நயாகட்
நயாகட்
நயாகர் | |
---|---|
![]() ஜெகந்நாதர் கோயில், நயாகட் | |
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நயாகட் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 20°07′37″N 85°06′25″E / 20.127°N 85.107°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
மாவட்டம் | நயாகட் மாவட்டம் |
ஏற்றம் | 178 m (584 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 17,030 |
மொழி | |
• அலுவல் மொழி | ஒடியா மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 752-XXX |
தொலைபேசி குறியீடு | 06753 |
வாகனப் பதிவு | OR-25 / OD-25 |
அருகமைந்த நகரம் | குர்தா |
மக்களவை தொகுதி | பூரி மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | 4 |
இணையதளம் | https://nayagarh.odisha.gov.in/ |

நயாகட் (Nayagarh), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள நயாகட மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரானபுவனேசுவரத்திற்கு தென்மேற்கே 83.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் பூரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டது. இது கடல்மட்டத்திற்கு 178 மீட்டர் (584 அடி) உயரத்தில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13 வார்டுகளும், குடியிருப்புகளும் கொண்ட நகரத்தின் மக்கள் தொகை 17,030 ஆகும். அதில் 9,000 ஆண்கள் மற்றும் 8,030 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8.88 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 979 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 93.33 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 9.20 % மற்றும் 1.22 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 98.16%, இசுலாமியர் 1.17%, கிறித்தவர்கள் 0.28% மற்றும் பிற சமயத்தினர் 0.39% வீதம் உள்ளனர்.[1]
போக்குவரத்து
[தொகு]தொடருந்து நிலையம்
[தொகு]இரண்டு நடைமேடைகள் கொண்ட நயாகட் தொடருந்து நிலையத்திலிருந்து[2]தாசபல்லா[3], புவனேசுவரம், புரி, பத்ரக் ஆகிய நகரங்களுக்கு தொடருந்துகள் செல்கிறது.