நெப்டியூனியம் டெட்ராபுரோமைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
நெப்டியூனியம்(IV) புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
15608-32-9 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Br4Np | |
வாய்ப்பாட்டு எடை | 556.62 g·mol−1 |
தோற்றம் | செம்பழுப்பு நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 5.5 கி/செ.மீ3 |
உருகுநிலை | 464 °C (867 °F; 737 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நெப்டியூனியம் டெட்ராபுரோமைடு (Neptunium tetrabromide) என்பது NpBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நெப்டியூனியமும் புரோமினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2][3][4]
தயாரிப்பு
[தொகு]புரோமினுடன் உலோக நெப்டியூனியத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நெப்டியூனியம் டெட்ராபுரோமைடு உருவாகிறது.
- Np + 2Br2 → NpBr4
நெப்டியூனியம்(IV) ஆக்சைடு சேர்மத்துடன் அலுமினியம் புரோமைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் நெப்டியூனியம் டெட்ராபுரோமைடு உருவாகும்:[5][6]
- 3NpO2 + 4AlBr3 -> 3NpBr4 + 2Al2O3
இயற்பியல் பண்புகள்
[தொகு]நெப்டியூனியம் டெட்ராபுரோமைடு செம்-பழுப்பு நிற நீருறிஞ்சும் படிகங்களாக உருவாகிறது. P 2/c என்ற இடக்குழுவில்[7][8] a = 1.089 நானோமீட்டர், b = 0.874 நானோமீட்டர், c = 0.705 நானோமீட்டர், β = 95.19°, Z = 4. என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் ஒற்றைச் சரிவச்சு படிக அமைப்பில் இது படிகமாகிறது.
வேதியியல் பண்புகள்
[தொகு]நெப்டியூனியம் டெட்ராபுரோமைடை நன்றாகச் சூடுபடுத்தினால் சிதைவடைந்து நெப்டியூனியம் முப்புரோமைடு உருவாகிறது.
- 2NpBr4 → 2NpBr3 + Br2
ஆண்டிமனி(III) ஆக்சைடுடன் சேர்த்து கவனமாக ஆக்சிசனேற்றம் செய்தால் நெப்டியூனியம் ஆக்சியிருபுரோமைடு உருவாகிறது:
- NpBr4 + Sb2O3 → NpOBr2 + 2SbOBr
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "WebElements Periodic Table » Neptunium » neptunium tetrabromide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.
- ↑ Stevens, J. L.; Jones, E. R.; Karraker, D. G. (15 February 1976). "Mössbauer spectra and magnetic susceptibility of neptunium tetrabromide". The Journal of Chemical Physics 64 (4): 1492–1494. doi:10.1063/1.432366. Bibcode: 1976JChPh..64.1492S. https://pubs.aip.org/aip/jcp/article-abstract/64/4/1492/785421/Mossbauer-spectra-and-magnetic-susceptibility-of?redirectedFrom=PDF. பார்த்த நாள்: 2 April 2024.
- ↑ Brown, D.; Hill, J.; Rickard, C. E. F. (1 January 1970). "Preparation of actinide bromides and bromo-complexes by use of liquid boron tribromide or liquid bromine" (in en). Journal of the Chemical Society A: Inorganic, Physical, Theoretical: 476–480. doi:10.1039/J19700000476. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4944. https://pubs.rsc.org/en/content/articlelanding/1970/j1/j19700000476. பார்த்த நாள்: 2 April 2024.
- ↑ Yaws, Carl L. (6 January 2015). The Yaws Handbook of Physical Properties for Hydrocarbons and Chemicals: Physical Properties for More Than 54,000 Organic and Inorganic Chemical Compounds, Coverage for C1 to C100 Organics and Ac to Zr Inorganics (in ஆங்கிலம்). Gulf Professional Publishing. p. 740. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-801146-1. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.
- ↑ Fried, S. (1947). The Basic Dry Chemistry of Neptunium (in ஆங்கிலம்). Atomic Energy Commission. p. 10. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.
- ↑ Abstracts of Declassified Documents (in ஆங்கிலம்). Technical Information Division, Oak Ridge Directed Operations. 1947. p. 740. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.
- ↑ Morss, L. R.; Edelstein, Norman M.; Fuger, Jean (21 October 2010). The Chemistry of the Actinide and Transactinide Elements (Set Vol.1-6): Volumes 1-6 (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 2416. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-007-0211-0. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.
- ↑ Kirk-Othmer Concise Encyclopedia of Chemical Technology, 2 Volume Set (in ஆங்கிலம்). John Wiley & Sons. 16 July 2007. p. 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-04748-4. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.