தௌலத் ராம் கல்லூரி
முந்தைய பெயர் | பிரமிளா கல்லூரி |
---|---|
குறிக்கோளுரை | ऋते ज्ञानान्न मुक्ती |
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Without knowledge there's no salvation. |
வகை | மகளிர் கல்லூரி |
உருவாக்கம் | 1960 |
சார்பு | தில்லி பல்கலைக்கழகம் |
முதல்வர் | சவிதா ராய் |
மாணவர்கள் | 4000+ |
பட்ட மாணவர்கள் | 3600+ |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 300+ |
அமைவிடம் | தில்லி பல்கலைக்கழகம் (வடக்கு வளாகம்) புது தில்லி |
இணையதளம் | http://dr.du.ac.in |
தௌலத் ராம் கல்லூரி (Daulat Ram College) தில்லி பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான கல்லூரி ஆகும். இது ஒரு மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகும்.
வரலாறு
[தொகு]இக்கல்லூரியானது கல்வியாளரும் பரோபகாரருமான சிறீ தௌலத் ராம் குப்தாவால் 1960-இல் நிறுவப்பட்டது. தில்லி பல்கலைக்கழகத்தின் முக்கியக் கல்லூரிகளில் ஒன்றான, இந்தக் கல்லூரி, முதலில் திலக் மார்க் என்ற இடத்தில் “பிரமிளா கல்லூரி” என்ற பெயரில் தொடங்கப்பட்டது. 1964-ஆம் ஆண்டில், இக்கல்லூரி தில்லி பல்கலைக்கழக வடக்கு வளாகத்தில் உள்ள இதன் தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்லூரியின் பெயரும் தௌலத் ராம் கல்லூரி என மறுபெயரிடப்பட்டது. இக்கல்லூரி இளங்கலை, முதுகலை நிலைகளில் கல்வியை வழங்குகிறது. தௌலத் ராம் கல்லூரி மகளிர் கல்லூரி ஆகும்.
தரவரிசைகள்
[தொகு]2024ஆம் ஆண்டில் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசையில் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் 72ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.[1]
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
[தொகு]- ஆயிசி கோசு, பொதுவுடமைக் கட்சித் தலைவர், மாணவர் ஆர்வலர், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர்.
- அஞ்சனா ஓம் காசியப், மூத்த பத்திரிகையாளர், ஆஜ் தக்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2024 NIRF Ranking" (PDF).