உள்ளடக்கத்துக்குச் செல்

தொண்டைமான் வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரச அவையில் தொண்டைமான் மன்னன், புதுக்கோட்டை, 1858 .

தொண்டமான் வம்சம் தென்னிந்திய வம்சமாகும், இந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள் கி.பி.17 முதல் 20ஆம் நூற்றாண்டு வரை புதுக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்டுவந்தனர்.[1] அப்போது இராமநாதபுர மன்னான இருந்த கிழவன் சேதுபதி என்பவரின் மைத்துனரான இரகுநாத தொண்டைமான் என்பவரால் இந்த வம்சமானது தொடங்கப்பட்டது.

வரலாறு

[தொகு]

1686 ஆம் ஆண்டில், ராம்நாத் இராச்சியம், இராமநாதபுர மன்னனான கிழவன் சேதுபதியால் ஆட்சி செய்யப்பட்டது. புதுக்கோட்டை பகுதியானது சிவந்தெழுந்த பல்லவராயர் என்றழைக்கப்பட்ட தலைவரால் ஆளப்பட்டது. ராமநாதபுர மன்னன், ராமநாத வம்சத்தின்மீதான அதன் தலைவரின் விசுவாசத்தைச் சந்தேகித்தார். தஞ்சையை ஆண்ட மன்னனுக்கு விசுவாசத்தைக் காட்ட ஆரம்பிப்பாரோ என எண்ண ஆரம்பித்தார். ஆதலால் ராமநாதபுர மன்னன், தலைவரை அப்பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு தன்னுடைய மைத்துனரும், காத்தாயி நாச்சியாரின் சகோதரருமானவரை புதுக்கோட்டையின் புதிய மன்னனாக ஆக்கினார். முன்னர் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவருக்கு இருந்தவாறே செய்தார்.[2][3] தொண்டைமான் முன்பு திருமயத்தை ஆட்சி செய்த ஆவடைய ரகுநாத தொண்டைமானின் மகன் ஆவார். தொண்டைமானின் சேவைகளைப் பாராட்டி ரகுநாத கிழவன் சேதுபதி அவருக்கு புதுக்கோட்டை பகுதியைக் கொடுத்தார்.

ரகுநாத கிழவன் சேதுபதியின் மரணத்திற்குப் பிறகு, தொண்டைமான் புதுக்கோட்டையின் ஆட்சியாளரானார். பிற்கால நூற்றாண்டுகளில், தொண்டாய்மான் ஆட்சியாளர்கள், ராமநாதபுர மாவட்டத்தின் நிலப்பிரபுக்களாக இருந்தபோதும், தனிப்பட்ட முறையிலான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றினர், இது அந்த நேரத்தில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பின்பற்றப்பட்ட வந்த பொதுவான முறையாக இருந்தது.

புதுக்கோட்டையின் ஆட்சியாளரான பிறகு, ரகுநாத தொண்டைமான் மதுரையின் நாயக்கர்களுக்கு ஆதரவாக தஞ்சையின் நாயக்கர்களுக்கு எதிராகப் போராடி, மிக முக்கியமான இடமான திருக்காட்டுப்பள்ளியை கைப்பற்றினார். பின்னர் புதுக்கோட்டையைச் சேர்ந்த தொண்மான் மன்னர்களுக்கும் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. தொண்டைமான் திருக்காட்டுப்பள்ளியின் மேற்குப் பகுதியைக் கைப்பற்றினார்.

அடுத்த ஆட்சியாளர் ராஜா விஜய ரெகுநாத ராய தொண்டைமான் ஆவார். மைசூர் ஆட்சியாளரான ஹைதர் அலிக்கு எதிராக ஆற்காட் நவாபிற்கு உதவினார். அவர் பிரித்தானிய அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருந்தார். சில நாள்களுக்குப் பின்னர், ஹைதர் அலியின் இராணுவம் புதுக்கோட்டை சமஸ்தானத்தை கைப்பற்ற முயன்றபோது, தொண்டைமானின் இராணுவம் அவர்களைத் தோற்கடித்து ஹைதரின் இராணுவத்தை விரட்டி அடித்தது. தொண்டைமான் அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றினார். மேலும் அவர், திப்பு சுல்தானுக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கத்திற்கு உதவினார்.

பிரிட்டிஷாருக்கு எதிரான விடுதலைப்போராட்டத்தின்போது கட்டபொம்மனை பிடித்துக்கொடுத்த வகையிலும், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு உதவிய வகையிலும் தொண்டைமான் ஆட்சியாளர்கள் தவறான நிலையில் பிரபலமாயினர்.[4]

இறுதியாக புதுக்கோட்டை முறையான பிரித்தானிய பாதுகாப்பின் கீழ் 1800 ல் வந்தது. தொண்டைமான் மன்னர்கள் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரால் ஆளப்பட்ட மைசூரால் அச்சுறுத்தப்பட்டதால் இது தவிர்க்க முடியாததாயிற்று. திப்பு சுல்தான் பிரெஞ்சுக்காரர்களின் அதிகாரத்தை ஆங்கிலேயருக்கு எதிராகப் பயன்படுத்த முயன்றார்.

தொண்டைமான் மன்னர்களின் பட்டியல்

[தொகு]

தொண்டமான் பரம்பரை:[5] ரகுநாத ராய தொண்டைமான் புதுக்கோட்டை மன்னர்களில் முதலாமாவர் ஆவார். இவர் 1686 முதல் 1730வரை ஆட்சி செய்தார். இவரது வாழ்வின் துவக்கத்தில் இராமநாதபுரம் சேதுபதியிடம் போர்த் தலைவராக தனது வாழ்வைத் துவக்கினார். சேதுபதியிடம் இவர் ஆற்றிய பணிகளுக்காக 1686 ஆம் ஆண்டு, இவரை புதுக்கோட்டையின் சுதந்திர ஆட்சியாளராக சேதுபதி அங்கீகரத்தார். பிற மன்னர்கள் இவருக்குப் பின் வந்தவர்கள் ஆவர்.

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Vijaya Ramaswamy (2017). Historical Dictionary of Tamils. Jawahar Lal Nehru University. p. 191.
  2. Robert Sewell. Lists of Inscriptions, and Sketch of the Dynasties of Southern India, Volume 2. E. Keys at the Government Press, 1884. p. 225.
  3. Irāmaccantiran̲ Nākacāmi, N. S. Ramaswami. Ramanathapuram District: An Archaeological Guide. Collector of Ramanathapuram, 1979. p. 38.
  4. Dr V Shanmugam (2019). A Study on Women Empowerment. Laxmi Book Publication. p. 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780359380749.
  5. Lists of Inscriptions, and Sketch of the Dynasties of Southern India By Robert Sewell, Archaeological Survey of Southern India
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொண்டைமான்_வம்சம்&oldid=3925256" இலிருந்து மீள்விக்கப்பட்டது