உள்ளடக்கத்துக்குச் செல்

கமலா ஆரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமலா ஆரிசு
Kamala Harris
ஐக்கிய அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவர் (49-வது)
பதவியில்
சனவரி 20, 2021
குடியரசுத் தலைவர்ஜோ பைடன்
Succeedingமைக் பென்சு
கலிபோர்னியாவுக்கான அமெரிக்க மேலவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
சனவரி 3, 2017
Serving with டயான் பைன்சுடைன்
முன்னையவர்பார்பரா பாக்சர்
கலிபோர்னியாவின் 32-வது அரசுத் தலைமை வழக்குரைஞர்
பதவியில்
சனவரி 3, 2011 – சனவரி 3, 2017
ஆளுநர்செரி பிரவுன்
முன்னையவர்செரி பிரவுன்
பின்னவர்சேவியர் பெசேரா
சான் பிரான்சிஸ்கோவின் 27-வது மாவட்ட சட்டமா அதிபர்
பதவியில்
சனவரி 8, 2004 – சனவரி 3, 2011
முன்னையவர்டெரன்சு ஆலினன்
பின்னவர்சியார்ச் காசுகோன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கமலா தேவி ஆரிசு[a]

அக்டோபர் 20, 1964 (1964-10-20) (அகவை 60)
ஓக்லண்ட், கலிபோர்னியா, ஐ.அ.
அரசியல் கட்சிசனநாயகக் கட்சி
துணைவர்டக்லசு எம்கோஃப் (தி. ஆகத்து 22, 2014)
பெற்றோர்
உறவினர்மாயா ஹாரீஸ் (சகோதரி)
கல்வி
  • அவார்டு பல்கலைக்கழகம் (இளங்கலை)
  • கலிபோர்னியா பல்கலைக்கழகம் (முனைவர்)
கையெழுத்து
இணையத்தளம்பிரச்சார இணையதளம்

கமலா தேவி ஆரிசு (Kamala Devi Harris, கமலா ஹாரிஸ்[2] பிறப்பு: அக்டோபர் 20, 1964)[3] அமெரிக்க அரசியல்வாதியும், வழக்கறிஞரும், தற்போதைய அமெரிக்கத் குடியரசுத் துணைக் தலைவர் ஆவார். மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினரான இவர், 2021 சனவரி 20 இல் துணைக் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். இவரும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனும் 2020 குடியரசுத் தலைவர் தேர்தலில் நடப்புத் தலைவர் டோனால்ட் டிரம்ப்பையும், துணைத் தலைவர் மைக் பென்சையும் தோற்கடித்தனர். கமலா ஆரிசு 2017 முதல் கலிபோர்னியாவுக்கான அமெரிக்க மூதவை (மாநிலங்களவை ) உறுப்பினராக இருந்தவர். இந்தியத் தமிழ் மற்றும் ஆப்பிரிக்க-யமெய்க்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா பல்லின அமெரிக்கராவார்.[4] அமெரிக்க வரலாற்றில், கமலா ஆரிசு முதலாவது ஆசிய-அமெரிக்க, முதலாவது ஆபிரிக்க அமெரிக்க, மற்றும் முதலாவது பெண் துணைக் குடியரசுத் தலைவராக விளங்குவார்.[5] அத்துடன், இவர் அமெரிக்க வரலாற்றில், இத்தகைய அதியுயர் பதவி ஒன்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண்ணும் ஆவார்.

கலிபோர்னியா மாகாணத்தின் , ஆக்லாந்தில் பிறந்த கமலா ஆரிசு, அவார்டு பல்கலைக்கழகத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பயின்று சட்டக் கல்வியில் பட்டம் பெற்றார். இவர் தனது பணியை அலமேடா கவுண்டி உள்ளூர் அரசு வழக்குரைஞர் அலுவலகத்தில் ஆரம்பித்து, பின்னர் சான் பிரான்சிஸ்கோ மாவட்ட, மற்றும் சான் பிரான்சிசுக்கோ நகர அரசு வழக்குரைஞர் அலுவலகத்திலும் பணியாற்றினார். 2003 இல், சான் பிரான்சுக்கோ மாவட்ட தலைமை அரசு வழக்குரைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 இலும், பின்னர் 2014 இலும் கலிபோர்னியா மாநில தலைமை அரசு வழக்குரைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2016 அமெரிக்க மேலவைத் தேர்தலில் லொரெட்டா சான்செசைத் தோற்கடித்து கலிபோர்னியாவுக்கான மேலவை உறுப்பினரானார். இதன் மூலம், கலிபோர்னியா மாகாணத்திலிருந்து அமெரிக்க மேலவைக்குத் (மாநிலங்களவை) தெரிவான முதலாவது ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண், மற்றும் முதலாவது தெற்காசிய-அமெரிக்கர் என்ற சிறப்புகளையும் பெற்றார்.[6][7] மேலவை உறுப்பினராக, சுகாதார சீர்திருத்தம், கட்டுப்பாட்டுப் பொருட்கள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்குதல், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கான குடியுரிமைக்கான வழிவகைகள், தாக்குதல் ஆயுதங்களுக்கு தடை, மற்றும் வளர்விகித வரி சீர்திருத்தம் ஆகியவற்றுக்கு ஆதரவளித்தார். பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிரட் கவானா என்பவரை குடியரசுத் தலைவர் டோனால்ட் டிரம்ப் உச்சநீதிமன்றத் இணை நீதிபதி பதவிக்கு வேட்பாளராக அறிவித்த போது, இவர் அவருக்கு எதிராகக் குரல் கொடுத்தது மூலம் நாட்டளவில் அறியப்பட்டார்.[8]

2020 குடியரசுத் தலைவர் தேர்தலில் தேர்தலில் போட்டியிடுவதற்கான மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராக உட்கட்சி தேர்தலில் கமலா போட்டியிட்டார். 2019 டிசம்பர் 3 இல் தொடர் நிதிப் பற்றாக்குறை காரணமாக தனது பிரச்சாரத்தை முடிப்பதற்கு முன்னர் கருத்துக்கணிப்புகளில் சில காலம் இவர் முன்னணியில் இருந்தார்.[9] 2020 ஆகத்து 11 அன்று 2020 தேர்தலில் ஜோ பைடனின் துணைக் குடியரசுத் தலைவர்- வேட்பாளராக கமலா அறிவிக்கப்பட்டார். 2020 நவம்பர் 3ஆம் நாள் குடியரசு தலைவர், துணைத் தலைவருக்கான பொது தேர்தல் நடந்தது. நான்கு நாட்கள் இழுபறிக்கு பின் நவம்பர் 7 ஆம் நாள், பிடென்-ஆரிசு இணை 306 இடங்களையும், அப்போது பதவியிலிருந்த டிரம்ப்-பென்சு இணை 232 இடங்களையும் கைப்பற்றி இருந்தனர். மொத்தம் 538 இடங்கள் கொண்ட தேர்தல் சபையில் பெரும்பான்மையை வென்ற பிடென்-ஆரிசு இணை முறையே குடியரசு தலைவராகவும், குடியரசு துணை-தலைவராகவும் வென்றதாக அறிவிக்கப்பட்டது. 2021 ஜனவரி ஆறாம் நாள் அமெரிக்க தேசிய சபையும் இந்த தேர்தல் முடிவை அங்கீகரித்தது. அமெரிக்க மாநிலங்கள் சபை உறுப்பினர் பதவியை விட்டு ஜனவரி 18 2021 அன்று கமலா ஆரிசு விலகினார். 2021 ஜனவரி 20ஆம் நாள், கமலா ஆரிசு அமெரிக்காவின் முதல் பெண் துணை-குடியரசு தலைவராக வாசிங்டனில் பதவி ஏற்றார். இவர் 49-வது துணை குடியரசு தலைவர் ஆவார். ஐரோப்பியரல்லாத வம்சாவளியைச் சேரா ஒருவர் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும், முன்னதாக 1929 முதல் 1932 வரை சார்லசு கேர்ட்டிசு அமெரிக்க துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார்[10]. குடியரசு துணை தலைவர் என்ற முறையில், அவர் முன்பு பதவி வகித்த அமெரிக்க மாநிலங்கள் சபையின் (பகுதி நேர ) தலைவராகவும் கமலா பணியாற்றுவார்.

இளமைக்காலம்

[தொகு]

கமலா 1964 அக்டோபர் 20 இல், கலிபோர்னியா, ஓக்லாந்தில் பிறந்தார்.[11] தாயார் சியாமளா கோபாலன், ஓர் உயிரியலாளர், மார்பகப் புற்றுநோய் புரோஜெஸ்ட்டிரோன் ஏற்பி மரபணு ஆய்வில் ஈடுபட்டவர்.[12] சியாமளா 1958 இல் தனது 19-வது அகவையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து மற்றும் உட்சுரப்பியலில் பட்டப் படிப்புக்காக தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா வந்து,[13][14] தனது முனைவர் பட்டத்தை 1964 இல் பெற்றார்.[15] கமலாவின் தந்தை டொனால்டு ஜே. ஹாரிசு யமேக்காவைச் சேர்ந்தவர். இவர் யமேக்காவில் இருந்து 1961 இல் அமெரிக்கா வந்து கலிபோஒர்னியா பல்கலைக்கழகத்தில் 1964 இல் பொருளியலில் முனைவர் பட்டம் பெற்று, இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்.[16][17]

மேற்கு பெர்க்லி, பான்குரொஃப்ட் சாலையில் கமலா வசித்து வந்த வீடு

கமலா தனது தங்கை மாயாவுடன் கலிபோர்னியாவில் பெர்க்லி நகரில் வசித்து வந்தார்.[18][19] இவர் வசித்த மேற்கு பெர்க்லியில் உள்ள பான்குரொஃப்ட் சாலை குறிப்பிடத்தக்க அளவு கறுப்பினத்தவர்கள் வாழ்ந்துவந்த இடமாகும்.[20]

மேலவை உறுப்பினர்

[தொகு]

கமலா ஹாரிஸ், மக்களாட்சிக் கட்சியின் சார்பாக, கலிஃபோர்னியாவிலிருந்து, நாட்டின் மேலவை உறுப்பினராக நவம்பர் 2016இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[21] [22] இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். கமலா அமெரிக்க தேசிய துணை-குடியரசு தலைவராய் தேர்வானதால், தன் மேல் சபை உறுப்பினர் பதவியை விட்டு ஜனவரி 18 2021அன்று விலகினார். துணை-குடியரசு தலைவராய் கமலா இருப்பதால், அதே மேல் சபையின் தலைவராய் தற்போது கமலா உள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
குறிப்புகள்
  1. பிறப்பின் போது, இவரது பெயர் கமலா ஐயர் ஆரிசு. இது இரண்டு கிழமைகளின் பின்னர் திருத்தப்பட்டது.[1]
மேற்கோள்கள்
  1. Debolt, David (August 18, 2020). "Here's Kamala Harris' birth certificate. Scholars say there's no VP eligibility debate". The Mercury News. The MediaNews Group Inc.
  2. "Tucker Carlson doesn't pronounce Kamala Harris's name correctly, and doesn't seem to care". National Post. August 12, 2020. https://nationalpost.com/news/world/tucker-carlson-doesnt-pronounce-kamala-harriss-name-correctly-and-doesnt-seem-to-care. 
  3. United States Congress. "கமலா ஆரிசு (id: H001075)". Biographical Directory of the United States Congress. பார்க்கப்பட்ட நாள் May 20, 2020.
  4. Horowitz, Juliana Menasce; Budiman, Abby (2020-08-18). "Key findings about multiracial identity in the U.S. as Harris becomes vice presidential nominee". Pew Research Center (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-08.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. "Kamala Harris Makes History as First Female American Vice President". StamfordAdvocate (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-11-08. பார்க்கப்பட்ட நாள் 2020-11-08. Harris is the first female, first Black person, first Indian American and first Asian American person to be elected to the role.{{cite web}}: CS1 maint: url-status (link)
  6. "Kamala D. Harris: US Senator from California". United States Senate. Archived from the original on அக்டோபர் 14, 2020. பார்க்கப்பட்ட நாள் July 29, 2020. In 2017, Kamala D. Harris was sworn in as a United States senator for California, the second African-American woman and first South Asian-American senator in history. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  7. Weinberg, Tessa; Palaniappan, Sruthi (December 3, 2019). "Kamala Harris: Everything you need to know about the 2020 presidential candidate". ABC News. பார்க்கப்பட்ட நாள் August 10, 2020. Harris is the daughter of an Indian mother and Jamaican father, and is the second African-American woman and first South Asian-American senator in history.
  8. Viser, Matt (January 21, 2019). "Kamala Harris enters 2020 Presidential Race". தி வாசிங்டன் போஸ்ட். https://www.washingtonpost.com/politics/kamala-harris-enters-2020-presidential-race/2019/01/21/d68d15b2-0a20-11e9-a3f0-71c95106d96a_story.html. 
  9. Herndon, Astead; Goldmacher, Shane (December 3, 2019). "Kamala Harris Is Dropping Out of 2020 Race". The New York Times. https://www.nytimes.com/2019/12/03/us/politics/kamala-harris-campaign-drops-out.html. 
  10. Solender, Andrew (August 12, 2020). "Here Are The ‘Firsts’ Kamala Harris Represents With VP Candidacy". Forbes இம் மூலத்தில் இருந்து September 2, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200902023222/https://www.forbes.com/sites/andrewsolender/2020/08/12/here-are-the-firsts-kamala-harris-represents-with-vp-candidacy/. "Harris would not be the first person of color to serve as vice president. That honor belongs to Charles Curtis, President Herbert Hoover’s No. 2." 
  11. Kim, Catherin; Stanton, Zack (August 11, 2020). "55 Things You Need to Know About Kamala Harris". Politico (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் August 23, 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  12. "In Memoriam: Dr. Shyamala G. Harris". Breast Cancer Action (in அமெரிக்க ஆங்கிலம்). June 21, 2009. பார்க்கப்பட்ட நாள் January 23, 2019.{{cite web}}: CS1 maint: url-status (link)
  13. Travernise, Sabrina (August 15, 2020). "Kamala Harris, Daughter of Immigrants, Is the Face of America's Demographic Shift". New York Times. https://www.nytimes.com/2020/08/15/us/second-generation-immigrant-kamala-harris.html. 
  14. Bengali, Shashank; Mason, Melanie (October 25, 2019). "The progressive Indian grandfather who inspired Kamala Harris". Los Angeles Times. https://www.latimes.com/politics/story/2019-10-25/how-kamala-harris-indian-family-shaped-her-political-career. 
  15. Biswas, Soutik (August 11, 2020). "Biden's VP pick: Why Kamala Harris embraces her biracial roots". BBC. https://www.bbc.com/news/election-us-2020-53745141. 
  16. "PM Golding congratulates Kamala Harris-daughter of Jamaican – on appointment as California's First Woman Attorney General". Jamaican Information Service. December 2, 2010 இம் மூலத்தில் இருந்து ஜனவரி 15, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120115023007/http://www.jis.gov.jm/news/opm-news/26176-officePM-pm-golding-congratulates-kamala-harris-daughter-of-jamaican-on-appoint. 
  17. "Stanford University – Department of Economics". web.stanford.edu. பார்க்கப்பட்ட நாள் May 19, 2020.
  18. Horwitz, Sari (February 27, 2012). "Justice Dept. lawyer Tony West to take over as acting associate attorney general". The Washington Post. https://www.washingtonpost.com/politics/justice-dept-lawyer-tony-west-to-take-over-as-acting-associate-attorney-general/2012/02/24/gIQAqyBOeR_story.html. 
  19. Martinez, Michael (October 23, 2010). "A 'female Obama' seeks California attorney general post". CNN. https://edition.cnn.com/2010/POLITICS/10/22/california.kamala.harris.profile/. 
  20. Dale, Daniel (June 29, 2019). "Fact check: Kamala Harris was correct on integration in Berkeley, school district confirms". CNN. https://www.cnn.com/2019/06/28/politics/fact-check-kamala-harris-busing-in-berkeley/index.html. 
  21. வரலாற்று சாதனை
  22. Kamala Harris, a ‘Top Cop’ in the Era of Black Lives Matter

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கமலா ஆரிசு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_ஆரிசு&oldid=4138425" இலிருந்து மீள்விக்கப்பட்டது