நரேசு உத்தம் படேல்
நரேசு உத்தம் படேல் | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூன் 2024 | |
முன்னையவர் | நிரஞ்சன் ஜோதி |
தொகுதி | பதேபூர் |
மாநிலத் தலைவர்-சமாஜ்வாதி கட்சி-உத்தரப் பிரதேசம் | |
பதவியில் 1 சனவரி 2017 – 6 மே 2024 | |
முன்னையவர் | சிவபால் சிங் யாதவ் |
பின்னவர் | சியாம்லால் பால் |
சட்டமேலவை உறுப்பினர் உத்தரப் பிரதேசம் | |
பதவியில் 6 மே 2006 – 5 மே 2024 | |
தொகுதி | தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் |
சட்டமன்ற உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டப் பேரவை[1] | |
பதவியில் 2 திசம்பர் 1989 – 4 ஏப்ரல் 1991 | |
முன்னையவர் | பிரகாசு நரைன் |
பின்னவர் | சத்ரா பால் வர்மா |
தொகுதி | ஜகானாபாத் |
துணை அமைச்சர் உத்தரப்பிரதேச அரசு[2] | |
பதவியில் 5 திசம்பர் 1989 – 24 சூன் 1991 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 சனவரி 1956 ஜகானாபாத், பதேபூர் மாவட்டம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி (1992-முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | ஜனதா தளம் (1989-1992) |
பெற்றோர் | ரோசன் லால் |
வாழிடம்(s) | கான்பூர், உத்தரப் பிரதேசம் |
முன்னாள் கல்லூரி | பி. பி. என். பட்டக் கல்லூரி, சத்ரபதி ஷாகுஜி மகராஜ் பல்கலைக்கழகம் (இளங்கலை, முதுகலை) டி. ஏ. வி. சட்டக் கல்லூரி, சத்ரபதி ஷாகுஜி மகராஜ் பல்கலைக்கழகம் (இளநிலை சட்டம்)[3] |
தொழில் | அரசியல்வாதி |
நரேசு உத்தம் படேல் (பிறப்பு சனவரி 10,1956) என்பவர் இந்திய அரசியல்வாதியும், சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார்.[4][5]
அரசியல்
[தொகு]1989ஆம் ஆண்டில் ஜனதா தளம் வேட்பாளராகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படேல், சமாஜ்வாதி கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் உள்ளார். தற்போது, இவர் சமாஜ்வாதி கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைவராகவும், கட்சியின் மாநிலப் பிரிவில் மேனாள் முதலமைச்சர் அகிலேசு யாதவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலும் உள்ளார். இவரது தூய்மையான அரசியல், கல்வி பின்னணியுடன் (கான்பூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்), இவர் தன்னைச் சேர்ந்த சமூகமான மேலாதிக்க குர்மி சாதி வாக்காளர்களிடையே பரந்த பின்தொடர்பவர்களுடன் அடிமட்டத் தலைவராக நற்பெயரைப் பெற்றுள்ளார்.[6]
இத்தகைய முக்கியமான பதவிக்கு இவர் உயர்த்தப்பட்டது கட்சியின் பிம்பத்தை மாற்ற உதவும் புதிய உள்ளடக்கிய நிரலைக் குறிக்கிறது.[7] 1989 முதல் 1991 வரை முதல் முலாயம் சிங் யாதவ் அரசில் அமைச்சராகவும், மூன்று முறை உ. பி. சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினராகவும், ஜானேசுவர் மிசுரா அறக்கட்டளையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். உத்தரப் பிரதேச மேனாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சமாஜ்வாதி கட்சி உத்தரப் பிரதேச மாநிலத் தலைவராக இருந்தபோது இவர் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார், இருப்பினும் சிவ்பால் சிங் யாதவ் உத்தரப் பிரதேச சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவராக ஆனபோது, இவர் நீக்கப்பட்டார். இவர் உ. பி. யின் குர்மி இபிவ சாதியைச் சேர்ந்தவர். மேலும் முலாயம் சிங் யாதவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார்.[8][9]
சமாஜ்வாதி கட்சி நிறுவன சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் விசுவாசியாக இருப்பதால், 2017 மாநிலத் தேர்தல்களுக்கான வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.[10][11]
மக்களவை உறுப்பினராக
[தொகு]நரேசு உத்தம் படேல் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் பதேபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தற்பொழுது உள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "दसवीं विधान सभा के सदस्य (Members of the Tenth Legislative Assembly)" (in இந்தி). Archived from the original on 2017-03-26. பார்க்கப்பட்ட நாள் 2024-01-18.
- ↑ "उप्र चुनाव : सपा प्रदेश अध्यक्ष उत्तम की प्रतिष्ठा दांव पर (UP elections: SP state president Uttam's reputation at stake)" (in இந்தி). Archived from the original on 2017-02-06.
- ↑ Form in Hindi
- ↑ "Samajwadi Party :: Official Website". Samajwadiparty.in. Archived from the original on 14 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 July 2016.
- ↑ "Shri Naresh Chandra Uttam(Samajwadi Party(SP)):(ELECTED FROM UP LEGISLATIVE ASSEMBLY) - Affidavit Information of Candidate". myneta.info.
- ↑ "Fateh(pur) for SP's Kurmi leader who upset Niranjan Jyoti 's applecart". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 7 June 2024.
- ↑ "कल गुलजार आज उजाड़ (Buzzing yesterday, desolate today)". Patrika.com. 28 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2024-01-18.
- ↑ "नरेश उत्तम सपा के पिछड़ा वर्ग प्रकोष्ठ के अध्यक्ष | Hindi News Portal | Hindi News | Online Hindi News".
- ↑ "Citadel Unchallenged". Outlookindia.com. பார்க்கப்பட்ட நாள் 16 July 2016.
- ↑ "विकास के लिए एकजुट हो पिछड़ा वर्ग : नरेश उत्तम -". Jagran.
- ↑ "UP assembly elections 2017: SP looking for candidates who can woo Muslim voters in Agra : Uttar Pradesh, News - India Today". Indiatoday.intoday.in. 25 July 2015. பார்க்கப்பட்ட நாள் 16 July 2016.