நந்தா (திரைப்படம்)
நந்தா | |
---|---|
![]() | |
இயக்கம் | பாலா |
தயாரிப்பு | கணேஷ் ரகு, கார்த்திக் இராதாகிருஷ்ணன், வெங்கி நாராயணன், இராஜன் இராதாகிருஷ்ணன் |
கதை | பாலா |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | சூர்யா லைலா ராஜ்கிரன் சரவணன் இராஜஸ்ரீ கருணாஸ் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
வெளியீடு | 2001 |
ஓட்டம் | 300 நிமிடங்கள். |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நந்தா(Nandha) 2001 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பாலா எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.[1] சூர்யா,[2] லைலா, ராஜ்கிரண், கருணாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வகை
[தொகு]நாடகப்படம்
கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
சிறைச்சாலையிலிருந்து வெளிவரும் நந்தா தனது தாயாரையும் தங்கையையும் காண்பதற்கு வீடு செல்கின்றான். ஆனால் அங்கு அவன் தாய் அவன் மீது உள்ள வெறுப்பு காரணமாக அவனிடம் பேச மறுக்கவே,தனது படிப்பினைத் தொடர்வதற்காக நந்தா முயல்கின்றான். அப்பொழுது அவனது செலவுகளை ஏற்றுக்கொள்கின்றார் அவ்வூரின் நன்மதிப்பைப் பெற்ற ஒருவர்.இதற்கிடையில் இலங்கையில் இருந்து அகதியாக வரும் ஒரு பெண்மணியிடம் இவனுக்கு காதல் மலர்கின்றது.அவனைத் தனது பிள்ளை போல வளர்த்தவர் அவரது குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்பட அவர்களைப் பழி வாங்கத் துடிக்கின்றான் நந்தா.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
எண் | பாடல் | பாடகர்(கள்) | நேரம் | பாடலாசிரியர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
1 | "முன் பனியா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மால்குடி சுபா | 5:47 | பழனி பாரதி | |
2 | "ஒராயிரம் யானை கொண்றால் பரணி" | பி. உன்னிகிருஷ்ணன் | 3:35 | நா. முத்துக்குமார் | |
3 | "எங்கெங்கோ எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்" | இளையராஜா | 4:09 | புலமைப்பித்தன் | |
4 | "மாயனே அந்த" | இராஜலட்சுமி, சிறீமதுமிதா, குழுவினர் * | 2:49 | ஆண்டாள் | ஆண்டாளின் திருப்பாவையைச் சார்ந்து |
5 | "கள்ளி அடி கள்ளி" | அனுராதா ஸ்ரீராம், சிறீமதுமிதா, குழுவினர் * | 4:06 | தாமரை | |
6 | "அம்மா என்றாலே" | இளையராஜா | 4:32 | பா. விஜய் |
தயாரிப்பு
[தொகு]இயக்குநர் பாலா ஒரு நேர்காணலில், மலையாளத்தில் மம்மூட்டி நடித்த தனியாவர்தனம் திரைப்படத்தின் உச்சக்கட்ட காட்சியில் நடக்கும் சம்பவத்தின் தாக்கத்தால், அந்த உச்சக்கட்ட காட்சியை வைத்து இப்படத்தின் கதை பின்னோக்கி எழுதப்பட்டது என்றார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nandha - audiocassette released". Archived from the original on 6 நவம்பர் 2001.
- ↑ "All conquering Nandaa". The Hindu. 13 June 2002. Archived from the original on 17 October 2020. Retrieved 14 October 2020.
- ↑ Behindwoods TV (2024-12-29). "Bala Firing Dark Secrets of Cinema like a Dragon! Shock ஆன Gobi! Fiery Interview - Part 3". Retrieved 2024-12-31.