கண்டகி பிரதேசம்
கண்டகி மாநிலம்
गण्डकी प्रदेश மாநில எண் 4 | |
---|---|
மேலிருந்து இடப்புறத்திலிருந்து, வலமாக அன்னபூர்ணா 1, மச்சபூச்சர மலை, மேல் மஸ்தாங், திலிசூ ஏரி, மனகாமன கோயில், முக்திநாத், பேவா ஏரி மற்றும் கோர்க்கா அரண்மனை | |
நேபாளத்தில் கண்டகி மாநிலத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 28°12′34″N 83°59′29″E / 28.20944°N 83.99139°E | |
நாடு | நேபாளம் |
நிறுவிய ஆண்டு | 20 செப்டம்பர் 2015 |
தலைநகரம் | பொக்காரா |
பெரிய நகரம் | பொக்காரா |
மாவட்டம் | 11 |
அரசு | |
• நிர்வாகம் | கண்டகி மாநில அரசு |
• முதலமைச்சர் | பிரிவிதி சுப்பா குரூங் (நேபாள பொதுவுடமைக் கட்சி) |
• உயர் நீதிமன்றம் | பொக்காரா உயர் நீதிமன்றம் |
• மாநில சட்டமன்றம் | ஓர் அவை (60 உறுப்பினர்கள்) |
• நாடாளுமன்ற பிரதிநிதி தொகுதிகள் | 18 |
பரப்பளவு | |
• மொத்தம் | 21,504 km2 (8,303 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 4ஆம் இடம் [ |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 24,03,757 |
• தரவரிசை | 6ஆம் இடம் |
• அடர்த்தி | 110/km2 (290/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 6ஆம் இடம் |
இனம் | நேபாளி |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள் சீர் நேரம்) |
புவிசார் குறியீடு | NP-FO |
அலுவல் மொழி | நேபாளி மொழி |
பிற மொழிகள் | குரூங் மொழி, மகர் மொழி |
மனித வளர்ச்சி சுட்டெண் | 0.567 (medium) |
எழுத்தறிவு | 74.81% |
பாலின விகிதம் | 83.84 ♂ /100 ♀ (2011) |
இணையதளம் | ocmcm |
கண்டகி பிரதேசம் (Kandaki Pradesh), 20 செப்டம்பர் 2015 அன்று புதிதாக வரையறுக்கப்பட்ட நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் எண் 4-இன் படி, நேபாள நாட்டை, நிர்வாக வசதிக்காக ஏழு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. [1] இந்த ஏழு மாநிலங்களுக்குத் தற்போது ஒன்று முதல் ஏழு வரை எண்கள் வழங்கப்பட்டுள்ளது. மாநில எண் 4 என பெயரிடப்பட்டிருந்த இம்மாநிலத்திற்கு தற்போது '[கண்டகி பிரதேசம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 295 (2)-இன் படி, மாநிலங்களின் பெயர்கள், புதிதாக உருவாக்கப்படும் அந்தந்த மாநில சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரிக்கும் பெயர் மாநிலத்திற்கு இடப்படும். அதுவரை மாநிலப் பகுதிகள் எண்கள் மட்டும் அரசுக் குறிப்புகளில் இடம் பெறும் இம்மாவட்டத்தின் பரப்பளவு 21,504 சதுர கிலோ மீட்டராகும். இதன் மக்கள் தொகை 2,413,907 ஆக உள்ளது.[2]
இம்மாநிலத்தின் தலைநகரம் பொக்காரா ஆகும்.
அமைவிடம்
[தொகு]மத்தியவடக்கு நேபாளத்தில் அமைந்த இம்மாநிலத்தின் வடக்கே திபெத் தன்னாட்சிப் பகுதியும், தெற்கில் நேபாள மாநில எண் 5, கிழக்கில் நேபாள மாநில எண் 3, மேற்கில் நேபாள மாநில எண் 6 எல்லைகளாக அமைந்துள்ளது.
மக்கள்தொகையியல்
[தொகு]2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 21,504 சகிமீ பரப்பளவு கொண்ட கண்டகி பிரதேச மக்கள்தொகை 2,403,016 ஆகும். இது நேபாள மக்கள்தொகையில் 9.06% ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 9,48,028 ஆகவும்; பெண்கள் 1,144,124 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தியானது 1 சகிமீ பரப்பில் 110 வீதம் உள்ளனர். பாலின விகிதம் 100 பெண்களுக்கு, 89 ஆண்கள் வீதம் உள்ளனர். நகர்புற மக்கள்தொகை 60.5%; கிராமப்புற மக்கள்தொகை 39.5% ஆகவுள்ளது. [3]
மாநில எண் 4-இன் மாவட்டங்கள்
[தொகு]- 1. கோர்க்கா மாவட்டம்
- 2. லம்ஜுங் மாவட்டம்
- 2. மியாக்தி மாவட்டம்
- 4. காஸ்கி மாவட்டம்
- 5. மனாங் மாவட்டம்
- 6. முஸ்தாங் மாவட்டம்
- 7. பர்பத் மாவட்டம்
- 8. சியாங்ஜா மாவட்டம்
- 09. பாகலுங் மாவட்டம்
- 10. தனஹு மாவட்டம்
- 11. நவல்பூர் மாவட்டம்
அரசியல்
[தொகு]இம்மாநில சட்டமன்றத்தின் 60 உறுப்பினர்களில் 36 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும், 24 உறுப்பினர்கள் விகிசாத்சாரத் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
மேலும் நேபாள தேசிய சபைக்கு 8 உறுப்பினர்களையும், நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 18 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கிறது.
அரசாங்கம்
[தொகு]2017 சட்டமன்றத் தேர்தலில், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியத்தின் கூட்டணிக் கட்சிகள் பெரும் வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சியின் அங்கமான மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரிதிவி சுப்பா குரூங், இம்மாநில அரசின் முதலாவது முதலமைச்சராக 16 பிப்ரவரி 2018 அன்று பதவியேற்றார். [4]
2017 சட்டமன்ற தேர்தல் முடிவுகள், மாநில எண் 4
[தொகு]அரசியல் கட்சி | நேரடித் தேர்தலில் | விகிசாத்சார முறையில் | மொத்தம் | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | ||||
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் | 17 | 373,501 | 39.04 | 10 | 27 | ||||
நேபாளி காங்கிரஸ் | 6 | 364,797 | 38.13 | 9 | 15 | ||||
align="left" மாவோயிஸ்ட் | 9 | 119,528 | 12.49 | 3 | 12 | ||||
நவ சக்தி கட்சி | 1 | 24,625 | 2.57 | 1 | 2 | ||||
ராஷ்டிரிய ஜனமோர்ச்சா | 2 | 19,376 | 2.03 | 1 | 3 | ||||
பிறர் | 0 | 54,992 | 5.75 | 0 | 0 | ||||
சுயேட்சைகள் | 1 | 1 | |||||||
மொத்தம் | 36 | 956,819 | 100 | 24 | 60 | ||||
Source: Election Commission of Nepal பரணிடப்பட்டது 2022-11-10 at the வந்தவழி இயந்திரம் |
சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nepal Provinces". statoids.com. பார்க்கப்பட்ட நாள் 2016-03-21.
- ↑ http://www.statoids.com/unp.html
- ↑ "Province Profile" (PDF). Government of Province No. 4. Archived from the original (PDF) on 2018-04-28.
- ↑ Chief Minister of Province 4 sworn in