உள்ளடக்கத்துக்குச் செல்

திருச்சந்த விருத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சந்த விருத்தம்
கிருஷ்ணர் கம்சனைக் கொன்ற ஓவியம், லாசு ஏஞ்சல்சு கவுண்டி மியூசியம் ஆப் ஆர்ட்.
தகவல்கள்
சமயம்வைணவம்
நூலாசிரியர்திருமழிசையாழ்வார்
மொழிதமிழ்
காலம்பொ. ஊ 9-10 ஆம் நூற்றாண்டு
வரிகள்120 பாடல்கள்

திருச்சந்த விருத்தம் திருமழிசையாழ்வாரால் திருமாலைப் போற்றி 120 விருத்தப்பாக்களைக் கொண்டு இயற்றப்பட்டது.[1] சந்தங்கள் என்பது இனிய இசையை (ஒலியை) எழுப்புவது என்று பொருள்[2], இனிய ஒலிகளால் திருமாலை வணங்கி போற்றியதால் திரு என்னும் அடைமொழியைத் தாங்கி விருத்தம் என்னும் பாக்களால் பாடப்பட்டதால் இந்நூல் திருசந்த விருத்தம் எனப்பெயர் பெற்றது. இது 120 பாசுரங்களை கொண்டது, இது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதலாயிரத்தில் இடம் பெற்றுள்ளது.[3] இது திருமாலை வணக்கத்திற்காகவும், கிருஷ்ணர் மற்றும் வெங்கடாசலபதி போன்ற திருமாலின் அவதாரங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. [4]

பாடல்கள்

[தொகு]

இந்த இலக்கியம் கிருஷ்ணரின் வாழ்க்கை, அசுரர்களை வதம் செய்தமை, நப்பின்னையை மணக்க காளைகளை அடக்கியமை, குருக்ஷேத்திரப் போரில் கிருஷ்ணரின் பங்கு ஆகியவற்றைப் பற்றிய உள்ளடக்கங்கள் இதில் உள்ளது[5]

கம்சன் மீதான கிருஷ்ணரின் வெற்றியும், பூதனையின் நஞ்சு நிறைந்த பாலை உறிஞ்சிய தெய்வ செயல்களையும், வாமனனின் மூன்றடி மண் செயல்களையும் கீழ்கண்ட பாடல் குறிக்கிறது:[6]

வெஞ்சினத்த வேழ வெண் மருப்பு ஒசித்து உருத்த மா

கஞ்சனைக் கடிந்து மண் அளந்துகொண்ட காலனே

வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய்

அஞ்சனத்த வண்ணன் ஆய ஆதிதேவன் அல்லையே?

— திருச்சந்த விருத்தம், 43-ம் பாசுரம்[7]

கம்ப ராமாயணத்தை எழுதிய கம்பர், இந்தப் படைப்பின் சில பாடல்களிலிருந்து உள்ளூக்கம் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது:[8]

வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்

போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே

தேன் அகஞ்செய் தண் நறும் மலர்த் துழாய் நன் மாலையாய்

கூன் அகம் புகத் தெறித்த கொற்ற வில்லி அல்லையே?

— திருச்சந்த விருத்தம், 30-ம் பாசுரம்[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "P202235.htm-திருமழிசை ஆழ்வார் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". www.tamilvu.org. Retrieved 2023-04-12.
  2. "5.1 சந்தம் - சொல்பொருள் விளக்கம் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". www.tamilvu.org. Retrieved 2024-02-29.
  3. "வைணவ இலக்கியங்கள் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". www.tamilvu.org. Retrieved 2023-04-12.
  4. Ramesan, N. (1981). The Tirumala Temple (in ஆங்கிலம்). Tirumala Tirupati Davasthanams. p. 204.
  5. Temples of Kr̥ṣṇa in South India: History, Art, and Traditions in Tamilnāḍu. 2002.
  6. Makarand Joshi. Tiruccanda Viruttam Of Tirumalisai Alvar English Translation And Notes By BSS Iyengar. p. 38.
  7. "முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம்". www.tamilvu.org. Retrieved 2024-02-29.
  8. Manavalan, A. A. (2022-03-28). Ramayana: A Comparative Study of Ramakathas (in ஆங்கிலம்). Global Collective Publishers. p. 97. ISBN 978-1-954021-78-5.
  9. "முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம்". www.tamilvu.org. Retrieved 2024-02-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சந்த_விருத்தம்&oldid=4181946" இலிருந்து மீள்விக்கப்பட்டது