கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரபார்ந்த மற்றும் பதிலீடான நிரப்பு வழிகள்
நிரப்புப்புரதங்கள் (complement proteins) உடலில் புகும் நோய் கிருமிகளை அழிக்கும் எதிர்ப்பான்கள் மற்றும் துப்புரவுச்செல்களுக்கு உதவும் (அ) நிரப்பும் பணியினை செய்கின்றன. இது பிறவி நோயெதிர்ப்பு அமைப்பைச் சார்ந்தது ஆகும்[1]. பிறவி நோயெதிர்ப்பு அமைப்பானது மாற்றமைவு செய்தக்கதோ அல்லது ஒருவரின் வாழ்நாளில் மாற்றம் பெறுவதோ கிடையாது. இருந்தபோதிலும், மாற்றியமைக்கத்தக்க நோயெதிர்ப்பு அமைப்புப் பணியிலும் இப்புரதங்கள் பங்குபெறுகின்றன. இருபத்தியைந்திற்கும் மேற்பட்ட புரதங்களும், புரதத்துண்டுகளும் சேர்ந்ததே நிரப்பு அமைப்பாகும் (complement system). சாதரணமாக, நிரப்புப்புரதங்கள் செயலற்ற நிலையில் முன்-புரதங்களாக இரத்தத்தில் காணப்படுகின்றன. இப்புரதங்கள் பொதுவாக கல்லீரலில் உற்பத்திச்செய்யப்படுகின்றன. ஊக்கிகளால் தூண்டப்படும் பொழுது முன்-புரதங்கள் நொதிகளால் துண்டாக்கப்பட்டு செயலாற்றும் நிலையை அடைகின்றன.
நிரப்பு அமைப்பானது மூன்று வழிகளில் தூண்டப்படுகிறது: மரபார்ந்த நிரப்பு வழி, பதிலீடான நிரப்பு வழி மற்றும் லெக்டின் வழி[2].
↑Janeway, CA Jr; Travers P; Walport M; et al. (2001). "The complement system and innate immunity". Immunobiology: The Immune System in Health and Disease. New York: Garland Science. Retrieved 25 February 2013.