திவா மக்கள் (இந்தியா)
மொத்த மக்கள்தொகை | |
---|---|
சுமார் 371,000 பேர்.[1] (2011 கணக்கெடுப்பின்படி) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இந்தியா (அசாம், மணிப்பூர், மேகாலயா) | |
மொழி(கள்) | |
திவா, அசாமி | |
சமயங்கள் | |
இந்து சமயம், கிறிஸ்தவம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
போடோ-கச்சாரி |
திவா மக்கள் (Tiwa people) என்பவர்கள் வடகிழக்கு இந்தியாவிலுள்ள அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் முக்கியமாக வசிக்கும் ஒரு இனக்குழுவினராகும். அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்தின் சில பகுதிகளிலும் இவர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் அசாம் மாநிலத்தில் ஒரு பட்டியல் பழங்குடியினராக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அசாமிய புரஞ்சி மொழியிலும் குடியேற்ற இலக்கியங்களிலும், [2] [3] இந்திய அரசியலமைப்பிலும் இவர்கள் லாலுங்குகள் என்று அழைக்கப்பட்டனர். இருப்பினும் இவர்கள் தங்களை திவா ("கீழே இருந்து உயர்த்தப்பட்டவர்கள்" என்று பொருள்) அழைக்க விரும்புகிறார்கள். இவர்களது அண்டைப் பகுதிகளில் சிலர் இன்னும் இவர்களை லாலுங் எனறே அழைக்கின்றனர். [4]
இவர்கள் மலைப்பகுதியில் வசிக்கும் திவா எனவும், பள்ளத்தாக்கில் வசிக்கும் திவா என இரண்டு துணைக் குழுக்களாக பிரிக்கப்பட்டு, மாறுபட்ட கலாச்சார அம்சங்களைக் கொண்டுள்ளனர்.[5] பா போராய் என்பவர் திவா சமூகத்தின் நிறுவனர் ("இந்ரோசிங் தேவ்ரி") ஆவார். இவர் திவா சமுதாயத்தின் கட்டுமானத்திற்கு நிறைய பங்களித்துள்ளார். இவர் "ஓ அங்கே திவா தோசிமா" என்ற திவா தேசிய கீதத்தையும் எழுதினார் .
ஜங்கல் பலாகு என்பது அசாமின் சுற்றுலாத் தலமாகும் [6] இது திவா மக்களின் நாட்டுப்புறக் கதைகளில் அடிக்கடி இடம் பெறுகிறது. இவர்கள் பிரிக்கப்படாத தர்ரங் மாவட்டத்தின் ( சோணித்பூர் ) கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தங்கள் தாயகத்திலிருந்து நீண்ட காலத்திற்கு முன்பு இங்கு குடிபெயர்ந்ததாக நம்புகிறார்கள். இவர்களின் அசல் தாயகத்தின் நினைவு இவர்களின் பிரபலமான பாடலான "லாலி-லை-ஹிலாலி" என்பதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஹிலாலியின் இந்த நாட்டுப்புறக் கதைகள் கச்சாரிகளால் அருணாச்சல மலைகள் மற்றும் இன்றைய சோணித்பூர், லக்கிம்பூர், தேமாஜி, தின்சுகியா, திப்ருகார், சிவசாகர் ஆகிய மாவட்டங்கள் உட்பட முழுப் பகுதியும் திக்ரோங் மற்றும் திகோவ் ஆறுகளால் சூழப்பட்டு ஒரு காலத்தில் ஒரே இராச்சியமாக இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது.
திவாக்கள் ஜெயந்தியா இராச்சியத்தின் கீழ் இருந்தனர். ஆனால் அது பிரதாப் சிங்காவின் ஆட்சியின் போது அஹோம் மேலாதிக்கத்தை ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. 1659 கி.பி.யில் ஜெயத்வாஜ் சிங்கவை கோபா ராஜா தனது அதிபதியாக ஏற்றுக்கொண்டார் , ருத்ர சிங்காவின் ஆட்சியின் போது ஜெயந்தியா இராச்சியத்தின் மீது படையெடுக்க கோபா ஒரு இராணுவ தளமாக பயன்படுத்தப்பட்டது. திவாக்களின் தலைவர் சிவசிங்கா ஆட்சியின் போது அஹோம் மேலாதிக்கத்தை அகற்ற முயன்றார். ஆனால் அவர் அடக்கப்பட்டார். இந்த மாநிலம் முன்பு போர்புகானின் கீழ் குவகாத்தி அரசாங்கத்தின் பிற்சேர்க்கையாக இருந்தது. ஆனால் மோமோரியா கிளர்ச்சியின் போது, இப்பகுதி ஜெயந்தியாக்களின் ஆட்சியின் கீழ் வந்தது. [7]
மலை திவாக்கள்
[தொகு]மேற்கு கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்தில் (அசாம்) அம்ரி தொகுதியின் உம்ஸ்வாய் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் "பண்டைய லாலுங் - திவா மலைகளின் மேற்குப் பகுதிகளிலும் ரி-போய் மாவட்டத்தின் (மேகாலயா) வடகிழக்கு மூலையிலும் மலை திவாக்கள் வாழ்கின்றனர். போடோ-காரோ குழுவின் திபெத்திய-பர்மிய மொழியின் ஒரு பகுதியான திவா மொழியை இவர்கள் பேசுகிறார்கள். இவர்கள் தந்தைவழிப் பெயரால் பயன்படுத்தும் குறிப்பிட்ட பெயர்களால் அங்கீகரிக்கப்பட்ட பலக் குலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களது வம்சாவளி அமைப்பை 'அம்பிலைனல்' என்று கூறலாம். [8] பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆண் தனது மனைவியின் குடும்பக் குடியேற்றத்தில் வாழச் செல்கிறார். மேலும் அவர்களின் குழந்தைகள் தாயின் குலத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இருப்பினும், சுமார் 30% குழுக்களில், பெண் தன் கணவனுடன் வாழவே வருகிறாள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், குழந்தைகள் தங்கள் தந்தையின் பெயரை எடுத்துக்கொள்கிறார்கள். இந்த போக்கு பெரும்பாலும் தந்தைவழி உறவு முறை அண்டைப்பகுதி மக்களின் செல்வாக்கின் கீழ் அதிகரித்து வருகிறது. திவாக்களில் சுமார் 97.98% இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள். மேலும் 1.71% பேர் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுகிறார்கள். [9] இவர்களது சமூகம் ஏழு பழைய கிராமங்களைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது, இது அதன் அரசியல் மற்றும் சடங்கு மையமாக உள்ளது. அவர்கள் ஒவ்வொருவரும் குடியேற்றங்களின் வலையமைப்பிற்காக நீதித்துறை மற்றும் மதப் பணிகளைச் செய்யும் ஒரு தலைவரை ( லோரோ ) அடைக்கிறார்கள். பழைய கிராமங்கள் அவற்றின் தலைவர் தங்குமிடத்தால் ( ஷாமதி ) வகைப்படுத்தப்படுகின்றன.
சமவெளி திவாக்கள்
[தொகு]சமவெளி திவாக்கள் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கின் தெற்குக் கரையின் சமவெளியில் வாழ்கின்றனர். பெரும்பாலும் மோரிகோன், நகோன், ஹொஜாய், காமரூப் ஊரக மாவட்டம் , சிவசாகர் மாவட்டம், ஜோர்ஹாட் மாவட்டம், சோணித்பூர் மாவட்டம், லக்கிம்பூர் மாவட்டம் மற்றும் தேமாஜி மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் இவர்கள் வசிக்கின்றனர். இவர்கள் அசாமியை தாய் மொழியாக பேசுகிறார்கள். இவர்களின் வம்சாவளி அமைப்பு நிச்சயமாக ஆணாதிக்கமானது. இவர்களின் தந்தைவழி பெயர்கள் இவர்களின் குலப் பெயர்களிலிருந்து பெறப்பட்டவை அல்ல, மாறாக பொதுவான அசாமிய குடும்பப்பெயர்களாகும் இவர்களின் மதம் அசாமிய இந்து மதத்துடன் பல கூறுகளைப் பகிர்ந்து கொள்கிறது ஆனால் குறிப்பிட்டதாகவே உள்ளது. சமவெளி திவாக்கள் பாடிய "கோடல்போரியா கீத்", சமவெளி திவாக்களின் நாட்டுப்புற பாடல்கள் அசாமிய & திவா கலவையில் பாடப்பட்டது.
திவா திருவிழாக்கள்
[தொகு]திருவிழாக்கள் திவா மக்களின் கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாகும். திவா பழங்குடியினரின் பல பண்டிகைகள் உள்ளன. திவா மக்கள் பல நிகழ்வுகளையும் பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள். திவா பழங்குடியினரின் முக்கிய திருவிழாக்களில் பிசு (பிஹு), ஜான்பீல் மேளா , வான்சுவா திருவிழா முதலியன அடங்கும்
இதனையும் பார்க்கவும்
[தொகு]- திவா பழங்குடி
- திவா சுயாட்சி இயக்கத்தின் வரலாறு
- ஜோன்பீல் மேளா
- திவா இளைஞர் சங்கம் (TYA)
- காட்டு லாலுங்ஸ்
- திவா மொழி (இந்தியா)
- சோக்ரா திருவிழா
- வான்சுவா திருவிழா
சான்றுகள்
[தொகு]- ↑ "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2017-11-03.
- ↑ Bhuyan S.K. (ed.
- ↑ Hunter W. A statistical account of Assam.
- ↑ "(T)he Tiwas, called Lalungs by their neighbours"(Ramirez 2014)
- ↑ "Many Tiwas account for the cultural dichotomy between hill Tiwas and plains Tiwas in terms of an acculturation to the Assamese dominated plain culture"(Ramirez 2014)
- ↑ Webdesk, Time8 (2022-03-20). "Jongal Balahu Rampart in Raha will be converted into a tourist destination". TIME8 (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-31.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ (Gogoi 1994)
- ↑ Ramirez, Philippe, People of the Margins, Spectrum, 2014
- ↑ Project, Joshua. "Tiwa in India". joshuaproject.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-22.
ஆதாரங்கள்
[தொகு]அச்சிடப்பட்ட ஆதாரங்கள்
[தொகு]- Ramirez, Philippe (2014). People of the Margins - Across Ethnic Boundaries in Northeast India. Spectrum Publications.
- Dalton, Edward Tuite (1872). Descriptive Ethnology of Bengal (in ஆங்கிலம்). Office of the superintendent of government printing.
- Gogoi, Nityananda (1994), Historical Geography of Medieval Assam, EBH Publishers (India)
- Jacquesson, François (2008), "Discovering Boro-Garo: History of an analytical and descriptive linguistic category", European Bulletin of Himalayan Research, 32