நால்தார் பனிச்சறுக்கு மைதானம்
நால்தார் பனிச்சறுக்கு மைதானம் | |
---|---|
ஆள்கூறுகள்: 36°09′55″N 74°10′42″E / 36.16528°N 74.17833°E |
நால்டார் பனிச் சறுக்கு மைதானம் (Naltar ski resort) என்பது பாக்கித்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் மாகாணத்தில் உள்ள நல்தார் பள்ளத்தாக்கின் காரகோரம் வரம்பில் 2,950 மீட்டர் (9,680 அடி) உயரத்தில் அமைந்துள்ள ஒரு பனிச்சறுக்கு மைதானமாகும்.[1] [2] கில்கித் நகரத்திலிருந்து வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் இந்த மைதானம் அமைந்துள்ளது. இது பாக்கித்தானின் பனிச்சறுக்கு அமைப்பிற்கும் பாக்கித்தான் தேசிய பனிச் சறுக்கு போட்டிகளுக்குமான முக்கிய இடமாகவும் செயல்படுகிறது. [3] இந்த அமைப்பு 2016இல் காரகோரம் கோப்பைக்கானப் போட்டியை நடத்தியது. [4]
வசதிகள்
[தொகு]நல்தார் பாக்கித்தானின் மிகப் பழமையான பனிச்சறுக்கு மைதானமாகும். [5] இருப்பினும், மலம் ஜப்பா பனிச்சறுக்கு மைதானத்தை விட ஒப்பீட்டளவில் குறைவாக அறியப்பட்ட மற்றும் வளர்ச்சியடையவில்லை. கில்கித்திலிருந்து நால்தார் செல்லும் சாலையின் மோசமான நிலையே இதன் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது. நிலவரப்படி, பனிச்சறுக்கு ஆர்வலர்கள் 4 சக்கர வாகனத்தில் பயணம் செய்தால்தான் விரைவில் இவ்விடத்தை விரைவில் அடைய முடியும். [6] 2015 ஆம் ஆண்டில், ஒரு மின்தூக்கி நாற்காலி கட்டப்பட்டது. [7] கில்கித்-நால்தார் சாலையை மீண்டும் கட்டமைக்கும் பணியும் முன்மொழியப்பட்டது.
சான்றுகள்
[தொகு]- ↑ "Naltar Valley Ski Resort Guide, Location Map & Naltar Valley ski holiday accommodation".
- ↑ "Ski resort Naltar - Skiing Naltar".
- ↑ "National Ski Championship begins in Naltar". 10 February 2015.
- ↑ "Karakoram Alpine Ski Cup: Ukraine, Turkey confirm participation - The Express Tribune". 18 January 2016.
- ↑ "A lift to Naltar - TNS - The News on Sunday". Archived from the original on 2017-02-22. பார்க்கப்பட்ட நாள் 2022-10-25.
- ↑ "National Ski Championship begins in Naltar". 10 February 2015."National Ski Championship begins in Naltar". 10 February 2015.
- ↑ "Norway, Philippines envoys killed in helicopter crash, army claims no terror attack". 8 May 2015.