தெலுங்கு பல்கலைக்கழகம்
Appearance
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1985 |
வேந்தர் | ஈ. எஸ். எல். நரசிம்மன் |
துணை வேந்தர் | எல்லூரி சிவரெட்டி |
அமைவிடம் | |
வளாகம் | நகர்ப்புற வளாகம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | www.teluguuniversity.ac.in |
தெலுங்குப் பல்கலைக்கழகம் மொழிக்கு முக்கியத்துவம் தரும் இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்று.
வளாகம்
[தொகு]இது ஐந்து வளாகங்களைக் கொண்டுள்ளது.
- லலிதா கலாதோரணம், ஐதரபாத்து
- நன்னய்ய பிரங்கனம், ராஜமுந்திரி
- பல்குரிக்கி சோமநாத பிரங்கனம், ஸ்ரீசைலம்
- பொட்டன்னா பிரங்கனம், வாரங்கல்
- ஸ்ரீ சித்தேந்திர யோகி பிரங்கனம், குச்சிபுடி
துறைகள்
[தொகு]- மொழி வளர்ச்சிப் பள்ளி
- மொழியியல் துறை
- அகராதியியல்
- கவின்கலைப் பள்ளி
- இசைத் துறை
- நடனத் துறை
- நாட்டுப்புறக் கலைகள்
- திரையரங்கக் கலைகள்
- சிற்பமும் ஓவியமும்
- பண்பாடும் சுற்றுலாவும்
- சமூகவியல் பள்ளி
- தொடர்பாடலும் ஊடகவியலும்
- வாஸ்து
- ஒப்பீட்டியல் பள்ளி
- ஒப்பீட்டுக் கல்வி
- மொழிபெயர்ப்புத் துறை
இலக்கியப் பள்ளி
- தெலுங்கு மொழித் துறை
வரலாறு, பண்பாடு, தொல்லியல் பள்ளி
- தெலுங்கர் வரலாறும் பண்பாடும்
- பதியப்பட்ட எழுத்தாய்வுகள்
- தொல்லியல்
- பழங்குடியினக் கல்விப் பள்ளி
- நாட்டுப்புறப் படிப்பு
- பழங்குடியினர் குறித்த படிப்பு
நூலகம்
[தொகு]இந்தப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தை மூன்று இடங்களில் அமைத்துள்ளனர். அவை: ஸ்ரீசைலம், வாரங்கல், ராஜமுந்திரி ஆகியன. தெலுங்கு மொழி, இலக்கியம், மொழியியல், கலை, ஊடகவியல், பண்பாடு தொடர்பான துறைகளில் நூல்கள் உள்ளன. இங்கு ஏறத்தாழ ஒரு லட்சம் நூல்கள் இருக்கின்றன. இவற்றில் ஐம்பத்து ஐந்தாயிரத்திற்கும் அதிகமான நூல்கள் தெலுங்கில் எழுதப்பட்டவை. நாற்பத்து மூன்றாயிரம் நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. ஏனைய நூல்கள் பிற இந்திய மொழிகளில் எழுதப்பட்டவை. இது தவிர ஓலைச்சுவடிகளும் உள்ளன.