நிக்கல் டெட்ராபுளோரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
நிக்கல் டெட்ராபுளோரைடு, நிக்கல்(IV) புளோரைடு, நிக்கல்(4+) புளோரைடு, டெட்ராபுளோரிடோநிக்கல்
| |
வேறு பெயர்கள்
நிக்கல்{IV} புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
60765-13-1 ![]() | |
ChEBI | CHEBI:30392 |
Gmelin Reference
|
1565370 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
NiF4 | |
தோற்றம் | பழுப்பு நிற திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நிக்கல் டெட்ராபுளோரைடு (Nickel tetrafluoride) என்பது NiF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிக்கலும் புளோரினும் சேர்ந்து வினைபுரிவதால் இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]
தயாரிப்பு
[தொகு](XeF5)2NiF6 சேர்மத்துடன் ஆர்சனிக்கு பெண்டாபுளோரைடு (AsF5) அல்லது பொட்டாசியம் அறுபுளோரோநிக்கலேட்டு(IV) சேர்மத்துடன் போரான் முப்புளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நிக்கல் டெட்ராபுளோரைடு உருவாகிறது.[3][4]
இயற்பியல் பண்புகள்
[தொகு]நிக்கல் டெட்ராபுளோரைடு ஒரு பழுப்பு நிற திடப்பொருளாக உருவாகிறது. NiF3 ஐ உருவாக்குவதற்கு –65° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் F2 இழந்து நிலைப்புத்தன்மையற்றதாகி NiF3 சேர்மத்தை கொடுக்கிறது.[3]
வேதிப் பண்புகள்
[தொகு]நிக்கல் டெட்ராபுளோரைடு மிகவும் வலிமையான ஓர் ஆக்சிசனேற்றியாகும். நீரற்ற HF இல் லூயிசு அமிலங்களின் முன்னிலையில் ஆக்சிசனேற்ற பண்புகள் மேம்படுத்தப்படுகின்றன. ஆக்சிசனேற்ற சக்தியின் அடிப்படையில், இது கிரிப்டான் இருபுளோரைடுடன் ஒப்பிடத்தக்கதாக உள்ளது. புரோமின் பெண்டாபுளோரைடை அறுபுளோரோபுரோம்(VII) நேர்மின் அயனியாகவும், பொட்டாசியம் அறுபுளோரோபிளாட்டினேட்டு(V) சேர்மத்தை பிளாட்டினம்(VI) புளோரைடாகவும் ஆக்சிசனேற்றம் செய்கிறது.[5]
நிக்கல் டெட்ராபுளோரைடு சேர்மம் நிலையற்ற கிரிப்டான் இருபுளோரைடுக்கு மாற்றாக கனிமத் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது கிடைக்கக்கூடிய மற்றும் நிலையான பொட்டாசியம் அறுபுளோரோநிகெலேட்டு(IV) சேர்மத்திலிருந்து மிக எளிதாக ஒருங்கிணைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Li, Lin; Sakr, Ahmed K.; Schlöder, Tobias; Klein, Siri; Beckers, Helmut; Kitsaras, Marios-Petros; Snelling, Howard V.; Young, Nigel A. et al. (15 March 2021). "Searching for Monomeric Nickel Tetrafluoride: Unravelling Infrared Matrix Isolation Spectra of Higher Nickel Fluorides". Angewandte Chemie 133 (12): 6461–6464. doi:10.1002/anie.202015501. பப்மெட்:33300240.
- ↑ "nickel tetrafluoride (CHEBI:30392)". ebi.ac.uk. Retrieved 13 February 2024.
- ↑ 3.0 3.1 Macintyre, Jane E. (5 December 1996). Dictionary of Inorganic Compounds, Supplement 4 (in ஆங்கிலம்). CRC Press. p. 200. ISBN 978-0-412-75020-5. Retrieved 13 February 2024.
- ↑ Zemva, B.; Lutar, K.; Chacon, L.; Fele-Beuermann, M.; Allman, J.; Shen, C.; Bartlett, N. (October 1995). "Thermodynamically Unstable Fluorides of Nickel: NiF4 and NiF3 Syntheses and Some Properties" (in en). Journal of the American Chemical Society 117 (40): 10025–10034. doi:10.1021/ja00145a013. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/10.1021/ja00145a013. பார்த்த நாள்: 13 February 2024.
- ↑ Haupt, Axel (22 March 2021). Organic and Inorganic Fluorine Chemistry: Methods and Applications (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. ISBN 978-3-11-065950-4. Retrieved 13 February 2024.