நாதம்
நாதம் என்பது இசைக்கு மிக முக்கியமானது என்பதுடன் இசைக்கு ஆதாரமானதும் ஆகும். காதிற்கு இனிமையைத் தரும் த்வனி, நாதம் என்று அழைக்கப்படும். நாதத்தினிலிருந்து சுருதிகளும், சுருதிகளிலிருந்து ஸ்வரங்களும், ஸ்வரங்களிலிருந்து இராகங்களும் உற்பத்தியாகின்றன.[1][2][3]
நாதத்தின் வகைகள்
[தொகு]நாதம் இரு வகைப்படும்.
- ஆகத நாதம்.
- அனாகத நாதம்.
ஆகத நாதம்
[தொகு]மனிதனுடைய முயற்சியால் உற்பத்தியாக்கப்படும் நாதம் ஆகத நாதம் ஆகும். நாம் கேட்கும் சங்கீதம், பாடும் சங்கீதம், வாத்தியங்களில் வாசிக்கப்படும் சங்கீதம் முதலியவைகள் எல்லாம் ஆகத நாதத்தைச் சேர்ந்தவையாகும்.
மேலும் இந்நாதம் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும்,
- ப்ராணி சம்பவ நாதம்
அதாவது உயிருள்ள தேகத்திலிருந்து உற்பத்தியாகும் நாதம். உ+ம் : வாய்ப்பாட்டு
- அப்ராணி சம்பவ நாதம்
அதாவது வஸ்துகளாகிய வீணை போன்ற தந்தி வாத்தியங்களினின்று உற்பத்தியாகும் நாதம்.
- உபய சம்பவ நாதம்
அதாவது உயிருள்ள பிராணிகளின் ஸஹாயத்தைக் கொண்டு மூங்கிலைப் போன்ற வஸ்துக்களில் உற்பத்தியாக்கப்படும் நாதம். கட்டைகளைக் கொண்டு செய்யப்பட்ட குழல், நாதசுவரம் போன்ற கருவிகளினின்று உண்டாக்கப்படும் நாதம் இதற்கு உதாரணமாகும்
அனாகத நாதம்
[தொகு]மனிதனுடைய முயற்சியின்றி இயற்கையிலேயே கேட்கப்படும் நாதம். இது யோகிகளாலும், சித்தர்களாலும் மட்டும் அறியக்கூடியது. தியாகராஜ சுவாமிகள் ஒரு சிறந்த நாத யோகியாக கருதப்படுகிறார். அனாகத நாதத்தை உணர்ந்து தனது அனுபவங்களை "ஸ்வர ராக ஸூதாரஸ" போன்ற கிருதிகளில் வெளியிட்டிருக்கின்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Drabkin, William (2001). The new Grove dictionary of music and musicians (in ஆங்கிலம்). Vol. 17. Stanley Sadie, John Tyrrell (2nd ed.). New York: Grove. pp. 227–228. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56159-239-0. இணையக் கணினி நூலக மைய எண் 44391762.
- ↑ Nattiez, Jean-Jacques (1990). Music and discourse : toward a semiology of music. Princeton, N.J.: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-09136-6. இணையக் கணினி நூலக மைய எண் 21524730.
- ↑ Both cited in Nattiez, Jean-Jacques (1990). Music and Discourse: Toward a Semiology of Music (Musicologie générale et sémiologue, 1987). Translated by Carolyn Abbate. Princeton, NJ: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0691091366/பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0691027145.