தொலைக்காட்சி நிகழ்ச்சி
தொலைக்காட்சி நிகழ்ச்சி (Television show) என்பது தொலைக்காட்சிப் பெட்டியில் புவி காற்று, செய்மதி மற்றும் கம்பி வழியாக ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு இடையில் பொதுவா முக்கிய செய்திகள், விளம்பரங்கள் அல்லது திரைப்பட முன்னோட்டங்கள் காட்டப்படும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஒரேமுறையாகத் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒளிபரப்பப்படும் தொடராக இருக்கலாம். ஒரு தொடர் நிகழ்ச்சியின் ஒரு நிகழ்ச்சி 'பகுதி நிகழ்வு' (episode) எனப்படுகிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பகுதிகளுடன் திட்டமிடப்படும் தொலைக்காட்சித் தொடர் குறுந்தொடர் அல்லது தொடர் என வழங்கப்படுகிறது. முடிவான நீளமின்றி தயாரிக்கப்படும் தொடர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒளிபரப்பப்பட்ட பின்னர் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடருமாறு பகுக்கப்படுகிறது. இத்தொடர் தொடர் நிகழ்ச்சியின் 'பருவம்' எனப்படுகிறது.
ஒரேமுறையாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி 'சிறப்பு' நிகழ்ச்சியாக அறிவிக்கப்படலாம். தொலைக்காட்சித் திரைப்படம் எனப்படுவது (டிவி மூவி) வெள்ளித்திரைகளில் அல்லாது தொலைக்காட்சித் திரைகளில் வெளியிடுவதற்காக உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். பல வெற்றிகரமான தொலைக்காட்சி திரைப்படங்கள் டிவிடி வட்டுக்களில் வெளியிடப்பட்டுள்ளன.
ஒரு நிகழ்ச்சி உருவாக்கப்பட்டு ஒளித நாடாக்களிலோ அல்லது பல்வித இலத்திரனியல் ஊடகங்களிலோ பிந்நாள் ஒளிபரப்பிற்காக பதிவு செய்யப்படலாம்; அல்லது நேரடியாக நேரலை தொலைக்காட்சியாக ஒளிபரப்பப்படலாம்.
தமிழில்
[தொகு]தமிழ்த் தொலைக்காட்சித்துறையில் பெரும்பாலமும் கிழமை நாட்களில் நாடகத் தொடர்கள் தான் ஒளிபரப்பப்படும். வார நாட்களில் குறிப்பிட்ட அத்தியாங்களுடன் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.
பெரும்பாளான தொடர்கள் வாரத்தில் 6 நாட்களில் 20 முதல் 22 மணித்தியாலங்கள் ஒளிபரப்படுகின்றது. நிகழ்ச்சிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 40 முதல் 45 நிமிடங்கள் ஒளிபரப்படுகின்றது. சில நிகழ்ச்சிகள் வாரத்தில் ஒரு நாள் 40 நிமிடம் ஒளிபரப்பும் வழக்கமும் உண்டு. பண்டிகை நாட்களில் ஒரு அத்தியாய சிறப்பு நிகழ்ச்சிகள் 20 முதல் 30 நிமிடங்கள் ஒளிபரப்பப்படுகின்றது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி வகைகள்
[தொகு]- வரிவடிவப்படியான மனமகிழ்வு நிகழ்ச்சிகள்
- வரிவடிவமிடப்படாத மனமகிழ்வு நிகழ்ச்சிகள்
- விளையாட்டு நிகழ்ச்சி
- உண்மைநிலை நிகழ்ச்சி
- அரட்டை அரங்க நிகழ்ச்சிகள்
- தகவல் நிகழ்ச்சிகள்
- தகவல் விளம்பர நிகழ்ச்சிகள்
- விளம்பரத்திற்கான பணம் செலுத்தப்பட்ட நிகழ்ச்சிகள்.
- திரைப்பட வெளியீடு குறித்து பொருட்காட்சி குறித்து போன்றவை.
- செய்திகள்
- தொலைக்காட்சி ஆவணப்படங்கள்
- செய்தித் தொகுப்புகள்—நடப்பு நிகழ்வுகளைக் குறித்தான கலந்துரையாடல்