நிக்கோலா தெஸ்லா
நிக்கொலா தெசுலா Nikola Tesla | |
---|---|
நிக்கொலா தெசுலா, அண். 1896 | |
பிறப்பு | சிமிலியான், ஆத்திரியப் பேரரசு (இன்றைய குரோவாசியாவில்) | 10 சூலை 1856
இறப்பு | 7 சனவரி 1943 நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா | (அகவை 86)
இறப்பிற்கான காரணம் | இதயநாடிக் குருதியுறைவு |
குடியுரிமை | ஆத்திரியர் (1856–1891) அமெரிக்கர் (1891–இறப்பு வரை) |
கல்வி | கிராசு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் |
பொறியியல் துறை | |
துறை | மின் பொறியியல், இயந்திரவியல் |
செயல் திட்டங்கள் | மாறுதிசை மின்னோட்டம் |
குறிப்பிடத்தக்க வடிவமைப்புகள் | தூண்டல் மின்னோடி சுழல் காந்தப்புலம் தெசுலா சுருள் வானலை தொலையியக்கி வாகனம் (நீர்மூழ்கிக் குண்டு)[1] |
விருதுகள் | எடிசம் பதக்கம் (1916) பாரிசு பல்கலைக்கழக பதக்கம் (1937) |
கையொப்பம் |
நிக்கோலா தெசுலா (Nikola Tesla, செர்பிய மொழி: Никола Тесла, நிக்கொலா தெஸ்லா, 10 சூலை 1856 – 7 சனவரி 1943) ஒரு கண்டுபிடிப்பாளரும், இயந்திரப் பொறியாளரும், மின்பொறியாளரும் ஆவார். குரொவேசிய இராணுவ முன்னரங்கப்பகுதியில் உள்ள சிமில்ஜான் என்னும் இடத்தில் பிறந்த இவர் சேர்பிய இனத்தவர். ஆஸ்திரியப் பேரரசின் குடிமகனாக இருந்த இவர் பின்னாளில் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.[2] 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் இவர் செய்த புரட்சிகரமான பங்களிப்புக்களினால் இவர் மிகவும் புகழ் பெற்றார். தெஸ்லாவின் காப்புரிமைகளும், கோட்பாட்டுகளும்; பன்னிலைமை மின் வழங்கல் முறைமைகள், மாறுதிசை மின்னோட்ட மோட்டார்கள் என்பன உள்ளிட்ட, தற்கால மாறுதிசை மின்னோட்ட மின் வலு முறைமைகளின் அடிப்படையாக அமைந்தன. இவற்றின் மூலம் இவர் இரண்டாம் தொழிற்புரட்சி ஒன்று உருவாவதற்கு உதவினார். இவரது சமகால வரலாற்றாளர்கள் இவரை "இயற்பியலின் தந்தை" என்றும், "இருபதாம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவர்" என்றும், "தற்கால மின்னியலின் காப்பாளர்" என்றும் போற்றினர்.
1894 இல் கம்பியில்லாத் தொடர்பு (வானொலி)[3] பற்றிய இவரது செயல்முறை விளக்கம், "மின்னோட்டப் போரில்" இவர் பக்கம் வெற்றிபெற்றது போன்ற நிகழ்வுகளுக்குப் பின்னர், அமெரிக்காவில் பணிபுரிந்த மின்பொறியாளர்களில் மிகச் சிறந்தவர்களில் ஒருவராக தெல்சா மதிக்கப்பட்டார்.[4] இவரது தொடக்கப் பணிகள் தற்கால மின் பொறியியலுக்கு முன்னோடியாக அமைந்ததுடன், இவருடைய பல கண்டுபிடிப்புக்கள், திருப்பங்களை உண்டாக்குமளவு முக்கியத்துவம் பெற்றவையாக அமைந்தன[5][6]. அக்கால அமெரிக்காவில், தெல்சாவின் புகழ் வேறெந்த கண்டுபிடிப்பாளர் அல்லது அறிவியலாளரின் புகழுக்குக் குறையாது இருந்தது. எனினும் இவரது கிறுக்குத்தனமான போக்கும்; அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து இவரது நம்பத்தகாத கூற்றுக்களும்; இவர் ஒரு பைத்திய அறிவியலாளர் என்னும் கருத்தை ஏற்படுத்தியது.[7][8]
நிகோலா டெஸ்லாவின் காப்புரிமைக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி, நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து உயர் அழுத்த மின்சாரம் தயார் செய்து பல மைல்கல் தூரத்திற்கு அதைக் கொண்டு செல்ல முடிந்தது. அமெரிக்கத் தொழிற்துறை வளர்ச்சியில் இவருக்குப் பெரும் பங்குண்டு. எக்ஸ்-ரே கதிர், டெஸ்லா சுருள் ஆகியவற்றில் இவர் செய்த கருவிகள் இன்றும் பயன்படுகின்றன.
சுவாமி விவேகானந்தரும் நிகோலா டெஸ்லாவும்
[தொகு]வேதாந்தக் கொள்கைகளின் முடிவுகள் வியக்கத்தக்க அளவில் பகுத்தறிவுக்கு ஒத்திருப்பதாக சுவாமி விவேகானந்தரிடம் கூறிய அப்போதைய தலைசிறந்த விஞ்ஞானிகளில் நிகோலா டெஸ்லாவும் ஒருவர். நிகோலா டெஸ்லா உட்கார இடம் இல்லாமல் மணிக்கணக்காக நின்று கொண்டே சுவாமி விவேகானந்தரின் உரையைக் கேட்டவர். 1896 பிப்ரவரி 5-இல் தொழிலதிபர் ஆஸ்டின் என்பவர் இல்லத்தில் சுவாமி விவேகானந்தரும் டெஸ்லாவும் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது சுவாமிஜியின் பக்தையும், பிரெஞ்சு நடிகையுமான சாரா பென்ஹர்ட்டும் உடனிருந்தார்.
அணு என்பது திடமான, உடைக்க முடியாத , பிரிக்க முடியாத ஒன்று என நியூட்டன் கூறியதையே 19-ஆம் நூற்றாண்டு அறிஞர்கள் நம்பியிருந்தார்கள்.
ஆனால் பருப்பொருளும் ஆற்றலும் அடிப்படையில் ஒன்றே; ஒன்றை மற்றொன்றாக மாற்ற முடியும் என்ற வேதாந்தக் கருத்தை நிகோலா முதலில் நம்பாமல் இருந்த போதிலும் தனது இறுதிக்காலத்தில், பருப்பொருளை பொருண்மைச் சக்தியாக மாற்ற இயலும் என்ற சுவாமிஜியின் கருத்தை ஏற்று, தமது முடிவைப் பிரசுரித்தார். அந்தக் கட்டுரையில் 40 ஆண்டுகளுக்கு முன் சுவாமிஜி பயன்படுத்திய அதே சமஸ்கிருத வார்த்தைகளை நினைவு கூர்ந்து எழுதியிருந்தார்.
மிகப்பெரும் விஞ்ஞானியான டெஸ்லா, சுவாமிஜியின் சொற்பொழிவுக் கருத்துகளால் ஆராய்ச்சிப்பூர்வமாகத் தூண்டப்பட்டாலும் அதை உடனடியாக சுவாமிஜியின் முன் நிரூபித்துக் காட்ட இயலவில்லை. எனினும் பிறகு ஐன்ஸ்டீன் என்ற விஞ்ஞானியால் அது (Mass Energy) நிரூபிக்கப்பட்டது.
நோபல் பரிசும் தெஸ்லாவும்
[தொகு]மார்க்கோனிக்கு 1909-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்ட பிறகு, 1915-ம் ஆண்டு தாமசு ஆல்வா எடிசன் மற்றும் தெஸ்லாவிற்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு, பகிர்ந்தளிப்பதாக வெளியான தகவல் மிகப்பெரிய பிணக்குகளை உருவாக்கியது. இருவருக்குமான பகைமையையும் இது வளர்த்தது, இருவரும் அப்பரிசினை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை மற்றும் பரிசினை பகிர்ந்து கொள்ளவும் மறுத்துவிட்டனர்.[9]
இச்சர்ச்சை ஏற்பட்டு சில ஆண்டுகள் கழித்து, தெஸ்லாவுக்கோ அல்லது எடிசனுக்கோ அப்பரிசு வழங்கப்படவில்லை.[10] இதற்கு முன்பு 1912-ம் ஆண்டு, இவருடைய உயர் மின்னழுத்த உயர் அதிர்வெண் ஒத்ததிர்வு மின்மாற்றிகள் பயன்படுத்தி வடிவமைப்பு சுற்றுகளுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக புரளி வெளியானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jonnes 2004, ப. 355.
- ↑ "Electrical pioneer Tesla honoured". BBC News. 10 ஜூலை 2006. http://news.bbc.co.uk/2/hi/europe/5167054.stm. பார்த்த நாள்: 15 ஆகஸ்ட் 2009.
- ↑ "Nikola Tesla". In 1894, Tesla erects his first small radio station in his laboratory and begins his experiments in radio technology. MIT. Archived from the original on 2013-09-03. பார்க்கப்பட்ட நாள் 2012-05-19.
- ↑ "Nikola Tesla – electrical engineer and inventor". Serbian Unity Congress. Archived from the original on 2008-02-19. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகஸ்ட் 2009.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Valone, Thomas (2002). Harnessing the Wheelwork of Nature: Tesla's Science of Energy. Adventures Unlimited Press. p. 102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-931882-04-5. பார்க்கப்பட்ட நாள் 21 நவம்பர் 2010.
- ↑ "Tesla- Master of Lightning". Such a device[Tesla coil] first appeared in Tesla's US patent No. 454,622 (1891), for use in new, more efficient lighting systems. PBS.
- ↑ A. Bowdoin Van Riper, A. Van, A Biographical Encyclopedia of Scientists and Inventors in American Film and TV since 1930, page 130
- ↑ Tyler Hamilton, Mad Like Tesla: Underdog Inventors and Their Relentless Pursuit of Clean Energy, page 14
- ↑ Research, Health (1996-09). Nikola Tesla Research. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7873-0404-2. பார்க்கப்பட்ட நாள் 28 November 2010.
{{cite book}}
: Check date values in:|date=
(help) - ↑ Seifer 2001, ப. 378–380
- Tesla's Wardenclyffe Science Center Plaque [1]
- NikolaTesla.fr பரணிடப்பட்டது 2011-10-01 at the வந்தவழி இயந்திரம் - More than 1,000 documents on Tesla
வெளி இணைப்புகள்
[தொகு]- Sri Ramakrishna Vijayam Special issue – January 2014 (கட்டுரை : விவேகானந்தருடன் ஒரு விஞ்ஞானி - நா.சுப்பிரமணியன்) பரணிடப்பட்டது 2016-11-06 at the வந்தவழி இயந்திரம்
- இன்று கூகிளில் தெரிவது என்ன? பரணிடப்பட்டது 2009-07-12 at the வந்தவழி இயந்திரம், தமிழ்மீடியா, சூலை 10, 2009
- The Nikola Tesla Museum பரணிடப்பட்டது 2011-07-20 at the வந்தவழி இயந்திரம்
- Original Tesla's patents presented in documentary movie by Museum Nikola Tesla.
- Nikola Tesla Niagara Falls Power
- Tesla Resource Surrounding the PBS "Master of Lightning" documentary
- World of Scientific Biography: Nikola Tesla, by Wolfram Research
- Nikola Tesla Page
- Tesla's grand-nephew William H. Terbo's site
- Nikola Tesla, Forgotten American Scientist
- Tesla Wardenclyffe Project, Long Island New York. Mission is the adaptive reuse of the Wardenclyffe Tower|Wardenclyffe laboratory building.
- Nikola Tesla's Father: Milutin Tesla பரணிடப்பட்டது 2011-07-24 at the வந்தவழி இயந்திரம்
- Tesla: The European Years பரணிடப்பட்டது 2011-07-24 at the வந்தவழி இயந்திரம்
- Jim Bieberich's The Complete Nikola Tesla U.S. Patent Collection
- Online archive of many of Tesla's writings, articles and published papers
- Seifer, Marc J., and Michael Behar, Electric Mind, Wired Magazine, October 1998.
- குட்டன்பேர்க் திட்டத்தில் நிக்கோலா தெஸ்லா இன் படைப்புகள்
- Nikola Tesla's FBI file in pdf
- Nikola Tesla Complete Patents in pdf
- Kenneth M. Swezey Papers பரணிடப்பட்டது 2012-05-05 at the வந்தவழி இயந்திரம், 1891–1982, Archives Center, National Museum of American History, archival resources.
- The Case Files of Nikola Tesla பரணிடப்பட்டது 2011-08-31 at the வந்தவழி இயந்திரம், Franklin Institute
- Booknotes interview with Jill Jonnes on Empires of Light: Edison, Tesla, Westinghouse and the Race to Electrify the World, October 26, 2003. பரணிடப்பட்டது 2011-11-15 at the வந்தவழி இயந்திரம்