உள்ளடக்கத்துக்குச் செல்

தி மாங்க் அண்ட் தி கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி மாங்க் அண்ட் தி கன்
திரைப்பட வெளியீட்டி சுவரிதழ்
இயக்கம்பாவோ சோய்னிங் டோர்ஜி
தயாரிப்பு
  • பாவோ சோய்னிங் டோர்ஜி
  • ஃபெங் ஹ்சு
  • ஸ்டெபானி லாய்
  • ஜீன்-கிறிஸ்டோப் சைமன்
  • ஜெனி பென்னிங்டன்
கதைபாவோ சோய்னிங் டோர்ஜி
இசைஃபிரடெரிக் அல்வாரெஸ்
நடிப்பு
auto_awesome

இம்மொழியிலிருந்து மொழிபெயர்: காக்போராக் 157 / 5,000

  • டான்டின் வாங்சுக்
  • டெகி லமோ
  • பெமா சாங்மோ ஷெர்பா
  • டான்டின் சோனம்
  • ஹாரி ஐன்ஹார்ன்
  • சோயிங் ஜாட்ஷோ
  • டான்டின் ஃபப்ஸ்
  • யுஃபெல் லெண்டப் செல்டன்
  • கெல்சங் சோஜெய்
ஒளிப்பதிவுஜிக்மே டென்சிங்
படத்தொகுப்புஇசாவோ யுன்-கு
கலையகம்
  • பிலிம்ஸ் பூட்டிக்
  • டாங்பு டிங்பு: ஏ 3 பிக்ஸ் புரொடக்சன்ஸ்
  • ஜர்னி டு தி ஈஸ்ட் பிலிம்ஸ்
  • டாம்சன் பிலிம்ஸ்
  • குலோசர்
  • என்8
  • உட்டன் டிரைலர் புரோடக்ட்ஸ்
விநியோகம்
  • பிலிம்ஸ் பூட்டிக் (உலகளவில்)[1]
  • இம்பேக்ட் பிலிம்ஸ் (இந்தியத் துணைக்கண்டம்)[2]
  • பிரமிடு டிஸ்ட்ரிபியூசன் (பிரான்சு)[2]
  • ரோட்சைட் அட்ராக்சன்ஸ் (வட அமெரிக்கா)[3]
வெளியீடுசெப்டம்பர் 1, 2023 (2023-09-01)(டெல்லூரைடு)
அக்டோபர் 17, 2023 (பூட்டான்)
பெப்ரவரி 9, 2024 (அமெரிக்கா)
சூன் 26, 2024 (பிரான்சு)
ஓட்டம்107 நிமிடங்கள்
நாடு
  • பூடான்
  • தைவான்
  • பிரான்ஸ்
  • அமெரிக்கா
  • ஆங்காங்
மொழி
மொத்த வருவாய்$480 ஆயிரம்[4][5]

தி மாங்க் அண்ட் தி கன் (The Monk and the Gun) என்பது 2023 ஆண்டு வெளியான நாடகத் திரைப்படமாகும். இதை பாவோ சோய்னிங் டோர்ஜி எழுதி, இணைந்து தயாரித்ததுள்ளார்.[6] இப்படத்தில் டான்டின் வாங்சுக், டெக்கி லாமோ, பெமா ஜாங்மோ ஷெர்பா, டான்டின் சோனம், ஹாரி ஐன்ஹார்ன், சோயிங் ஜாட்ஷோ, டான்டின் ஃபுப்ஸ், யுஃபெல் லென்டுப் செல்டன், கெல்சாங் சோஜே ஆகியோர் நடித்துள்ளனர்.[7] இது பூட்டான், தைவான், பிரான்ஸ், அமெரிக்கா, ஆங்காங் ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஒரு சர்வதேச கூட்டு தயாரிப்பு ஆகும்.[8]

தி மாங்க் அண்ட் தி கன் 50வது டெல்லூரைடு திரைப்பட விழாவில் 1 செப்டம்பர் 2023 அன்று திரையிடப்பட்டது. இது 96வது அகாடமி விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்காக பூட்டான் சார்பாக கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டது.[9] மேலும் திசம்பர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற 15 படங்களில் இதுவும் ஒன்றாகும்.[10] இப்படம் வட அமெரிக்காவில் 2 பிப்ரவரி 2024 அன்று திரையரங்குகளில் வெளியானது. மேலும் 26 யூன் 2024 அன்று பிரான்சில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

கதை

[தொகு]

2006 ஆம் ஆண்டில் பூட்டான் தனது ஜனநாயக தேர்தலை நடத்த தயாராகும்போது, பூட்டானிய அரசாங்கம் ஒரு ஒரு போலி முன்னோட்டத் தேர்தலை நடத்துகிறது. உரா என்ற ஊரில் உள்ள, ஒரு வயதான லாமா தன் சீடனான இளம் துறவி தாஷிக்கு வரவிருக்கும் எழுச்சிக்கான தயாரிப்புக்காக சில துப்பாக்கிகளை வாங்கும்படி அறிவுறுத்துகிறார். இதற்கிடையில், அமெரிக்க பயணியான ரான் கோல்மேன் ஆயுத சேகரிப்பாளருக்காக ஒரு பழங்கால துப்பாக்கியை வாங்குவதற்காக நாட்டிற்கு வருகிறார் - அந்த துப்பாக்கி தற்செயலாக துறவியின் கைகளில் கிடைக்கிறது.[11][12]

நடிகர்கள்

[தொகு]
  • ரான் கோல்மனாக ஹாரி ஐன்ஹார்ன்
  • தாஷியாக தந்தின் வாங்சுக்
  • டிஷோமோவாக டெகி லாமோ
  • ஷெரிங் யாங்டனாக பெமா ஜாங்மோ ஷெர்பா
  • பென்ஜியாக டான்டின் சோனம்
  • சோஃபலாக சோயிங் ஜாட்ஷோ
  • பர்பாவாக டான்டின் ஃபப்ஸ்
  • யுபெல் லென்டப் செல்டன்
  • கெல்சங் சோஜெய்

வெளியீடு

[தொகு]

தி மாங்க் அண்ட் தி கன் 50வது டெல்லூரைடு திரைப்பட விழாவில்,[13] செப்டம்பர் 1, 2023 அன்று அதன் உலகத் திரையிடலுக்கு திரையிடப்பட்டது. பின்னர் 48வது டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் செப்டம்பர் 9 அன்று திரையிடப்பட்டது.[14][15] இது 28வது பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் 'ஏ விண்டோ ஆன் ஏசியன் சினிமா' பிரிவில் திரையிட அழைக்கப்பட்டு 2023 அக்டோபரில் திரையிடப்பட்டது..[16]

ரோட்சைட் அட்ராக்ஷன்ஸ் திரைப்பட விநியோக நிறுவனமானது படத்தின் வட அமெரிக்க விநியோக உரிமையை 2023 அக்டோபரில் பெற்றது.[17] இப்படமானது வட அமெரிக்காவில் 2024, பிப்ரவரி அன்று வெளியானது.[18]

இந்த படம் 2 மே 2024 அன்று இத்தாலியில் வெளியானது (3 ஜூன் 2024 நிலவரப்படி $315 ஆயிரம் வசூலித்தது). இது பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் 26 ஜூன் 2024 அன்றும், ஜெர்மனியில் ஆகத்து 1 அன்றும், ஸ்பெயினில் ஆகத்து 9 அன்றும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dams, Tim. "Films Boutique boards latest film from Bhutanese director of Oscar-nominated 'Lunana: A Yak In The Classroom' (exclusive)". Screen Daily (in ஆங்கிலம்). Archived from the original on 2023-11-11. பார்க்கப்பட்ட நாள் 2023-09-11.
  2. 2.0 2.1 Keslassy, Elsa (2023-10-26). "Bhutan's Oscar Entry 'The Monk and the Gun' Sells to Major Distributors Worldwide". Variety. Archived from the original on 2023-10-30. பார்க்கப்பட்ட நாள் 2023-10-31.
  3. Hammond, Pete (18 October 2023). "Roadside Attractions Takes North American Rights To Bhutan Oscar Entry 'The Monk And The Gun' Following Telluride and Toronto Premieres". Deadline Hollywood. Archived from the original on 18 October 2023. பார்க்கப்பட்ட நாள் 18 October 2023.
  4. "The Monk and the Gun (2023)". பாக்சு ஆபிசு மோசோ. ஐ. எம். டி. பி இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 7 June 2024.
  5. "The Monk and the Gun (2024)". த நம்பர்சு. நேஷ் இன்பர்மேசன் சர்விசசு, எல்.எல்.சி. பார்க்கப்பட்ட நாள் 7 June 2024.
  6. "First Trailer for Fascinating 'The Monk and the Gun' Film from Bhutan | FirstShowing.net". FirstShowing.net (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-09-03. Archived from the original on 2023-09-05. பார்க்கப்பட்ட நாள் 2023-09-11.
  7. "Bhutan Selects Pawo Choyning Dorji's 'The Monk and The Gun' as Oscar Entry for Best International Feature". VIMooZ (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-09-08. Archived from the original on 2023-10-08. பார்க்கப்பட்ட நாள் 2023-09-11.
  8. "The Monk and the Gun de Pawo Choyning Dorji (2023) – Unifrance". Unifrance. Archived from the original on 2023-09-08. பார்க்கப்பட்ட நாள் 2023-09-11.
  9. Goodfellow, Melanie (2023-09-08). "Oscars: Bhutan Submits Toronto Title 'The Monk And The Gun' For Best International Feature". Deadline (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2023-09-08. பார்க்கப்பட்ட நாள் 2023-09-11.
  10. Bergeson, Samantha (2023-12-21). "2024 Oscar Shortlists Unveiled: 'Barbie,' 'Poor Things,' 'Maestro,' and 'The Zone of Interest' Make the Cut". IndieWire (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-22.
  11. "The Monk and the Gun". Toronto International Film Festival (in ஆங்கிலம்). Archived from the original on 2023-09-16. பார்க்கப்பட்ட நாள் 2023-09-11.
  12. Thompson, Anne (2023-09-09). "Bhutan's Oscar Submission 'The Monk and the Gun' Captures an Evolving Nation at a Moment of Transition". IndieWire (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2023-09-10. பார்க்கப்பட்ட நாள் 2023-09-11.
  13. Thompson, Anne (2023-08-30). "2023 Telluride Film Festival Lineup Leans on Filmmakers Like Lanthimos, Fennell, Haigh, Triet, and More". IndieWire (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2023-09-20. பார்க்கப்பட்ட நாள் 2023-09-11.
  14. arnewsteam (2023-08-10). "TIFF Announces 2023 Centerpiece Program". Awards Radar (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2023-10-08. பார்க்கப்பட்ட நாள் 2023-09-11.
  15. Ramachandran, Naman (2023-08-10). "Agnieszka Holland, Wim Wenders, Aki Kaurismaki, Hamaguchi Ryusuke Feature in Toronto Centrepiece Program". Variety (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2023-08-18. பார்க்கப்பட்ட நாள் 2023-09-11.
  16. "The 28th Busan International Film Festival: Selection List". Busan International Film Festival (in ஆங்கிலம்). September 5, 2023. Archived from the original on September 15, 2023. பார்க்கப்பட்ட நாள் September 12, 2023.
  17. Hammond, Pete (18 October 2023). "Roadside Attractions Takes North American Rights To Bhutan Oscar Entry 'The Monk And The Gun' Following Telluride and Toronto Premieres". Deadline Hollywood. Archived from the original on 18 October 2023. பார்க்கப்பட்ட நாள் 18 October 2023.
  18. "The Monk and The Gun - Official Trailer", IGN (in ஆங்கிலம்), 2023-12-07, பார்க்கப்பட்ட நாள் 2023-12-27

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_மாங்க்_அண்ட்_தி_கன்&oldid=4047205" இலிருந்து மீள்விக்கப்பட்டது