உள்ளடக்கத்துக்குச் செல்

நாம்தாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாம்தாரி
விஸ்வ நாம்தாரிகள் சங்கம்
புனைப்பெயர்குகா
உருவாக்கம்ஏப்ரல் 1812
நிறுவனர்பாலக் சிங்
நிறுவப்பட்ட இடம்அரோன் ஆற்றாங்கரை
வகைசீக்கியப் பிரிவு
தலைமையகம்பாய்னி சாகிப், லூதியானா, பஞ்சாப், இந்தியா
உறுப்பினர்கள்
500,000-1 மில்லியன், ராம்கர்கியா, ஜாட், அரோரா மற்றும் மழபி சாதியினர்[1]
ஆட்சி மொழி
பஞ்சாபி
தற்போதைய குரு
குரு உதய் சிங்[2]
முக்கிய நபர்கள்
எச். எஸ். ஹன்ஸ்பால் (நாம்தாரி தர்பார் தலைவர்)
மைய அமைப்பு
சிறீ பாய்னி சாகிப், லூதியானா,
விலகியோர்பன்னாட்டு நாம்தாரிகள் சங்கம்
வலைத்தளம்https://sribhainisahib.com/

நாம்தாரிகள் (Namdharis) (குர்முகி: ਨਾਮਧਾਰੀ; தேவநாகரி: नामधारी) என்பதற்கு குரு அல்லது இறைவனின் பெயர்களை நாம ஜெபம் செய்பவர்கள் என்று பொருள். சீக்கியத்தில் நாம ஜெபம் செய்பவர்களை குகா என்று அழைப்பர்.[3]

சீக்கியத்தின் ஒரு பிரிவினரான நாம்தாரி பிரிவினர், சீக்கியத்தின் பெரும்பான்மையாக பின்பற்றும் தத் கல்சா பிரிவினர் குரு கோவிந்த் சிங் (1666–1708) வரையான 10 குருக்களை மட்டுமே போற்றி வணங்குவர். ஆனால் நாம்தாரி சீக்கியப் பிரிவினர், பாலக் சிங் (1797–1862) 11வது குருவாக போற்றினர்.. நாம்தாரிகள் குரு நானக் முதல் தற்போதைய குரு உதய் சிங் வரை போற்றுகிறார்கள். [4] இவர்களின் 12 குரு ராம் சிங் குகா (1816–1885), நாம்தாரிகளின் மையமான பாய்னி சாகிப்பை லூதியானாவிற்கு மாற்றினார்.[5]

பெயர்கள்

[தொகு]

இப்பிரிவு சீக்கியர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் நாம்தாரி அல்லது குகா என இட்டுக்கொள்வர்.[6]

கருத்தியல்

[தொகு]

பெரும்பான்மையாக சீக்கிய குருக்கள் 10 பேர் ஆவார். அவர்களில் இறுதி குரு குரு கோவிந்த் சிங் ஆவார். ஆனால் நாம்தாரி சீக்கியப் பிரிவினர் இக்கருத்தை ஏற்காது, தங்களது குரு பரம்பரை தொடர்ந்து வருவதாக கருதுகிறார்கள்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Research Directorate, Immigration and Refugee Board, Canada (1 October 1998). India: The Namdhari sect of Sikhism, including its practices and beliefs, and whether the Punjab police seeks in particular its male members. Canada: Immigration and Refugee Board of Canada.
  2. Uday Singh (religious leader)
  3. Parkash Singh Badal : chief minister of Punjab. S. R. Bakshi, Sita Ram Sharma, S. Gajnani. New Delhi: APH Publishing. 1998. p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7024-987-2. இணையக் கணினி நூலக மைய எண் 55522775.{{cite book}}: CS1 maint: others (link)
  4. Gill, Davinder Singh (1998). Nanded Toun Baad Dasam Guru. Punjab: Capco Printing. pp. 121–123.
  5. "Ram Singh Philosopher". Encyclopædia Britannica. January 2024.
  6. Louis E. Fenech; W. H. McLeod (2014). Historical Dictionary of Sikhism. Rowman & Littlefield. pp. 219–220. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4422-3601-1.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாம்தாரி&oldid=4052868" இலிருந்து மீள்விக்கப்பட்டது