உள்ளடக்கத்துக்குச் செல்

சுடுகலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படைத்துறையினர், காவல்துறையினர் பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிமித் அண்ட் வெசன் சுழல் துப்பாக்கி.
சிகுப்புரோ வகைப் பகுதித் தன்னியக்கத் கைத்துப்பாக்கி
அமெரிக்க உலோவா (BB-61) ஓரிலக்கை முழு அகலவாக்கிலும் சுடுகிறது , வீக்குவெசு தீவு, பியூயெர்ட்டோ இரிகோ, 1 ஜூலை 1984.

சுடுகலன் (Firearm) என்பது, கட்டுப்பாடான வெடிப்பின் உதவியுடன், ஒற்றை எறிபொருளையோ அல்லது பல எறிபொருட்களையோ அதிவேகத்துடன் எறிவதற்குப் பயன்படும் குழாய்வடிவக் கருவியாகும்.[1] எறிபடை திண்மமாகவோ நீர்மமாகவோ வளிமமாகவோ அமையலாம். இது துப்பாக்கி, பீரங்கி குண்டுகளைப் போல விடுதலையாகவோ, மின்அதிர்ச்சி தரும் எறிபடை போலவோ திமிங்கல வேட்டை ஈட்டி போலவோ சிறைபடுத்தப்பட்டோ அமையலாம். "சுடுதல்" என்ற சொல்லால் குறிக்கப்படும் இந்த அதிவேக எறிதல், சுடுகலன்களுள் மட்டுப்படுத்தப்பட்ட இடத்தினுள் வெடிபொருட்கள் விரைவாக எரிவதன் மூலம் உண்டாகும் வளிம அழுத்தம் காரணமாக நடைபெறலாம் அல்லது வெளியில் உள்ள அமுக்க எந்திரத்தில் அடைக்கப்பட்ட உயரழுத்த வளிமம் எறிபடையுள்ள குழாயூடே செலுத்தப்படுவதாலோ நிகழலாம். குறுகிய பருமனில் அடைபட்ட வளிமம் குழாய் நீளத்தின் நெடுக எறிபடையை முடுக்கி, வளிமச் செயல்பாடு குழாய் முனையில் நின்றதும், அதன் பயணத் தொலைவை எட்டும் அளவுக்கு விரைவையூட்டுகிறது. மாறாக, எறிபடையின் முடுக்கத்தை மின்காந்தப் புல உருவாக்கத்தாலும் செய்யலாம். இதற்கு குழாய்க்குப் பதிலாக வழிகாட்டித் தடங்கள் பொருத்தப்படும்.

பழைய சுடுகலன்களில் வெடிமருந்து அல்லது வெடித்தூள் எனப்பட்ட உந்துபொருள் (propellant) பயன்பட்டது. தற்காலச் சுடுகலன்களில் புகையாத் தூள், கோர்டைட்டு (cordite) என்பவை போன்ற பிற உந்துபொருட்கள் பயன்படுகின்றன. வழுவழுப்பான துளை கொண்ட துப்பாக்கிகள் தவிர, பிற புது வகையான துப்பாக்கிகள் சுழல் குழாய்களைக் கொண்டுள்ளன. இது தோட்டா எனப்படும் எறிபொருளில் சுழற்சியை ஊட்டுவதால், எறிபொருள் (பறந்து) செல்லும் பொழுது மேம்பட்ட நிலைப்பாட்டோடு பறந்து செல்கின்றது.

துப்பாக்கியின் தோற்றமுள்ள கருவிகள் முதலில் சீனாவில் கி.பி 1000 ஆண்டளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த்த் தொழில்நுட்பம் 12 ஆம் நூற்றாண்டளவில் எஞ்சிய ஆசியா முழுவது பரவி விட்ட்து. ஐரோப்பாவை 13 ஆம் நூற்றாண்டில் அடைந்த்து.[2]

வரலாறு

[தொகு]
சீன யுவான் பேரரசின் கைத்துப்பாக்கி (1271-1368)
மேற்கு ஐரோப்பிய கைத்துப்பாக்கி, 1380
குதிரைவீரனின் ஓவியம், (1608)

மூங்கில் குழலில் வெடிமருந்தை வைத்து ஈட்டியை எய்த முதல் சுடுகலன் கி.பி 1000 அளவில் சீனாவில் தோன்றியது.[2] இதற்கு முன்பே சீனர்கள் 9 ஆம் நூற்றாண்டிலேயே வெடிமருந்தைக் கண்டுபிடித்துவிட்டனர்.[3][4][5]

மிகப் பழைய சுடுகலன் அல்லது கைத்துப்பாக்கி ஈட்டிமுனையில் கருந்தூள் அடைத்த குழல்கொண்ட தீயெறிவை அல்லது தழலெறிவை ஆகும்; எறிவையின் உருள்கலனில் சிலவேளைகளில் தழலோடு பொன்மத் துண்டுகளும் வைக்கப்பட்டன.[5][6] மிகப்பழைய வெடிமருந்துப் படைக்கலத்தின் ஓவியம் துன்குவாங்கைச் சேர்ந்த ஒரு பட்டுப் பதாகையில் தீட்டப்பட்ட தீயெறிவை ஆகும்.[7] கி.பி 1132 இல் தேவான் முற்றுகையை விவரிக்கும் தேவான் சவுசெங் லூ எனும் நூல் சாங் பேரரசின் படைகள் ஜுர்ச்சென் மக்களுக்கு எதிராக தீயெறிவைகளை பயன்படுத்தியதாகப் பதிவு செய்துள்ளது.[8]

நாளடைவில், எறிபொருளின் வெடிப்புத் திறனைப் பெருமமாக்க பொட்டாசிய நைற்றிரேற்றின் விகிதம் கூட்டப்படுகிறது.[6] இந்த உயர் வெடிப்புத் திறனை தாங்குவதற்காக, தாளாலும் மூங்கிலாலும் செய்த தீயெறிவைகள்/உருள்கலன்கள் பொன்மத்தால் செய்யப்படலாயின.[5] முழு வெடிப்புத்திறனையும் பயன்கொள்ள, உருள்கலனில் நெருக்கமாக நிரப்பப்பட்ட பொன்மத் துண்டுகள் பதிலீடு செய்யப்பட்டன.[6] இத்துடன் நாம் சுடுகலனின் மூன்று அடைப்படைகூறுபாடுகளைப் பெறுகிறோம். அவை வலிமையான பொன்ம உருள்கலன், உயர்வெடிதிறப் பொட்டாசியம் நைற்றிரேற்று வெடிமருந்து, வெடிமருந்தின் முழு எறிதிறனையும் பயன்கொள்ளவல்ல உருள்கலனை முழுமையாக நிரப்பும் எறிகுண்டுகள் என்பனவாகும்.[9]

ஐரோப்பாவுக்கு வெடிமருந்து நடுவண் கிழக்குப் பகுதி வழியாக பட்டுச்சாலையூடாக வந்த்தாக ஒரு கருதுகோள் கூறுகிறது. மற்றொன்று, வெடிமருந்து 13 ஆம் நூற்றாண்டின் மங்கோலிய முற்றுகை வழியாக ஐரோப்பாவில் பரவியது எனக் கூறுகிறது.[10][11] ஆங்கிலேயத் தனியார் அலமாரிப் பொருள்களில் 1346 இல் இரேபில்டிசு எனும் துப்பாக்கி குறிப்பிடப்படுகிறது, கைப்பற்ரிறி துப்பாக்கிகள் 1346 ஆம் ஆண்டு கலைசு முற்றுகையில் ஆங்கிலேயரால் பயன்படுத்தப்பட்டுள்ளன.[12] ஐரோப்பாவில் கிடைத்திருக்கும் மிகப் பழைய சுடுகலன் [தெளிவுபடுத்துக] எசுதொனியாவின் ஓதெப்பாவில் கிடைத்ததே ஆகும். இதன் காலம் குறைந்தது 1396 ஆகும்.[13]

ஐரோப்பாவில் 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிறிய கைக்கு அடக்கமான துப்பாக்கிகள் உருவாக்கப்பட்டன. இவற்றின் துளைவாய்கல் வழுவழுப்பாக அமைந்தன. 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்டோமன் பேரரசு காலாட்படையின் ஆயுதங்களாக பயன்படுத்தியுள்ளது.

கேட்லிங் சுடுகலன் தான் முதல் வெற்றிமிக்க வேகமான சுடுகலனாகும். இது இரிச்சர்டு கேட்லிங் அவர்களால் புனையப்பட்டது. இது களத்தில் 1860 களில் நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போரில் பயன்படுத்தப்பட்டது.

தனிப் படைவீர்ர் ஒருவரால் இயக்கவல்ல உலகின் முதல் எந்திரத் தகரி (கைத்துப்பாக்கி குண்டுகளைத் தன்னியக்கமாகச் சுடும் சுடுகலன்) திடோடோர் பெர்குமன் என்பவரால் புதிதாகப் புனையப்பட்ட MP18.1 எனும் படைக்கலனாகும். இது முதல் உலகப் போரின்போது 1918 இல் செருமனி படையால் இயக்கப்பட்டது. இது குழிப்பள்ள சிறப்புவகை அழிபடைஞரால் இயக்கப்பட்டது.

உலகின் முதல் முற்றுகைச் சுழல்துப்பாக்கி இரண்டாம் உலகப் போரில் செருமானியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது StG44 எனப்பட்டது. இது நீள நெடுக்கச் சுழல் துப்பாக்கி, எந்திரத் தகரி, துனை எந்திரத் தகரி ஆகிய மூன்றன் தகவுகளையும் ஒருங்கிணைத்த முதல் சுடுகலனாகும். இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் எறிபடைக்ளுக்கு மாற்றாக ஆற்றல் கற்றைகளால் சுடும் சுடுகலன் உருவாக்கப்பட்டது. இது வெடிமருந்தைப் பயன்படுத்தாத சுடுகலனும் ஆகும்.

சுடும் நெறிமுறை

[தொகு]

உயர்விரைவு வரும்வரையில் குண்டைக் குழலில் நகர்த்த பெரும்பாலான சுடுகலன்கள் அமுக்கக் காற்றைப் பயன்படுத்துகின்றன. இதற்கு மாறாக வேறு முறைகளில் செயல்படும் கருவிகளும் சுடுகலன்கள் என்றே அழைக்கப்படுகின்றன.Iசுடுகலன்களில் உயர் அழுத்த வளிமம் வெடிமருந்து எரிதலால் உருவாகிறது. இது உள் எரி பொறி நெறிமுறையைப் போன்றதே. சுடுகலனில் குண்டு குழாயில் இருந்து வெளியேற, உள் எரி பொறியில் உந்துலக்கை தன் இயக்கத்தை அதன் பிற பகுதிகளுக்கு மாற்றியதும் உருளையின் கீழே இறங்குகிறது. உள் எரி பொறியி எரிதல் ஆற்ரலை வெடிப்பின்றி விரிதலால் பரிமாறுதல் போலவே உகந்தநிலை வெடிமருந்து இயக்கியின் எரிமத்தைப் போலவே வெடிப்பை குழலில் தடுக்கிறது. வெடிப்பில் உருவாகும் ஆற்றல் அதிர்ச்சி அலைகளாகி அவை ஆற்றலை வளிமத்தில் இருந்து குழலுக்கு பரிமாறி அதை சூடாக்கவோ சிதையவோ செய்யும் வாய்ப்புள்ளது. குண்டை வெளியே கொண்டுசென்று எறியாது. இத்தகைய உயர் வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் உள்ள அதிர்ச்சி அலைகள் எந்தவொரு குண்டையும் விட வேகமாக இயங்கும். எனவே குழலை விட்டு அவை பேரோசையுடன் வெளியேறும். இவை குண்டின் விரைவைக் கூட்டுவதில்லை.

உறுப்புகள்

[தொகு]

உருள்கலன்

[தொகு]
105 மி.மீ சுழல்புரி ,அரசு படைக்கலன் L7 வகைத் தகரிச் சுடுகலன்.

உருள்கலன்கள் (குழல்கள்) அருள்காடிகளோ கோணங்களோ அமைந்த உட்புரியுடன் உள்ளவற்றையும் உள்ளடக்கும். இது எறிபடைகள் தற்சுழற்சிவழி நிலைப்புற உதவுகிறது. சீரான உட்துளைக்குள் வெறுமுறைகளில் எறிபடி நிலைப்பை அடையும்போது உட்துளைக்குள் புரிகள் தேவைப்படுவதில்லை. சுடுகலன்களின் வேறுபாடுகளை அறிய, வழக்கமாக உருள்கலத்தின் உட்துளை விட்டமும் எறிபடை அல்லது குண்டின் உருவளவும் பயன்படுகின்றன. உட்துளை விட்டம் பலவழிகளில் தரப்படுகிறது.

எறிபடை

[தொகு]

சுடுகல எறிபடை, குண்டு போல எறிகூடு அல்லது வெடிகூடு போன்ற புறக்கூட்டுடன் தனி உறுப்படியாகவோ sub-caliber எறிபடை, sabot போல சிக்கலான எறிபடையாகவோ அமையலாம். உந்துபொருளாக காற்றோ, வெடிக்கும் திண்மமோ, வெடிக்கும் நீர்மமோ அமையலாம். கொட்புத்தாரைக் கலனிலும், பிறவகைக் கலன்களிலும் அமைவதுபோல உந்துபொருளும் எறிபடையும் ஒன்றேயாகி விடலாம்.

கலைச்சொல்

[தொகு]

எறிகலன் என்பது ஏரிபடை வீசும் எந்தவகை ஆயுதத்தையும் குறிப்பிடலாம். இதில் பெரிய எந்திரத் தகரி முதல் கைத்துப்பாக்கி வரை அனைத்துச் சுடுகலன்களும் அடங்கும்.[14] எறிகலன் அல்லது எறிவை எனும் சொல் எறிதல் போன்ற எந்தவொரு விளைவை ஏற்படுத்தும் கருவியையும் சுட்டலாம்.

எறிகலன், சுடுகலன் இரண்டும் மாறிமாறி வழக்கில் வழங்குவதும் உண்டு. canon எனும் ஆங்கிலச் சொல் பழம்பிரெஞ்சு மொழியில் இருந்து பெறப்பட்டதாகும். இது இத்தாலிய மொழியில் நீண்ட குழல் எனும் பொருளுடைய cannone எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். இதுவும் இலத்தீன மொழியில் கொம்பு அல்லது நாணல் எனும் பொருளுடைய canna எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ளது.[15] அண்மை ஆய்வுகள் "gun" எனும் ஆங்கிலச் சொல் போர்வாள் எனும் பொருளுடைய நோர்சு பெண்ணின் பெயரான "Gunnildr" எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கின்றன. இச்சொல் "Gunna" என சுருக்கி அழைக்கப்படும்.[16] "gonne" எனும் சொல்லின் மிகப் பழைய பயன்பாடு 1339 இல் ஓர் இலத்தீன ஆவணத்தில் பதிவாகியுள்ளது. சம காலத்திலேயே "schioppi" (Italian translation-"thunderers"), "donrebusse" (Dutch translation-"thunder gun")ஆகிய சொற்களும் gun எனும் சொல்லுக்கு நிகராகப் பயனில் இருந்துள்ளன. இது ஆங்கிலத்தில் "blunderbuss" என வழங்கப்பட்டது.[16] பீரங்கிப் படையினர் "gonners" எனவும் "artillers" எனவும் அழைக்கப்பட்டுள்ளனர்[17]

வகைகள்

[தொகு]

படைக்கல வகைகள்

[தொகு]

எந்திரச் சுடுகலன்கள்

[தொகு]
The Heckler & Koch MP5 submachine gun is widely used by law enforcement tactical teams and military forces.

கைத்துப்பாக்கிகள்

[தொகு]

தன்னியக்கச் சுடுகலன்கள்

[தொகு]

பீரங்கி வகைகள்

[தொகு]

தகரி வகைகள்

[தொகு]

வேட்டையாடல் வகைகள்

[தொகு]

பாதுகாப்பு வகைகள்

[தொகு]

பயிற்சி, பொழுதுபோக்கு வகைகள்

[தொகு]

ஆற்றல் வகைகள்

[தொகு]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Chambers Dictionary, Allied Chambers - 1998, "gun", page 717
  2. 2.0 2.1 Judith Herbst, The History Of Weapons, Lerner Publications, 2005, page 8
  3. Buchanan 2006, ப. 2 "With its ninth century AD origins in China, the knowledge of gunpowder emerged from the search by alchemists for the secrets of life, to filter through the channels of Middle Eastern culture, and take root in Europe with consequences that form the context of the studies in this volume."
  4. Needleham 1986, ப. 7 "Without doubt it was in the previous century, around +850, that the early alchemical experiments on the constituents of gunpowder, with its self-contained oxygen, reached their climax in the appearance of the mixture itself."
  5. 5.0 5.1 5.2 Chase 2003, ப. 31–32
  6. 6.0 6.1 6.2 Crosby 2002, ப. 99
  7. Needham 1986, ப. 8–9
  8. (Needham 1986, ப. 222)
  9. Needham 1986, ப. 10
  10. (Norris 2003, ப. 11)
  11. (Chase 2003, ப. 58)
  12. David Nicolle, Crécy 1346: Triumph of the longbow, Osprey Publishing; June 25, 2000; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85532-966-9.
  13. "Ain Mäesalu: Otepää püss on maailma vanim". Archived from the original on 2012-06-14. பார்க்கப்பட்ட நாள் 2017-07-26.
  14. Gun - Definition - Merriam-Webster Dictionary
  15. Online Etymological Dictionary
  16. 16.0 16.1 Kelly 2004, ப. 31.
  17. Kelly 2004, ப. 30.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Firearms
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுடுகலன்&oldid=3581493" இலிருந்து மீள்விக்கப்பட்டது