உள்ளடக்கத்துக்குச் செல்

தைட்டானியம் டெட்ரா அசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைட்டானியம் டெட்ரா அசைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தைட்டானியம்(IV) அசைடு
வேறு பெயர்கள்
தைட்டானியம் டெட்ரா அசைடு
இனங்காட்டிகள்
517874-43-0 Y
InChI
  • InChI=1S/4N3.Ti/c4*1-3-2;/q4*-1;+4
    Key: UBKFNPJMWUJHGB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 76529634
  • [N-]=[N+]=[N-].[N-]=[N+]=[N-].[N-]=[N+]=[N-].[N-]=[N+]=[N-].[Ti+4]
பண்புகள்
Ti(N3)4
வாய்ப்பாட்டு எடை 215.95 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தைட்டானியம் டெட்ரா அசைடு (Titanium tetraazide) என்பது Ti(N3)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது மிகவும் உணர்திறன் கொண்ட ஒரு வெடிபொருளாகும். தைட்டானியம் டெட்ராபுளோரைடு மற்றும் மும்மெத்தில்சிலில் அசைடு ஆகியவற்றிலிருந்து தொடர்புடைய புளோரைடு-அசைடு பரிமாற்றம் மூலம் தைட்டானியம் டெட்ரா அசைடு தயாரிக்கப்படுகிறது.

பண்புகள்

[தொகு]

அதிர்வு நிறமாலை மற்றும் ஒற்றை-படிக எக்சு-கதிர் விளிம்பு விளைவு ஆகிய ஆய்வுகளால் தைட்டானியம் டெட்ரா அசைடு வகைப்படுத்தப்படுகிறது.[1] இந்தச் சேர்மம் 2003 ஆம் ஆண்டில் அதிர்வு ரீதியாக நிலையானதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. நேரியல் பிணைப்பு கோணங்களைக் கொண்ட நான்முகி கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. பொதுவாக வளைந்த பிணைப்பு கோணங்களைக் கொண்ட பிற உலோக அசைடுகளை தைட்டானியம் டெட்ரா அசைடு வேறுபடுத்துகிறது. 2004 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பின்னர் பிறகு, உருவான தைட்டானியம் டெட்ரா அசைடு நேரியல் பிணைப்பு கோணங்களைக் காட்டவில்லை. ஏனெனில் ஒருங்கிணைப்பு எண்கள் 4 என்ற எண்னிக்கையைத் தாண்டின.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Saal, Thomas; Deokar, Piyush; Christe, Karl O.; Haiges, Ralf (4 April 2019). "The Binary Group 4 Azide Adducts [(bpy)Ti(N3)4, [(phen)Ti(N3)4], [(bpy)2Zr(N3)4]2·bpy, and [(bpy)2Hf(N3)4]2·bpy"]. Eur. J. Inorg. Chem. (18): 2388–2391. doi:10.1002/ejic.201900334. https://chemistry-europe.onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/ejic.201900334. பார்த்த நாள்: 5 January 2025. 
  2. Haiges, Ralf; Boatz, Jerry A.; Schneider, Stefan; Schroer, Thorsten; Yousufuddin, Muhammed; Christe, Karl O. (12 March 2004). "Preparation and Characterization of the First Binary Titanium Azides, Ti(N3 )4 , [P(C6H5 )4 ][Ti(N3 )5 ] and [P(C6H5 )4 ]2 [Ti(N3 )6 ] and on Linear Ti-N-NN Coordination" (PDF). Defense Technical Information Center. Retrieved 5 January 2025.