தோபா ஏரி
தோபா ஏரி Lake Toba | |
---|---|
சமோசிர் தீவும் தோபா ஏரியும் | |
அமைவிடம் | வடக்கு சுமத்ரா, இந்தோனேசியா |
ஆள்கூறுகள் | 2°41′N 98°53′E / 2.68°N 98.88°E |
வகை | எரிமலை/டெக்டோனிக் |
முதன்மை வெளியேற்றம் | அசகான் ஆறு |
வடிநில நாடுகள் | இந்தோனேசியா |
அதிகபட்ச நீளம் | 100 km (62 mi) |
அதிகபட்ச அகலம் | 30 km (19 mi) |
மேற்பரப்பளவு | 1,130 km2 (440 sq mi) |
அதிகபட்ச ஆழம் | 505 m (1,657 அடி) |
நீர்க் கனவளவு | 240 km3 (58 cu mi) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 905 m (2,969 அடி) |
Islands | சமோசிர் |
குடியேற்றங்கள் | அம்பரித்தா, பங்குருவான் |
தோபா ஏரி (Lake Toba) (இந்தோனேசிய மொழி: Danau Toba ஆங்கிலம்: Lake Toba) எனப்படும் பேரேரி, தென்கிழக்காசியா, இந்தோனேசிய நாட்டின் சுமாத்திராவில் உள்ளது. இந்த ஏரி, 100 கி.மீ (62.1371 மைல்) நீளமும், 30 கி.மீ (18.6411 மைல்) அகலமும், 505 மீட்டர் (1.666 அடிகள்) ஆழமும் கொண்டதாகும்.[1]
ஆயத் தொலைவுகள் வரையறைப்படி, 2°53′N 98°31′E / 2.88°N 98.52°E தொடங்கி 2°21′N 99°06′E / 2.35°N 99.1°E முடிய, இந்தோனேசியாவின் வடக்கு சுமாத்திராவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள தோபா ஏரி, சுமார் 900 மீ (2.953 அடி) உயரத்தில் உள்ளது. அத்துடன் இந்தோனேசியாவின் பெரும் ஏரியாகவும், உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரியாகவும் (volcanic lake) அறியப்படுகிறது.[2]
இந்த ஏரி 69,000-77,000 ஆண்டுகளுக்கு முன்னர் VEI 8 எனக் கணக்கிடப்பட்ட அளவிலான மாபெரும் எரிமலை வெடிப்பின் நிகழ்விடமாக, காலநிலை மாற்றத்தின் அடையாளமாக உள்ளது.[3][4][5] மேலும், கடந்த 25 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் நிகழ்ந்துள்ள எரிமலை வெடிப்புகளில் இதுவே மிகப்பெரிய எரிமலை வெடிப்பாகும்.
தோபாப் பேரழிவு உலகளாவிய பல விளைவுகளை தரக்கூடியதாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பலிகொண்டது. குறிப்பாக, மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற பிராந்தியங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.[6] மழைக்காலங்களில், தோபா எரிமலையின் இடைப்பட்ட பகுதியில், குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி முதல், 5 டிகிரி வரையிலும் °C (5.4 to 9.0 °F) அதிகபட்ச வெப்பநிலை 15 °C (27 °F) நிலவுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இது உலகளாவிய நிலையில் மிகவும் குறைவாகும்.[7] கூடுதல் ஆய்வறிக்கையின்படி, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள, மலாவி ஏரி (Lake Malawi) பகுதியில் தோபா எரிமலை உமிழ்வுகளிலிருந்து கணிசமான சாம்பல் கொட்டபடுவதாக காட்டுகின்றன அதேநேரம் நீண்டதூரம் உள்ள கிழக்காப்பிரிக்காவில் ஒரு குறிப்பிடத்தக்க காலநிலை விளைவுகளின் அறிகுறிகள் காணப்படுகிறது.[8]
நில பண்பியல்
[தொகு]வடக்கு சுமாத்திராவில் உள்ள டோபா எரிமலை, அகன்றவாய் கொண்ட சிக்கலான பேரெரிமலையாகவும், நான்கு எரிமலைவாய்கள் பிணைந்து தோற்றமளிக்கிறது.[9] நான்காவது மற்றும் இளைய எரிமலை பிளவின் அளவு 100 க்கு-30 கிலோமீட்டர் அதாவது (62க்கு-19 மைல்கள்)[10]
இது உலகின் மிகபெரிய அகன்ற எரிமலைவாய்ப்புறமாகும் என்பது ஆய்வில் அறிந்த தகவல், மேலும் மற்ற மூன்று பழைய எரிமலைவாய்களை இடைவெட்ட தாங்கி நிற்கிறது. இளைய தோபா பாறை எனப்படும் எரிமலை உமிழ்ந்த பொருள் அடர்ந்த பாறை, தற்போதைய புவியியல் ஆய்வு மதிப்பீட்டீன்படி 2,800 கி.மீ 3 (670 கன மைல்)(7.8195091 × 1024 m6) இது சமிபத்திய புவியியல் வரலாற்றில் மிகபெரிய எரிமலை உமிழ்வுகள் என்று வெளியிட்டுள்ளது.[11]
இந்த வெடிப்பு தொடர்ந்து மீண்டெழும் குவிமாடமாகும், ஒரு நீண்ட பிளவிடை பள்ளம் பிரிக்கப்பட்ட இரண்டு அரை குவிமாடங்கள் சேர்ந்து, புதிதாக அகன்ற எரிமலைவாய் உருவானதாக அறியப்படுகிறது.[12]
இதற்குக் குறைந்தது நான்கு கூம்புகள், இந்த நான்கும் அடுக்கப்பட்ட எரிமலைபோல் காணபடுவதோடு, அதில் மூன்று பெருங்குழிகள் ஏரியில் தெரிகிறது. வடமேற்கில் இருக்கும் அகன்ற எரிமலைவாய் சிதறியுள்ள கூம்பு விளிம்புகளில் பெரும்பகுதி தாவரங்களால் சூழப்பட்டுள்ளது,
இது பந்நூறு ஆண்டுகளாக இளம் வயதாகவே பரிந்துரைக்கின்றது. மேலும் கடல்மட்டத்திலிருந்து 1971 மீட்டர் உயரத்தில் புசுபுகிட்(Pusubukit) ஹில் மையம் (Hill Center) உள்ளது, மற்றும் அகன்ற எரிமலைவாய் தெற்கு விளிம்பு பகுதியில் ஒரு சொல்பாடரிகல்லி (solfatarically) என்கிற நிலபண்பியல் சரணாலயம் அமைந்துள்ளது.[13][14]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Introducing Danau Toba
- ↑ WorldLakes.org Toba (Danau Toba)
- ↑ The Global Volcanism Program has no activity reports for Toba.
- ↑ "Eruptive history of Earth's largest Quaternary caldera (Toba, Indonesia) clarified" (PDF). Geology (Michigan Technological University) 19 (3): 200–203.
- ↑ The Geological Society of America
- ↑ When humans faced extinction-BBC: Last Updated: Monday, 9 June, 2003, 17:35 GMT 18:35 UK
- ↑ volcanic-winter Written by: John P. Rafferty
- ↑ Lake Malawi shows no volcanic winter in East Africa at 75 ka Edited by Mark H. Thiemens, University of California at San Diego, La Jolla, CA, and approved March 15, 2013 (received for review January 23, 2013)
- ↑ The Toba Caldera Complex Craig A. Chesner
- ↑ DANAU TOBA North Sumatra. Indonesia Story by Angelos May 2nd, 2015
- ↑ A weekly feature provided by scientists at the Hawaiian Volcano Observatory April 28, 2005
- ↑ Eruptive History of Earth' Largest Quaternary Caldera (Toba Indonesia) Clarified
- ↑ "Synonyms and Subfeatures: Toba". Global Volcanism Program. Smithsonian Institution. Retrieved December 13, 2008.
- ↑ FINANSIAL RABU, 04 NOVEMBER 2015