உள்ளடக்கத்துக்குச் செல்

தேவயானி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவயானி
2014 இல் மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் விளக்கேற்றும் பொழுது. இடதுபுறத்தில் பாரதிராஜா.
பிறப்புசுஷ்மா ஜெயதேவ்
சூன் 22, 1974 (1974-06-22) (அகவை 50)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
மற்ற பெயர்கள்தேவயானி ராஜகுமாரன்
பணிநடிகை, ஆசிரியை
செயற்பாட்டுக்
காலம்
1995–தற்போது
பெற்றோர்ஜெயதேவ்
லட்சுமி
வாழ்க்கைத்
துணை
ராஜகுமாரன்
பிள்ளைகள்இனியா
பிரியங்கா (மகள்கள்)
உறவினர்கள்நகுல்
மயூர் (சகோதரர்கள்)

தேவயானி (ஆங்கில மொழி: Devayani, பிறப்பு: 22 சூன் 1974) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடத் தந்தையான ஜெயதேவுக்கும், மலையாள தாயான இலட்சுமிக்கும் மகளாக பிறந்தார். இளநிலை கணக்குப்பதிவியல் பட்டம் பெற்றவர். இவருடைய இயற்பெயர் சுஷ்மா. திரையுலகிற்காக தன் பெயரை தேவயானி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் தொலைக்காட்சியின் கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நாண்ஸ்டாப் கூரியரின் "இனிமே இதுதான் இது மட்டும்தான்" எனும் விளம்பரத்திலும் நடித்திருக்கிறார்.

திருமணம் வாழ்க்கை

[தொகு]

தேவயானியும், இயக்குநர் ராஜகுமாரனும் காதலித்து வந்தனர். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணம் ஏப்ரல் 9, 2001 ஆம் ஆண்டு திருத்தணியில் காலை 9.30 மணிக்கு நடந்தது.[1] இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.[2]

திரைப்பட வரலாறு

[தொகு]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1993 சாத் பென்சொமி வங்காளம் சுஷ்மா அறிமுகம்
1994 கின்னாரி புழையோரம் மலையாளம்
1995 தொட்டா சிணுங்கி ரம்யா தமிழ்
தில் கா டாக்டர் இந்தி
ஆசான் ராஜாவு அப்பன் ஜிதாவு மலையாளம்
திரி மென் ஆர்மி சுபா மலையாளம்
காக்கக்கும் பூசாக்கும் கல்யாணம் லதா .எஸ்.பிள்ளை மலையாளம்
1996 கல்லூரி வாசல் நிவிதா தமிழ்
சோட்டா சா கர் இந்தி
காதல் கோட்டை கமலி தமிழ் வெற்றியாளர், சிறந்த நடிகைக்கான தமிழ் நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது.
பூமணி தமிழ்
சிவசக்தி ஒரு பாடலுக்கு மட்டும் தமிழ்
மகாத்மா சரஸ்வதி மலையாளம்
கின்னம் கட்ட கள்ளன் மலையாளம்
மிஸ்டர். கிலியன் மலையாளம்
காதில் ஒரு கின்னரம் மலையாளம்
1997 விவசாயி மகன் தமிழ்
காதலி தமிழ்
பெரிய இடத்து மாப்பிள்ளை லட்சுமி தமிழ்
சூரிய வம்சம் நந்தினி தமிழ் வெற்றியாளர், சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.
1998 சுஷ்வாகதம் சந்யா தெலுங்கு
உதவிக்கு வரலாமா மைதிலி தமிழ்
கிழக்கும் மேற்கும் தமிழ்
மறுமலர்ச்சி தமிழ்
சொர்ணமுகி சொர்ணமுகி தமிழ்
நினைத்தேன் வந்தாய் சாவிதிரி தமிழ்
மூவேந்தர் வைதேகி தமிழ்
பூந்தோட்டம் தமிழ்
செந்தூரம் தமிழ்
உனக்கும் எனக்கும் கல்யாணம் தமிழ்
என் உயிர் நீ தான் தமிழ்
புதுமை பித்தன் ஆர்தி தமிழ்
சிரிமதி வொல்லோஸ்தா தெலுங்கு
1999 தொடரும் சீதா ஆனந்து தமிழ்
கும்மிப்பாட்டு தமிழ்
நீ வருவாய் என நந்தினி தமிழ்
ஒருவன் நந்தினி தமிழ்
பிரேமோத்சவா கன்னடம்
நிலவே முகம் காட்டு கஸ்தூரி தமிழ்
பாட்டாளி சகுந்ததலா தமிழ்
மாணிக்யம் தெலுங்கு

2000 முதல் 2013 வரை

[தொகு]
ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2000 வல்லரசு அஞ்சலி வல்லரசு தமிழ்
அப்பு சீதா தமிழ்
என்னம்மா கண்ணு காயத்திரி தமிழ்
பாரதி செல்லமால் பாரதி தமிழ் வெற்றியாளர், சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
தெனாலி சைலஜா கைலாஸ் தமிழ்
2001 கண்ணுக்கு கண்ணாக தேவி தமிழ்
என் புருசன் குழந்தை மாதிரி தமிழ்
விண்ணுக்கும் மண்ணுக்கும் தேவயானி தமிழ்
ஆனந்தம் பாரதி தமிழ் பரிந்துரை—சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
பிரண்ட்ஸ் பத்மினி அரவிந்து தமிழ்
சுந்தரபுருஷன் மலையாளம்
நினைக்காத நாளில்லை கவிதா தமிழ்
2002 விவரமான ஆளு அப்பு தமிழ்
அழகி வளர்மதி சண்முகம் தமிழ் வெற்றியாளர், சிறந்த துணை நடிகைக்கான ஐடீஎஃஏ விருது
கோட்டை மாரியம்மன் தமிழ்
பஞ்சதந்திரம் நிர்மலா தமிழ்
தென்காசிப் பட்டணம் சங்கீதா தமிழ்
குருவம்மா குருவம்மா தமிழ்
சமஸ்தானம் திவ்யா தமிழ்
படை வீட்டம்மன் சாமுண்டி தமிழ்
சென்னகேசவா ரெட்டி தெலுங்கு
2003 காதலுடன் கவிதா தமிழ்
பீஷ்மர் கௌரி பீஷ்மர் தமிழ்
பாலேட்டன் ராதிகா மலையாளம்
2004 நானி நானியின் அம்மா தெலுங்கு
நியூ பப்புவின் அம்மா தமிழ்
கிரி தமிழ்
செம ரகளை தமிழ்
செந்தாழம் பூவே தமிழ்
சௌம்யம் மலையாளம்
2005 நரன் ஜானகி மலையாளம்
2009 ஐந்தாம் படை கல்பனா தமிழ்
2010 ஒரு நாள் வரும் ராஜலெட்சுமி மலையாளம்
2011 சர்க்கார் காலனி மலையாளம்
2013 திருமதி தமிழ் தமிழ் ராஜலெட்சுமி மலையாளம்

வங்காளம் திரைப்படம்

[தொகு]
  • துஷொர் கோ துளி

தொலைக்காட்சி

[தொகு]
ஆண்டு நாடகம் பாத்திரம் மொழி தொலைக்காட்சி இணைப்பு
2003–2009 கோலங்கள் அபினயா தமிழ் சன் தொலைக்காட்சி [1]
2007-08 மஞ்சள் மகிமை சௌந்தர்யா தமிழ் கலைஞர் தொலைக்காட்சி [2]
2010-11 கொடி முல்லை மலர்க் கொடி/அன்னக்கொடி தமிழ் ராஜ் தொலைக்காட்சி [3]
2011-12 முத்தாரம் ரஞ்சனி தேவி / சிவரஞ்சனி தமிழ் சன் தொலைக்காட்சி [4]
2021 புதுப்புது

அர்த்தங்கள்

லட்சுமி தமிழ் ஜு தமிழ் தொலைக்காட்சி

விருதுகள்

[தொகு]
  • 2000 - ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது[3]
  • 2004 - சிறந்த சின்னத்திரை நடிகைக்கான விருதுகள். - கோலங்கள்[4]
  • 2008 - முதல் இடம் - சிறந்த நடிகைக்கான விவெல்லின் சின்னத்திரை விருதுகள் - (கோலங்கள்)[5]
  • 2010 - நியமிக்கப்படுதல் - சிறந்த நடிகைக்கான சன் குடும்பம் விருது - (கோலங்கள்)
  • 2010 - ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது[6]
  • 2011 - பிக் ஃஎப்எம்மின் தமிழ் பொழுதுபோக்கு மிகுந்த பொழுதுபோக்குத் தொலைக்காட்சி நடிகைக்கான விருதுகள் - (கொடி முல்லை)[7]

ஆதாரம்

[தொகு]
  1. "தேவயானி, ராஜகுமாரன் அவர்களின் திருமணம்". ஒன் இந்தியா. 9 ஏப்ரல் 2001. Retrieved சூன் 24, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "தேவயானியின் குழந்தைகள்". chennaionline.com. 24 சனவரி 2013. Retrieved சூன் 24, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "கலைமாமணி விருதுகள் அறிவிப்பு". Archived from the original on 2012-10-15. Retrieved 2013-06-25.
  4. "தேவயானி, வேணு அரவிந்த் விருதுகள் கிடைத்தது". Archived from the original on 2006-12-08. Retrieved 2013-06-25.
  5. "விவெல் சின்னத்திரை விருதுகள் 2008 வெற்றியாளர்களின் பட்டியல்". Archived from the original on 2014-08-26. Retrieved 2013-06-25.
  6. "கலைமாமணி விருது வெற்றியாளர்கள் காட்சியகம்". Archived from the original on 2013-04-07. Retrieved 2013-06-25.
  7. பிக் எப்எம் தமிழ் பொழுதுபோக்கு விருதுகள் - 2011

வெளியிணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவயானி_(நடிகை)&oldid=4192309" இலிருந்து மீள்விக்கப்பட்டது