உள்ளடக்கத்துக்குச் செல்

தேரா காசி கான்

ஆள்கூறுகள்: 30°1′59″N 70°38′24″E / 30.03306°N 70.64000°E / 30.03306; 70.64000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேரா காசி கான்
ڈیرہ غازی خان
நகரம்
மேலிருந்து கடிகார திசையில்: யுனிவர்சல் பல்கலைக்கழகம், காசி கான் ஆலயம்
தேரா காசி கான் is located in பஞ்சாப், பாக்கிஸ்தான்
தேரா காசி கான்
தேரா காசி கான்
தேரா காசி கான் is located in பாக்கித்தான்
தேரா காசி கான்
தேரா காசி கான்
ஆள்கூறுகள்: 30°1′59″N 70°38′24″E / 30.03306°N 70.64000°E / 30.03306; 70.64000
நாடு பாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
பிரிவுதேரா காசி கான்
மாவட்டம்தேரா காசி கான்
பழைய நகரம் நிறுவப்பட்டதுகி.பி.1474
புதிய நகரம் நிறுவப்பட்டதுகி.பி.1910
அரசு
 • வகைநகராட்சி நிர்வாகம்
 • நகரத் தந்தைதற்போது யாருமில்லை[1]
பரப்பளவு
 • நகரம்70 km2 (30 sq mi)
 • மாநகரம்
11,294 km2 (4,361 sq mi)
ஏற்றம்
123 m (404 ft)
மக்கள்தொகை
 • நகரம்3,99,064
 • தரவரிசைபாக்கித்தானின் 19வது இடம்
 • அடர்த்தி5,700/km2 (15,000/sq mi)
நேர வலயம்ஒசநே+5 (பாக்கித்தான் நேர வலயம்)
 • கோடை (பசேநே)+6
அஞ்சல் குறியீட்டு எண்
32200
தொலைபேசி இணைப்பு எண்064[4]
சுருக்கமானடிஜிகே,
பெயர்திகிரியன், சுலைமான் பலூச்கள்
இணையதளம்dgkhan.punjab.gov.pk

தேரா காசி கான் ( Dera Ghazi Khan ), டி.ஜி. கான் என சுருக்கமாக அழைக்கப்படும், இது பாக்கித்தானின் பஞ்சாபின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரமாகும். இது பாக்கித்தானின் மக்கள் தொகை அதிகளவிலுள்ள பட்டியலில் 19வது இடத்திலுள்ளது.[5] சிந்து ஆற்றின் மேற்கே அமைந்துள்ள இது தேரா காசி கான் மாவட்டம் மற்றும் தேரா காசி கான் பிரிவின் தலைமையகமுமாகும். பாக்கித்தானின் எட்டாவது அதிபர் பாரூக் இலெகாரி இப்பகுதியைச் சேர்ந்தவர்.

வரலாறு

[தொகு]

15 ஆம் நூற்றாண்டின் இறுதியில், முல்தானின் இலங்கா சுல்தானகத்தைச் சேர்ந்த சா உசைனால் பலூச் பழங்குடியினர் இப்பகுதியில் குடியேற அழைக்கப்பட்டபோது தேரா காசி கான் நிறுவப்பட்டது. மேலும் தோடாய் தலைவரான காசி கான் மிரானியின் மகன் காசி கானின் பெயரிடப்பட்டது. தேரா காசி கான் பகுதி முகலாயப் பேரரசின் முல்தான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது..[6]

பதினைந்து தலைமுறைகளாக மிரானிகள் இப்பகுதியை ஆண்டனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காபுலின் கீழ் உள்ள தேரா காசி கானின் ஆட்சியாளராக ஜமான் கான் இருந்தார். பின்னர் அவர் இரஞ்சித் சிங்கின் தளபதி குசால் சிங் தலைமையில் முல்தானில் இருந்து சீக்கிய இராணுவத்தால் தாக்கப்பட்டார்.[7][8] இதனால் தேரா காசி கான் சீக்கிய ஆட்சியின் கீழ் வந்தது.

குசால் சிங் சமாதர், சீக்கியப் பேரரசின் அதிகாரி

சுதந்திரத்திற்குப் பின்

[தொகு]

1947 இல் பாக்கித்தானின் சுதந்திரத்திற்கு வழிவகுத்த பாக்கித்தான் இயக்கத்தின் வெற்றிக்குப் பிறகு, சிறுபான்மை இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர். இந்தியாவில் இருந்து பல முஸ்லிம் அகதிகள் தேரா காசி கான் மாவட்டத்தில் குடியேறினர். தேரா காசி கானில் இருந்து பல இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் தில்லியில் குடியேறினர். மேலும், தேரா இசுமாயில் கானிலிருந்து குடியேறியவர்களுடன் சேர்ந்து தேராவால் நகரை நிறுவினர்.[9]

புள்ளிவிவரங்கள்

[தொகு]

பெரும்பாலான மக்கள் சுன்னி முஸ்லிம்களாக உள்ளன. பெரும்பான்மையான மக்கள் ஏழைகள் ஆனால் அவர்கள் தேசிய மற்றும் மாகாண அரசியலில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்த பலூச் பழங்குடியினரின் பணக்கார நிலப்பிரபுக்கள் மற்றும் தலைவர்களால் ஆளப்பட்டனர்.

இந்த நகரம் தெற்காசியாவின் பழமையான மாவட்டங்களில் ஒன்றாகும். பஞ்சாபின் மற்ற நகரங்களைப் போல் தேரா காசி கான் வளர்ச்சி அடையவில்லை. 2004-2005 கணக்கெடுப்புகளின் அடிப்படையில், மாவட்டம் பாக்கித்தானின் இருபது ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நகரின் மக்கள் தொகையில் 51% பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர்.<ref name="Haroon Jamal">Haroon Jamal (June 2007). Income Poverty at District Level: An Application of Small Area Estimation Technique (PDF) (Report). Social Policy and Development Centre. pp. 15–18. Archived from the original (PDF) on 1 February 2014. பார்க்கப்பட்ட நாள் 28 January 2014.</ref

உசாத்துணை

[தொகு]
  • "How Pakistan Made Nuclear Fuel" by Munir Ahmad Khan, former chairperson of the Pakistan Atomic Energy Commission: Islamabad The Nation 7 February 1998, page 7 [Pakistan: Article on How Pakistan Made Nuclear Fuel: FBIS-NES-98-042 : 11 February 1998].

குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Administrators appointed: Dissolution of local govts notified". Dawn (newspaper). 1 January 2022. https://www.dawn.com/news/1666869. 
  2. "D.G.Khan | Punjab Portal".
  3. "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (PDF). pbscensus.gov.pk. Archived from the original (PDF) on 2017-08-29. பார்க்கப்பட்ட நாள் 2017-09-03.
  4. "National Dialing Codes". Pakistan Telecommunication Company Limited. Archived from the original on 9 November 2015. பார்க்கப்பட்ட நாள் 5 April 2012.
  5. "Pakistan City & Town Population List". Tageo.com website. பார்க்கப்பட்ட நாள் 29 September 2017.
  6. Dasti, Humaira Faiz (1998). Multan, a Province of the Mughal Empire, 1525-1751 (in ஆங்கிலம்). Royal Book. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-969-407-226-5.
  7. Latif, Syed Muhammad (1891). History Of The Panjab. Calcutta Central Press Company Limited. p. 419. பார்க்கப்பட்ட நாள் 2009-11-29.
  8. =The Panjab Chiefs |Published= 1890
  9. "Colonies, posh and model in name only!". NCR Tribune. பார்க்கப்பட்ட நாள் 16 December 2007.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேரா_காசி_கான்&oldid=3868711" இலிருந்து மீள்விக்கப்பட்டது