உள்ளடக்கத்துக்குச் செல்

திருமந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி
சைவத் திருமுறைகள்

சைவ சின்னம்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

திருநாவுக்கரசு நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார்

மாணிக்க வாசகர்

திருமூலர்

11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)

சேக்கிழார்


சைவம் வலைவாசல்

திருமந்திரம்[1] என்பது திருமூலரால் எழுதப்பட்ட தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இந்நூல் மெய்யியல் நூல் வகையைச் சேர்ந்தது.[2] சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.

வேறு பெயர்கள்

[தொகு]

திருமந்திரம் தமிழ் ஆகம நூல் என்று அழைக்கப்படுகிறது.[2] இந்நூலுக்கு திருமந்திரர் திருமந்திர மாலை என்று பெயரிட்டுள்ளார்.[2] தமிழ் மூவாயிரம் என்றும் அழைக்கப்படுகிறது.

நூல் அமைப்பு

[தொகு]

திருமந்திரம் பாயிரமும் அதனை அடுத்து ஒன்பது உட்பிரிவுகளும் கொண்டது. கலிவிருத்தம் என்னும் யாப்பில் அமைந்த பாடல்களால் நூல் அமைந்துள்ளது. இந்த உட்பிரிவானது தந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதனில் 232 அதிகாரங்கள், 3100 செய்யுட்கள் உள்ளன.[2]

பாயிரம்

[தொகு]

இதில் காப்புச் செய்யுள் ஒன்றும் 9 தலைப்புகளில் பாடல்களும் உள்ளன.

காப்பு

  1. கடவுள் வாழ்த்து
  2. வேதச் சிறப்பு
  3. ஆகமச் சிறப்பு
  4. குரு பாரம்பரியம்
  5. திருமூலர் வரலாறு
  6. அவை அடக்கம்
  7. திருமந்திரத் தொகைச் சிறப்பு
  8. குருமட வரலாறு
  9. மும்மூர்த்திகளின் முறைமை

முதல் தந்திரம்

[தொகு]

இதில் உள்ள பாடல்கள் கீழே காணுமாறு 24 தலைப்புகளில் உள்ளன.

  1. உபதேசம்
  2. யாக்கை நிலையாமை
  3. செல்வம் நிலையாமை
  4. இளமை நிலையாமை
  5. உயிர் நிலையாமை
  6. கொல்லாமை
  7. புலால் மறுத்தல்
  8. பிறன்மனை நயவாமை
  9. மகளிர் இழிபு
  10. நல்குரவு
  11. அக்கினி காரியம்
  12. அந்தணர் ஒழுக்கம்
  13. அரசாட்சி முறை
  14. வான் சிறப்பு
  15. தானச் சிறப்பு
  16. அறம் செய்வான் திறம்
  17. அறம் செய்யான் திறம்
  18. அன்பு உடைமை
  19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்
  20. கல்வி
  21. கேள்வி கேட்டு அமைதல்
  22. கல்லாமை
  23. நடுவு நிலைமை
  24. கள் உண்ணாமை

இரண்டாம் தந்திரம்

[தொகு]

இதில் உள்ள பாடல்கள் கீழே காணுமாறு 25 தலைப்புகளில் உள்ளன.

  1. அகத்தியம்
  2. பதிவலியில் வீரட்டம் எட்டு
  3. இலிங்க புராணம்
  4. தக்கன் வேள்வி
  5. பிரளயம்
  6. சக்கரப் பேறு
  7. எலும்பும் கபாலமும்
  8. அடிமுடி தேடல்
  9. படைத்தல்
  10. காத்தல்
  11. அழித்தல்
  12. மறைத்தல்
  13. அருளல்
  14. கரு உற்பத்தி
  15. மூவகைச் சீவ வர்க்கம்
  16. பாத்திரம்
  17. அபாத்திரம்
  18. தீர்த்தம்
  19. திருக்கோயில்
  20. அதோமுகத் தெரிசனம்
  21. சிவ நிந்தை
  22. குரு நிந்தை
  23. மயேசுர நிந்தை
  24. பொறையுடைமை
  25. பெரியாரைத் துணைக்கோடல்

மூன்றாம் தந்திரம்

[தொகு]

இதில் உள்ள பாடல்கள் கீழே காணுமாறு 21 தலைப்புகளில் உள்ளன.

  1. அட்டாங்க யோகம்
  2. இயமம்
  3. நியமம்
  4. ஆதனம்
  5. பிரணாயாமம்
  6. பிரத்தியாகாரம்
  7. தாரணை
  8. தியானம்
  9. சமாதி
  10. அட்டாங்க யோகப் பேறு
  11. அட்டமா சித்தி
  12. கலை நிலை
  13. காயசித்தி உபாயம்
  14. கால சக்கரம்
  15. ஆயுள் பரிட்சை
  16. வாரசரம்
  17. வார சூலம்
  18. கேசரி யோகம்
  19. பரியங்க யோகம்
  20. அமுரி தாரணை
  21. சந்திர யோகம்

நான்காம் தந்திரம்

[தொகு]

இதில் உள்ள பாடல்கள் கீழே காணுமாறு 13 தலைப்புகளில் உள்ளன

  1. அசபை
  2. திருவம்பலச் சக்கரம்
  3. அருச்சனை
  4. நவகுண்டம்
  5. சந்தி பேதம் – திரிபுரை சக்கரம்
  6. வயிரவி மந்திரம்
  7. பூரண சத்தி
  8. ஆதாரவாதேயம்
  9. ஏரொளிச் சக்கரம்
  10. வயிரவச் சக்கரம்
  11. சாம்பவி மண்டலச் சக்கரம்
  12. புவனாபதி சக்கரம்
  13. நவாக்கரி சக்கரம்

ஐந்தாம் தந்திரம்

[தொகு]

இதில் உள்ள பாடல்கள் கீழே காணுமாறு 20 தலைப்புகளில் உள்ளன

  1. சுத்த சைவம்
  2. அசுத்த சைவம்
  3. மார்க்க சைவம்
  4. கடுஞ்சுத்த சைவம்
  5. சரியை
  6. கிரியை
  7. யோகம்
  8. ஞானம்
  9. சன்மார்க்கம்
  10. சகமார்க்கம்
  11. சர்புத்திர மார்க்கம்
  12. தாச மார்க்கம்
  13. சாலோகம்
  14. சாமீபம்
  15. சாரூபம்
  16. சாயுச்சயம்
  17. சத்தி நிபாதம்
  18. புறச் சமய தூடணம்
  19. நிராசாரம்
  20. உட்சமயம்

ஆறாம் தந்திரம்

[தொகு]

இதில் உள்ள பாடல்கள் கீழே காணுமாறு 14 தலைப்புகளில் உள்ளன

  1. சிவகுரு தரிசனம்
  2. திருவடிப் பேறு
  3. ஞாதுரு ஞான ஞேயம்
  4. துறவு
  5. தவம்
  6. தவ நிந்தை
  7. அருளுடைமையின் ஞானம் வருதல்
  8. அவ வேடம்
  9. தவ வேடம்
  10. திருநீறு
  11. ஞான வேடம்
  12. சிவ வேடம்
  13. அபக்குவன்
  14. பக்குவன்


11. ஞான வேடம்

புன்ஞானத்  தோர்வேடம் பூண்டும் பயனில்லை
நன்ஞானத் தோர்வேடம் பூணார் அருள்நண்ணித்
துன்ஞானத் தோர் சமயத் துரிசுள்ளோர் 
பின்ஞானத் தோறொன்றும் பேசகில் லாரே


ஏழாம் தந்திரம்

[தொகு]

இதில் உள்ள பாடல்கள் கீழே காணுமாறு 38 தலைப்புகளில் உள்ளன

  1. ஆறு ஆதாரம்
  2. அண்ட லிங்கம்
  3. பிண்ட லிங்கம்
  4. சதாசிவ லிங்கம்
  5. ஆத்ம லிங்கம்
  6. ஞான லிங்கம்
  7. சிவ லிங்கம்
  8. சம்பிரதாயம்
  9. திருவருள் வைப்பு
  10. அருள் ஒளி
  11. சிவ பூசை
  12. குரு பூசை
  13. மகேசிவர பூசை
  14. அடியார் பெருமை
  15. போசன விதி
  16. பிட்சா விதி
  17. முத்திரை பேதம்
  18. பூரணக் குகைநெறிச் சமாதி
  19. சமாதிக் கிரியை
  20. விந்துற்பனம்
  21. விந்துச்சயம் – போகசரவோட்டம்
  22. ஆதித்த நிலை – அண்டாதித்தன்
  23. மிண்டாதித்தன்
  24. மனவாதித்தன்
  25. ஞானாதித்தன்
  26. சிவாதித்தன்
  27. பசுவிலக்கணம் – பிராணன்
  28. புருடன்
  29. சீவன்
  30. பசு
  31. போதன்
  32. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை
  33. ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை
  34. அசற்குரு நெறி
  35. சற்குரு நெறி
  36. கூடாவொழுக்கம்
  37. கேடு கண்டு இரங்கல்
  38. இதோபதேசம்

எட்டாம் தந்திரம்

[தொகு]

இதில் உள்ள பாடல்கள் கீழே காணுமாறு 43 தலைப்புகளில் உள்ளன

  1. உடலில் பஞ்ச பேதம்
  2. உடல் விடல்
  3. அவத்தை பேதம் – கீழாலவத்தை
  4. மத்திய சாக்கிராவத்தை
  5. அத்துவாக்க்கள்
  6. சுத்த நனவாதி பருவம்
  7. கேவல சகல சுத்தம்
  8. பராவத்தை
  9. முக்குண நிர்க்குணம்
  10. அண்டாதி பேதம்
  11. பதினொரானந்தமும் அவத்தை எனக் காணல்
  12. கலவு செலவு
  13. நின்மலாவத்தை
  14. அறிவுதயம்
  15. ஆறந்தம்
  16. பதிபசுபாசம் வேறின்மை
  17. அடித்தலை அறியும் திறம் கூறல்
  18. முக்குற்றம்
  19. முப்பதம்
  20. முப்புரம்
  21. பரலட்சணம்
  22. முத்துரியம்
  23. மும்முத்தி
  24. முச்சொரூபம்
  25. முக்கரணம்
  26. முச்சூனிய தொந்தத்தசி
  27. முப்பாழ்
  28. காரண காரிய உபாதி
  29. உபசாந்தம்
  30. புறங்கூறாமை
  31. எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை
  32. ஒன்பான் அவத்தை – ஒன்பான் அபிமானி
  33. சுத்தாசுத்தம்
  34. முத்தி நிந்தை
  35. இலக்கணாத் திரையம்
  36. தத்துவமசி வாக்கியம்
  37. விசுவக் கிராசம்
  38. வாய்மை
  39. ஞானி செயல்
  40. அவா அறுத்தல்
  41. பத்தி உடைமை
  42. முத்தி உடைமை
  43. சோதனை

ஒன்பதாம் தந்திரம்

[தொகு]

இதில் உள்ள பாடல்கள் கீழே காணுமாறு 23 தலைப்புகளில் உள்ளன

  1. குருமட தரிசனம்
  2. ஞானகுரு தரிசனம்
  3. பிரணவ சமாதி
  4. ஒளி
  5. தூல பஞ்சாக்கரம்
  6. சூக்கும பஞ்சாக்கரம்
  7. அதிசூக்கும பஞ்சாக்கரம்
  8. திருக்கூத்துத் தரிசனம்
  9. ஆகாசப் பேறு
  10. ஞானோதயம்
  11. சத்திய ஞானானந்தம்
  12. சொரூப உதயம்
  13. ஊழ்
  14. சிவ தரிசனம்
  15. சிவ சொரூப தரிசனம்
  16. முத்தி பேதம், கரும நிருவாணம்
  17. சூனிய சம்பாஷனை
  18. மோன சமாதி
  19. வரையுரை மாட்சி
  20. அணைந்தோர் தன்மை
  21. தோத்திரம்
  22. சர்வ வியாபி
  23. வாழ்த்து

காலம்

[தொகு]

இதன் காலம் அறிய முடியாததாய் உள்ளது. "இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி" என்ற அவரது பாடல் வரிகள் ...உலகின் முதல் மனிதர் அவராயும், முதல் சித்தராயும், தமிழுக்கு ஆசானாகவும்... இருந்திருக்கின்றார்.

பாடல்களின் எண்ணிக்கை

[தொகு]

மேலும் "அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம் எண்ணில் இருபத்தெண் கோடி நூறாயிரம்" என்ற மற்றொரு பாடலால் அவர் எழுதியது பல கோடி பாடல்கள் என்பதும் நமக்கு கிடைத்தது மூன்றாயிரம் பாடல்கள் மட்டுமே என்பது ஆய்வாளர்களின் கருத்து. மேலும் தமிழிலே உள்ள முதல் நூலான திருமந்திரம் முதல் திருமுறையாக வைக்கப்படாமல் பத்தாம் திருமுறையாக வைத்துள்ளதும் சந்தேகத்துக்கிடமாய் உள்ளது என்பர் ஆன்றோர். திருமந்திரத்தின் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள 'கடவுள் வாழ்த்து' என்பதன் முதலாவது பாட்டு பின்வருமாறு அமைந்துள்ளது;

ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள்,
நின்றனன் மூன்றினுள், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரித்தனன், ஏழும்பர்ச்
சென்றனன், தான் இருந்தான் உணர்ந்து எட்டே

உரைகள்

[தொகு]

திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது.[3]

எடுத்துக்காட்டுப் பாடல்கள்

[தொகு]

அன்பு சிவமிர ண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாக அமர்ந்திருந்தாரே![4]

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.[4]

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே[4]

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவுமாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.[4]

அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து முன்றென்ப தாகுங்
கழிகின்ற காலறு பத்திரண் டென்ப
தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே[4]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. திருமந்திரம் (பத்தாம் திருமுறை) திருப்பனந்தாள் காசி மடம் வெளியீடு, 2003
  2. 2.0 2.1 2.2 2.3 https://tamil.thehindu.com/society/spirituality/article19796137.ece
  3. சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்- ஆசிரியர். எஸ்.சூரியமூர்த்தி - பதிப்பாண்டு -2012- நர்மதா பதிப்பகம் சென்னை-17
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 திருமந்திரம்- திருமூலர்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமந்திரம்&oldid=3909701" இலிருந்து மீள்விக்கப்பட்டது