நாகர்கர்னூல் மாவட்டம்
நாகர்கர்னூல்
| |
---|---|
தெலங்காணாவில் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | படிமம்:Flag of the Government of Telangana.svg தெலங்காணா |
நிறுவப்பட்டது | 11 அக்டோபர் 2016 |
தலைமையகம் | நாகர்கர்னூல் |
மண்டலங்கள் | 20 |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | பி உதய் குமார் இ.ஆ.ப. |
• மக்களவைத் தொகுதிகள் | 1 (நாகர்கர்னூல்) |
• பேரவை தொகுதிகள் | 4 (நாகர்கர்னூல், அச்சம்பேட்டை, கல்வாகுர்த்தி, கொல்லப்பூர்) |
பரப்பளவு | |
• மொத்தம் | 6,545.00 km2 (2,527.04 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 8,93,308 |
• அடர்த்தி | 140/km2 (350/sq mi) |
மக்கள் தொகையியல் | |
• படிப்பறிவு | 54.38 |
• பாலின விகிதம் | 968:1000 |
நேர வலயம் | ஒசநே+05:30 (இ.சீ.நே.) |
வாகனப் பதிவு | TS–31[1] |
இணையதளம் | nagarkurnool |
நாகர்கர்னூல் மாவட்டம் (Nagarkurnool district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2][3] மகபூப்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு நாகர்கர்னூல் மாவட்டம், அக்டோபர், 2016-இல் புதிதாக நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் நாகர்கர்னூல் ஆகும்.
மாவட்ட எல்லைகள்
[தொகு]6545 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட நாகர்கர்னூல் மாவட்டத்தின் வடக்கில் ரங்காரெட்டி மாவட்டம், கிழக்கில் நல்கொண்டா மாவட்டம், மேற்கிலும், தென்மேற்கில் வனபர்த்தி மாவட்டம், வடமேற்கில் மகபூப்நகர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மக்கள் தொகையியல்
[தொகு]6545 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட[4] நாகர்கர்னூல் மாவட்டத்தின் மக்கள் தொகை, 2011-ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 8,93,308 ஆக உள்ளது.[4]
மாவட்ட நிர்வாகம்
[தொகு]நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டை, நாகர்கர்னூல் மற்றும் கல்வகுர்த்தி என மூன்று வருவாய் கோட்டங்களையும், 20 மண்டல்களையும் கொண்டுள்ளது. மேலும் இம்மாவட்டம் 349 வருவாய் கிராமங்களும், 301 கிராமப் பஞ்சாயத்துகளும், 16 மண்டல மக்கள் மன்றங்களும், நான்கு நகராட்சிகளும் கொண்டுள்ளது.[5]
புதிதாக நிறுவப்பட்ட நாகர்கர்னூல் மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக இ. சிறீதர் நியமிக்கப்பட்டுள்ளார். [6]
மண்டல்கள்
[தொகு]நாகர்கர்னூல் மாவட்டத்தின் 20 மண்டல்களின் விவரம் :
# | மண்டலங்கள் |
---|---|
1 | நாகர்கர்னூல் |
2 | தடூர் |
3 | பெண்டலவெள்ளி |
4 | கோலாப்பூர் |
5 | கொடையிர் |
6 | கல்வகுர்த்தி |
7 | ஊர்கொண்டா |
8 | சரக்கொண்டா |
9 | வாங்கூர் |
10 | வேல்தந்தா |
11 | அச்சம்பேட்டை |
12 | உப்புனூந்தலா |
13 | அம்ரபாத் |
14 | பிஜினபள்ளி |
15 | தெல்காபள்ளி |
16 | திம்மாஜிபேட்டை |
17 | பெத்தகொத்தப்ள்ளி |
18 | பல்மூர் |
19 | பதரா |
20 | லிங்கல் |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/.
- ↑ "Nagarkurnool district" (PDF). Chief Commissioner of Land Administration. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.
- ↑ "New districts map". newdistrictsformation.telangana.gov.in. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 4.0 4.1 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225064351/http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016.
- ↑ "GO 243 Reorganization of Nagarkurnool District Final Notification". Archived from the original on 2017-06-01. பார்க்கப்பட்ட நாள் 2017-02-28.
- ↑ "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016.