நேத்ரா இரகுராமன்
நேத்ரா இரகுராமன் | |
---|---|
![]() நேத்ரா இரகுராமன் | |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1997–2016 |
வாழ்க்கைத் துணை | குணால் குகா (தி. 2011) |
நேத்ரா இரகுராமன் (Nethra Raghuraman) என்பவர் ஓர் இந்திய நடிகையும் வடிவழகியும் ஆவார். 1997ஆம் ஆண்டு பெமினா பத்திரிகையின் லுக் ஆப் தி இயர் போட்டியின் வெற்றியாளராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2000-ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்கிரீன் விருதுகளில் சிறந்த பெண் புதுமுக நடிகை பட்டத்தையும் வென்றார்.[2] கோவிந்த் நிகாலானியின் தக்ஷக், டேவிட் லிஞ்சின் போபால் எக்ஸ்பிரஸ் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்கப் படங்களில் அடங்கும். இரகுராமன் பல்வேறு இசை காணொளிகளில் தோன்றியுள்ளார். 2008ஆம் ஆண்டில் தொலைக்காட்சி மெய்ம்மைக் காட்சித் தொடரான பியர் பேக்டர்: கத்ரோன் கே கிலாடி 1-ஐ வென்றார்.[3]
வாழ்க்கை
[தொகு]நேத்ரா, ஒரு தமிழ் இந்து குடும்பத்தில் பிறந்தார்.[4] நேத்ரா, சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரும், இந்தியத் துடுப்பாட்ட வீரருமான சுப்ரதா குகாவின் மகனுமான குணால் குகாவை 2011-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மணந்தார்.
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | பங்கு |
---|---|---|
1999 | தக்ஷக் | நிசி |
1999 | போபால் எக்ஸ்பிரஸ் | தாரா |
2001 | அவகாட் | சுதா |
2001 | மஜ்னு | "மெர்குரி மேலே" பாடலில் சிறப்புத் தோற்றம் |
2004 | இன்டெகாம் - தி பெர்பெக்ட் கேம் | டாக்டர் மெஹக் |
2004 | சோட்- அஜ் இசுகோ, கல் தெரெகோ | ஆய்வாளர் மால்தி தேசாய் |
2005 | டம்... ஹோ நா! | அஞ்சலி ஜே. வாலியா |
2006 | ஹஸ்ன் - காதல் மற்றும் துரோகம் | திரிஷா |
2016 | பாக்யா நா ஜானே கோய் | புத்தியா |
தொலைக்காட்சி
[தொகு]- 2008 - பியர் பேக்டர்: கத்ரோன் கே கிலாடி 1 வெற்றியாளராக
- 1999 - கேப்டன் வியோம் மருத்துவர் நைனா / பார்ச்சாயி (காலா சாயாவின் மகள் - பராஜீவ்ஸ் பேரரசர்).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rajwade, Gayatri (13 November 2005). "Model lives". The Tribune (Chandigarh, India: The Tribune Trust). http://www.tribuneindia.com/2005/20051111/jplus.htm.
- ↑ "Personal agenda". Hindustan Times (Delhi, India: HT Media Limited). 28 November 2009. http://www.hindustantimes.com/Personal-agenda-Nethra-Raghuraman/H1-Article1-481133.aspx.
- ↑ Rao, Ashok (18 August 2008). "Nethra Is The Winner Of 'Khatron Ke Khiladi' On Colors". Top News. http://www.topnews.in/nethra-winner-khatron-ke-khiladi-colors-259890.
- ↑ "Rediff On The Net, Movies: Meet Nethra Raghuraman, Supermodel and Bollywood wannabe". Rediff.com. Retrieved 14 August 2021.