்பூர் சந்திப்பு
- மெர்டா சாலை சந்திப்பு
- செய்ப்பூர் சந்திப்பு
- சவாய் மாதோபூர் சந்திப்பு
- கோட்டா சந்திப்பு
- நாகடா சந்திப்பு
- உச்சைன் சந்திப்பு
- போபால் சந்திப்பு
- இட்டார்சி சந்திப்பு
- நாக்பூர் சந்திப்பு
- பால்கர்சா சந்திப்பு
- பெடபள்ளி சந்தி
- வாரங்கல்
- விசயவாடா சந்திப்பு
- குதூர் சந்திப்பு
- சென்னை எழும்பூர்
- விழுப்புரம் சந்திப்பு
- சிதம்பரம்
- மன்னார்குடி
இழுவை
[தொகு]பாதை இன்னும் முழுமையாக மின்மயமாக்கப்படாததால், பகத் கி கோத்தி டீசல் அடிப்படையிலான இயந்திரம் மூலம் பகத் கி கோத்தியிலிருந்து சவாய் மாதோபூர் வரை இழுத்துச் செல்லப்படுகிறது. பின்னர் இது மன்னார்குடி வரை இடார்சி மின் இயந்திரத்துடன் இணைக்கப்படுகிறது.
இணைப்புப் பெட்டிகள்
[தொகு]மொத்தம் 18 தொடரிணைப்புப் பெட்டிகள் இரயிலில் உள்ளன. அவை:
- 1 குளிர் இரண்டாம் அடுக்கு
- 3 குளிர் மூன்று அடுக்கு
- 6 படுக்கைகள்
- 6 பொது
- 2 இரண்டாம் வகுப்பு சரக்கு / சிப்பம் ஊர்தி
திசை
[தொகு]இந்த இருப்பூர்தி அதன் திசையை நான்கு முறை மாற்றியமைத்துக் கொள்கிறது. அவை:
- சவாய் மாதோபூர் சந்திப்பு
- நாகடா சந்திப்பு
- நீடாமங்கலம் சந்திப்பு தொடருந்து நிலையம்