நானே வருவேன்
நானே வருவேன் | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | சிறீபிரியா |
தயாரிப்பு | கிரிஜா |
திரைக்கதை | ஸ்ரீபிரியா |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ரகுமான் ஸ்ரீபிரியா |
ஒளிப்பதிவு | கே. பி. தயாளன் பிரசாந்த் பாபு (ஒளிப்பதிவு இயக்குநர்) |
படத்தொகுப்பு | எம். வெள்ளைசாமி |
கலையகம் | ஸ்ரீ சாமுண்டீஸ்வரி |
விநியோகம் | ஸ்ரீ ஜனனி எண்டர்பிரைசஸ்[1] |
வெளியீடு | 27 பெப்ரவரி 1992 |
ஓட்டம் | 135 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நானே வருவேன் (Naane Varuven) என்பது 1992 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சிறீபிரியா இயக்கிய இப்படத்தை கிரிஜா தயாரித்தார். இப்படத்தில் ரகுமான், ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருந்தனர். சசிகலா, வாகை சந்திரசேகர், வடிவுக்கரசி, கௌதமி, இராதிகா ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1979 இல் வெளிவந்த நீயா? என்ற திரைப்படத்தின் ஆன்மீகத் தொடர்ச்சியாகும். [2]இத்திரைப்படம் 1992 பெப்ரவரி 27 அன்று வெளியிடப்பட்டது.[3]
நடிகர்கள்
[தொகு]- ரகுமான் - இராஜா
- சிறீபிரியா - நாகராணி
- சசிகலா - பிரியா
- வாகை சந்திரசேகர் - சத்யா
- வடிவுக்கரசி - இலட்சமி
- கௌதமி - தங்கம்
- இராதிகா - மருத்துவர் இராதிகா
- இரா. சு. மனோகர் - துறவி - விருந்தினர் தோற்றம்
- சின்னி ஜெயந்த் - துறவியின் உதவியாளர்
- எஸ். எஸ். சந்திரன் - துறவியின் உதவியாளர்
- பி. ஆர். வரலட்சுமி - சத்யாவின் தாய்
- கோகிலா - ஜிப்சி
- ரம்யா கிருஷ்ணன்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[4]
பாடல் | பாடகர்/கள் | வரிகள் | நீளம் |
---|---|---|---|
"ஒரே ஜீவன் ஒன்றே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் கே. எஸ். சித்ரா | பஞ்சு அருணாசலம் | 05:05 |
"பச்சமல பெண்ணு நான்" | கே. எஸ். சித்ரா | வாலி | 04:51 |
"போகாதே என்னைத் தாண்டி" | கே. எஸ். சித்ரா | 04:41 | |
"ஒரே ஜீவன் ஒன்றே" – பெண்குரல் | கே. எஸ். சித்ரா | பஞ்சு அருணாசலம் | 04:59 |
"கேட்டேனம்மா உன் கோயில்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | வாலி | 04:06 |
"ஆரம்பம் ஆகட்டும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 05:03 |
வரவேற்பு
[தொகு]தி இந்தியன் எக்ஸ்பிரஸின் என். கிருஷ்ணசாமி இவ்வாறு எழுதியிருந்தார். "கதைக்களம் ஒரு புராணப் படத்தைப் போல சிறிது நேரம் நகர்ந்தாலும், அது அப்பாதையை விட்டு வெளியேறி திரைக்கதையின் வியத்தகு உயரங்களை மேம்படுத்துவதற்காக" சிறந்த தொழில்நுட்ப மதிப்புகளை உருவாக்குகிறது. (புகைப்படம்:பிரசாத் பாபு) பின்னணி இசை (சங்கர் கணேஷ்) திரைக்கதை (ஸ்ரீபிரியா) .[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nane Varuven". இந்தியன் எக்சுபிரசு: pp. 8. 28 February 1992. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19920228&printsec=frontpage&hl=en.
- ↑ 2.0 2.1 "Naane Varuvaen". https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19920313&printsec=frontpage&hl=en.
- ↑ "Naane Varuven (1992)". Venpura. Archived from the original on 3 June 2016. பார்க்கப்பட்ட நாள் 9 May 2016.
- ↑ "Naane Varuven (1990) [sic]". Raaga.com. Archived from the original on 27 August 2022. பார்க்கப்பட்ட நாள் 28 November 2023.