உள்ளடக்கத்துக்குச் செல்

துளசேந்திரபுரம்

ஆள்கூறுகள்: 10°35′51″N 79°27′10″E / 10.5976093°N 79.4527823°E / 10.5976093; 79.4527823
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துளசேந்திரபுரம்
கிராமம்
துளசேந்திரபுரம் is located in தமிழ்நாடு
துளசேந்திரபுரம்
துளசேந்திரபுரம்
Location in Tamil Nadu, India
ஆள்கூறுகள்: 10°35′51″N 79°27′10″E / 10.5976093°N 79.4527823°E / 10.5976093; 79.4527823
Country இந்தியா
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழ்நாடு
மாவட்டம் (இந்தியா)திருவாரூர் மாவட்டம்
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
614 020

துளசேந்திரபுரம் (Thulasendrapuram) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[1] இது மன்னார்குடியிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னை இருந்து 300 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.[2]   2020 ஆம் ஆண்டில், அதன் மக்கள் தொகை சுமார் 350 ஆக இருந்தது வந்தது.[3]

அமெரிக்காவின் 49 ஆவது துணை சனாதிபதியாக இருந்த கமலா ஆரிசின் தாய்வழி தாத்தாவாக இருந்த இந்திய தொழில்முறை அரசு ஊழியரான பி. வி. கோபாலனின் ஊர் துளசேந்திரபுரம் ஆகும்.[4] 2014 ஆம் ஆண்டில், கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக ஆரிசு பணியாற்றியபோது, சாஸ்தா தெய்வத்திற்கு இக்கிராமத்தின் கோயிலுக்கு ₹ 5,000 நன்கொடை அளித்தார், மேலும் அவரது பெயர் கோயிலின் நன்கொடையளிக்கும் பட்டியலில் பொறிக்கப்பட்டடுள்ளது.[2] 2020ஆம் ஆண்டில் அமெரிக்காவின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஆரிசு இக்கிராமத்தில் நன்கு புகழ் பெற்றார், மேலும் துளசேந்திரபுரம் மக்கள் அவரது வெற்றியை பட்டாசுகள் மற்றும் பிரார்த்தனைகளுடன் கொண்டாடினர்.[2][5][6]

2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆரிசு தனது ஜனாதிபதி பிரச்சாரத்தைத் தொடங்கியபோது, கிராமத்தின் முக்கிய இந்து கோவிலுக்கு வெளியே அவரை சித்தரிக்கும் ஒரு பெரிய பதாகையை இங்குள்ளவர்கள்நிறுவினர்.[7] தேர்தலுக்கு முன்பு, உள்ளூர் மக்கள் அணிதிரண்டு அய்யனார் கோவிலில் வெற்றிபெற பிரார்த்தனை செய்தனர்.[8]

கமலா ஆரிசு ஒருபோதும் துளசேந்திரபுரத்திற்குச் சென்றதில்லை, இங்கு தற்போது இவரது குடும்பத்தினர் வசிக்கவில்லை[8] இருப்பினும், இவர் குறிப்பாக கிராமத்தின் பெண்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றார், இவ்வூர் மக்கள் பொதுவாக இவரை மரியாதையின் அடையாளமாக "சகோதரி" அல்லது "தாய்" என்று குறிப்பிடுகிறார்கள்.[5][9] துளசேந்திரபுரத்தின் அரசியல்வாதியான அருள்மொழி சுதாகர், ஆரிசை "நிலத்தின் மகள்" என்று விவரித்தார்.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Thulasendirapuram" (PDF). List of Village Panchayats in Tamil Nadu. Retrieved 2020-11-08.
  2. 2.0 2.1 2.2 Sankaran, Vishwam (2024-08-01). "How Kamala Harris is still the pride of her Indian ancestral village". The Independent. Archived from the original on 2024-08-06. Retrieved 2024-08-11.
  3. "Kamala Harris' ancestral home celebrates her US election victory". South China Morning Post. 2020-11-08. Archived from the original on 2024-08-11. Retrieved 2024-08-11.
  4. Petersson, Torbjörn (2024-08-11). "Byborna hoppas att Kamala Harris ärvt morfaderns kyla". Dagens Nyheter (in ஸ்வீடிஷ்). Archived from the original on 2024-08-11. Retrieved 2024-08-11. Hennes morfar Painganadu Venkatraman Gopalan Iyer – ofta förkortat PV Goplan – (född 1911) flyttade från Thulasendrapuram, gifte sig och fick fyra barn.
  5. 5.0 5.1 Venkatasubramanian, Saradha. "Kamala Harris: The tiny Indian village claiming her as its own". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2024-10-31.
  6. Aijaz Rahi (8 November 2020). "Firecrackers and prayers as Indians celebrate Harris' win". AP. https://apnews.com/article/kamala-harris-grandfather-india-hometown-d4eef836a2d67ac5d2417a49eea86a42. பார்த்த நாள்: 9 November 2020. 
  7. Ray, Siladitya. "Kamala Harris' Ancestral Village In India Celebrates Her Presidential Run With Prayers, Sweets And Cautious Excitement". Forbes (in ஆங்கிலம்). Retrieved 2024-10-31.
  8. 8.0 8.1 "A tiny village in India where Kamala Harris has ancestral roots is praying for her victory". AP News (in ஆங்கிலம்). 2024-11-05. Retrieved 2024-11-06.
  9. Ray, Siladitya. "Kamala Harris' Ancestral Village In India Celebrates Her Presidential Run With Prayers, Sweets And Cautious Excitement". Forbes (in ஆங்கிலம்). Retrieved 2024-10-31.
  10. Khandekar, Omkar (August 22, 2024). "In Kamala Harris' ancestral village in India, people cheer her U.S. presidential bid". NPR. Retrieved October 30, 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசேந்திரபுரம்&oldid=4199380" இலிருந்து மீள்விக்கப்பட்டது