உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில்
திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் is located in தமிழ் நாடு
திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில்
திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில்
திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று:11°58′17″N 79°12′39″E / 11.9714°N 79.2109°E / 11.9714; 79.2109
பெயர்
புராண பெயர்(கள்):அந்தகபுரம், திருக்கோவலூர்
அமைவிடம்
ஊர்:திருக்கோவிலூர்
மாவட்டம்:கள்ளக்குறிச்சி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வீரட்டேசுவரர்
உற்சவர்:அந்தகாசுர வத மூர்த்தி
தாயார்:பெரியநாயகி (சிவமகிழ்வள்ளி)
தல விருட்சம்:சரக்கொன்றை
தீர்த்தம்:தென்பெண்ணை
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர், சுந்தரர், சம்பந்தர்

திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் (Thirukovilur Veerateeswarar Temple) என்பது அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலம் ஆகும். இச்சிவத்தலம் இந்தியா தமிழ்நாடு மாநிலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூரில் கீழையூர் என்ற பகுதியில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[1] மேலும் இது அட்டவீரட்டத் தலங்களில் ஒன்று ஆகும்.

தலச்சிறப்பு

[தொகு]
  • இத் தலத்துக்கு ஞான சம்பந்தரும் அப்பரும் வந்து இந்த வீரட்டானரைப் பாடியிருக்கிறார்கள்.
  • கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை இருவருக்கும் அவ்வையும், கபிலரும் திருமணம் செய்து வைத்த தலம்

இறைவன், இறைவி

[தொகு]

இச்சிவத்தலத்தின் மூலவர் வீரட்டேசுவரர் அந்தகாசுரவத மூர்த்தி, தாயார் சிவானந்தவல்லி,(சிவமகிழ்வள்ளி), பிருகந்நாயகி.பெரியநாயகி.

தலவரலாறு

[தொகு]

அந்தாகசூரன் எனும் அசுரனுக்கும் சிவபெருமானுக்கும் போர் நடைபெறும் பொழுது அசுரனின் குருதியிலிருந்து அசுரர்கள் தோன்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களை தடுப்பதற்காக சிவபெருமான் 64 பைரவர்களை உருவாக்கினார். அறியாமை எனும் இருளான அந்தாகசூரனை அழித்து சிவபெருமான் வீரட்டேஸ்வரராக மெய்ஞானத்தினை அருளிய தலம்.

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் மூலவர் லிங்கத் திருவுருவில் இருக்கிறார். இந்தக் கோயிலுக்குள்ளேயே செப்புச் சிலை வடிவில் அந்தகாசுர சம்ஹாரர் உள்ளார். அந்தகாசுரனைக் காலின் கீழ் போட்டு மிதித்துக்கொண்டு அவன் பேரில் சூலத்தைப் பாய்ச்சுகின்ற நிலையில் இருக்கிறார். இது அழகான நல்ல சோழர் காலத்துச் செப்புப் படிமம் ஆகும். அம்மையின் கோயில், வீரட்டேசுரர் கோயிலுக்கு இடப்புறம் தனித்ததொரு கோயிலாக மேற்கு நோக்கி இருக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

வெளி இணைப்புகள்

[தொகு]

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்