உள்ளடக்கத்துக்குச் செல்

தெர்மோனேட்ரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெர்மோனேட்ரைடு
Thermonatrite
வில்லியமைட்டு மற்றும் தெர்மோனேட்ரைட்டு (தூள் பூச்சு)
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுNa2CO3·H2O
இனங்காணல்
படிக இயல்புஊசியுரு படிகங்கள் அரிதானவை; பொதுவாக தூள் மேலோடுகளாக நிகழ்கிறது
படிக அமைப்புசெஞ்சாய் சதுரப் படிகம்
பிளப்பு{100} இல் தெளிவற்றது
முறிவுவெட்டுப்படும்
மோவின் அளவுகோல் வலிமை1 - 1 12
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி2.255 (செயற்கை படிகத்தின் மீது அளவிடப்பட்டது)
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.420 nβ = 1.506 nγ = 1.524
இரட்டை ஒளிவிலகல்δ = 0.104
2V கோணம்48° (அளவிடப்பட்டது)
கரைதிறன்நீரில் கரையக்கூடியது
பிற சிறப்பியல்புகள்ளிதில் நீரிழக்கும்.
மேற்கோள்கள்[1][2]

தெர்மோனேட்ரைட்டு (Thermonatrite) என்பது Na2CO3·H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். சோடியம் கார்பனேட்டின் ஆவியாகி கனிம வகையாக இது அறியப்படுகிறது.[1][2]

முதன் முதலில் 1845 ஆம் ஆண்டில் தெர்மோனேட்ரைட்டு கண்டறியப்பட்டது.[3] வெப்பம் மற்றும் நேட்ரான் என்ற பொருள் கொண்ட தெர்மாசு என்ற கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து தெர்மோனேட்ரைட்டு என்ற பெயர் வந்தது. ஏனெனில் நேட்ரானின் நீரிழப்பு பொருளாக தெர்மோனேட்ரைட்டு இருப்பது இதற்கு காரணமாகும்.[2]

வறண்ட உப்பு நீர் ஏரிப் படுகைகளிலும், மண் உறைவுகளிலும் பொதுவாக தெர்மோனேட்ரைட்டு காணப்படும். எரிமலை வாய்களிலும் மற்றும் கார்பனாடைட்டு தொடர்பான தாதுப்படுகை இழைகளிலும் இருப்பதாகப் பதிவாகியுள்ளது. திரோனா, நேட்ரான் மற்றும் ஆலைட்டு ஆகிய கனிமங்கள் தெர்மோனேட்ரைட்டுடன் பொதுவான தொடர்புடைய கனிமங்களாகும். .[1]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் தெர்மோனேட்ரைட்டு கனிமத்தை Tnat[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Handbook of Mineralogy
  2. 2.0 2.1 2.2 Mindat data
  3. Webmineral data
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெர்மோனேட்ரைட்டு&oldid=4139783" இலிருந்து மீள்விக்கப்பட்டது