உள்ளடக்கத்துக்குச் செல்

நூறு கோடியினர் கிளர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூறுகோடியினர் கிளர்ச்சி
One Billion Rising
முக்கிய நபர்கள்
ஈவ் என்சுலர்
வலைத்தளம்onebillionrising.org
இந்த இயக்கத்தின் நிறுவனர் ஈவ் என்சுலர்

ஒன் பில்லியன் ரைசிங் (One Billion Rising) அல்லது நூறுகோடியினர் கிளர்ச்சி பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் இயக்கமாகும்.[1][2][3] பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளை நிறுத்தவும் பாலின சமத்துவம் மற்றும் நீதிக்காகவும் இந்த இயக்கம் போராடுகிறது. பெண்களில் மூன்றில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் பாலியல் வன்முறை அல்லது வீட்டு வன்முறைக்கு ஆளாகின்றனர் என்ற புள்ளிவிவரத்தின் அடிப்படையில் உலகளவில் நூறுகோடி பெண்கள் தாக்கமுறுவதான கருதுகோளின் அடிப்படையில் இந்த இயக்கம் பெயரிடப்பட்டுள்ளது.[4]

இந்த இயக்கம் நாடகாசிரியரும் செயல்வீரருமான ஈவ் என்சுலர் என்ற பெண்மணியால் துவக்கப்பட்டது. இவர் த வஜினா மோனோலோக்சு என்ற நாடகத்திற்காகவும் வி-டே என்ற அமைப்பிற்காகவும் அறியப்படுகிறார்.[5] ஐக்கிய அமெரிக்கத் தேர்தல்களின்போது டோட் அகின் என்ற வேட்பாளரின் 'சட்டபூர்வ பாலியல் வன்முறை' மற்றும் கருத்தரித்தல் குறித்த சர்ச்சைக்குள்ளான கருத்துக்கள் இந்த இயக்கத்திற்கு தூண்டுதலாக அமைந்தது. உண்மையான பாலியல் வன்முறையால் கருத்தரிப்பு ஏற்படுவதில்லை என்பன போன்ற கருத்துக்களால் கோபமுற்ற என்சுலர் அனைவரும் காணக்கூடிய கடிதம் ஒன்றை எழுதினார்.[6]

இந்த இயக்கத்தில் 5,000 அமைப்புகள் இணைந்துள்ளன; இந்த அமைப்புக்கள் பல சமய அமைப்புக்கள், சமூக இயக்க செயல்வீரர்கள், நடிகர்கள்,[7][8] பெண்ணிய அரசியல்வாதிகள் போன்றோரால் ஆதரவும் சிபாரிசும் அளிக்கப்பட்டுள்ளன.[9]

செப்டம்பர் 20, 2012இல் 160 நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்த இயக்கத்திற்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர்.[10]

பெப்ரவரி 14, 2013 அன்று 190 நாடுகளுக்கும் மேலாக பேரணிகள் நடத்தப்பட்டன.[11] அன்றைய நாளில் உலகெங்கும் நூறுகோடி பெண்கள் தங்கள் வலிமையைக் காட்டும் விதமாக இணைந்து ஆடுவதற்கு அறைகூவல் விடப்பட்டது.[12] இந்த நாள் என்சுலரின் வி-டே அமைப்பின் 15வது ஆண்டுவிழா நாளாகவும் அமைந்திருந்தது.[13]

சான்றுகோள்கள்

[தொகு]
  1. "V-Day: One Billion Rising". Huffingtonpost.com. Retrieved 2012-09-25.
  2. "Celebrating five years of women moaning | Antigua Observer Newspaper". Antiguaobserver.com. 2012-04-27. Archived from the original on 2018-07-02. Retrieved 2012-09-25.
  3. "'This is not a women's issue, it's a global crisis': Robert Redford - video | Society | guardian.co.uk". Guardian. Retrieved 2012-09-25.
  4. "Features". Oxyweekly.com. 2012-02-21. Archived from the original on 2012-08-21. Retrieved 2012-09-25.
  5. "Capital News » African gender activists meet in Kenya over violence". Capitalfm.co.ke. 1931-11-07. Retrieved 2012-09-25.
  6. "One Billion Rising: Eve Ensler, Activists Worldwide Plan Global Strike to End Violence Against Women". Democracynow.org. Retrieved 2012-09-28.
  7. Martinson, Jane (2007-09-28). "Join the One Billion Rising campaign to end violence against women | Society". The Guardian. Retrieved 2012-09-25.
  8. "Una campagna contro la violenza sulle donne mondiale". ilJournal.it. 2012-09-09. Retrieved 2012-09-25.
  9. Rosamund Urwin (2012-09-07). "'The misogynist abuse MPs receive is shocking – you should see the tweets I get' - Politics - News - Evening Standard". Standard.co.uk. Retrieved 2012-09-25.
  10. "News in Nepal: Fast, Full & Factual". Myrepublica.Com. 2012-09-20. Archived from the original on 2014-02-22. Retrieved 2012-09-25.
  11. Kyivans join global rally to end violence against women, Kyiv Post (14 February 2013)
  12. "Fit for the King » FUNFARE with Ricardo F. Lo | Entertainment » Exclusive". philstar.com. Archived from the original on 2017-10-04. Retrieved 2012-09-25.
  13. Coastweek Kenya (2012-09-06). "coastweek.com". coastweek.com. Archived from the original on 2013-01-19. Retrieved 2012-09-25.

வெளி இணைப்புகள்

[தொகு]