உள்ளடக்கத்துக்குச் செல்

சார்டைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்டைட்டு
Shortite
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுNa2Ca2(CO3)3
இனங்காணல்
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
பிளப்புதனித்து/{010} இல் சரி பிளவு
முறிவுசங்குருவம்
மோவின் அளவுகோல் வலிமை3
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி2.6
அடர்த்தி2.6
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (−)
ஒளிவிலகல் எண்nα = 1.531 nβ = 1.555 nγ = 1.570
இரட்டை ஒளிவிலகல்0.039
நிறப்பிரிகைr < v மிதமாக

சார்டைட்டு (Shortite) என்பது சோடியம்-கால்சியம் கார்பனேட்டு கனிமம் ஆகும். Na2Ca2(CO3)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் இது அடையாளப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் வயோமிங் மாநிலத்தில் சுவீட்வாட்டர் மாகாணத்தில் பச்சை ஆறு உருவாக்கத்தின் போது கிடைத்த வெட்டுக்கற்களில் யே.யே.பாகே என்பவரால் இக்கனிமம் கண்டறியப்பட்டது. 1889-1952 ஆம் ஆண்டு காலத்தில் அரிசோனா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த கனிமவியலாளர் பேராசிரியர் மேக்சுவெல் என். சார்ட்டு என்பவர் நினைவாக இக்கனிமத்திற்கு சார்டைட்டு என பெயர் சூட்டப்பட்டது. கனிமவியலாளர்கள் சங்கம் Sot என்ற குறியீட்டால் இக்கனிமத்தை அடையாளப்படுத்துகிறது.[1]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் சார்டைட்டு கனிமத்தை Sot[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

திரோனா எனப்படும் முச்சோடியம் ஐதரசன் இருகார்பனேட்டு இருநீரேற்று கனிமங்களுடன் சேர்ந்து சார்டைட்டு கனிமம் காணப்படுகிறது. கச்சா திரோனாவைப் பயன் படுத்தும் போது அது சார்டைட்டு கனிமம் மூலம் மாசுபடுவதைத் தவிர்க்க சிறிதளவு கவனமாக இருக்க வேண்டும்.[3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  2. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  3. McKetta, John J. (1995) "Slurry Systems, Instrumentation to Solid–Liquid Separation", Encyclopedia of Chemical Processing and Design, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8247-2602-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்டைட்டு&oldid=4093424" இலிருந்து மீள்விக்கப்பட்டது