தாருகாபுரம்
தாருகாபுரம் | |
— கிராமம் — | |
ஆள்கூறு | 9°12′43″N 77°26′06″E / 9.2120428°N 77.4350203°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆர். சுகுமார், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
தாருகாபுரம் (ஆங்கிலம் : Dharugapuram) இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி வட்டம்[4], வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில்[5][6] உள்ள ஊர் ஆகும்.
இவ்வூரின் சிறப்பு
[தொகு]அருள்மிகு மத்தியஸ்தநாதசுவாமி திருக்கோயில். தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்களில் ஒன்றான நீர் தலம் என இவ்வூர் குறிப்பிடப்படுகின்றது.[7] பஞ்ச பூதங்களில் ஒன்று நீர். இவ்வாலய கருவறையிலுள்ள லிங்கத் திருமேனியைச் சுற்றி எப்போதும் நீர் சூழ்ந்திருக்கும். எனவே இது நீர்த்தலம் எனப்படுகிறது.
சிவபெருமானின் அம்சமான தட்சிணாமூர்த்தி, இக்கோவிலில் நவகிரகங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குவதால், இங்கே தனியாக நவகிரக சந்நிதி இல்லை. தட்சிணாமூர்த்தியை வழிபட்டாலே நவகிரகங்களின் அருளையும் சேர்த்துப் பெறலாம் என்பது தொன்நம்பிக்கை.
புராணம்
[தொகு]முற்காலத்தில் மனதைக் குளிர்விக்கும் அற்புத வளங்களோடு விளங்கிய இந்தப் பகுதி தாருகாவனம் எனப்பட்டது. மன்னர்களும் தவயோகிகளும் மக்களும் இளைப்பாறிச் செல்லும் எழிலார்ந்த பகுதியாக விளங்கிய இது, சேர- சோழ- பாண்டிய நாடுகளின் எல்லையில் இருந்தது. அதனால் இதைக் கைப்பற்ற மூவேந்தர்களுக்கிடையே அடிக்கடி சண்டை மூண்டு வந்தது.
இறுதியாக தங்கள் பிரச்சினையைத் தீர்க்க வல்லவர் மாமுனியான அகத்தியர் ஒருவரே என்னும் முடிவுக்கு வந்தவர்கள், அகத்தியரைக் காண தென்திசை நோக்கிப் பயணமானார்கள். அவ்வாறு வரும்போது தாருகாவனத்தில் இளைப்பாறினார்கள்.
அப்போது அங்கு வந்த ஒரு முனிவர் நீங்கள் சம்மதித்தால் நான் மத்தியஸ்தராக இருந்து உங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறேன் என்றார். மூவரும் தங்களுக்குள் ஆலோசித்து, முனிவரின் தீர்ப்பை ஏற்பதாகக் கூறினர்.
சோழ மன்னா, நீ வாய்க்கால் பகுதிகளை வைத்துக்கொள். சேர மன்னா, நீ ஏரிப் பகுதிகளை வைத்துக்கொள். பாண்டிய மன்னா, நீ குளங்கள் உள்ள பகுதிகளை வைத்துக்கொள் என்று கூறிய முனிவர் மறுகணம் மறைந்து போனார். அவர் நின்றிருந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது. இதைக் கண்டு மெய்சிலிர்த்த மூவேந்தரும் சுயம்பு லிங்கமான ஈசனுக்கு அங்கேயே கோவிலும் எழுப்பினர்.
மாமன்னர்களின் மனப் பிணக்கைத் தீர்த்து வைத்ததால் இத்தல ஈசன் பிணக்கறுத்த மகாதேவர், மத்தியஸ்த நாதர் என்னும் திருப்பெயர்களில் வழங்கப் பெறுகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. Retrieved 2013-01-05.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-21. Retrieved 2013-01-05.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-17. Retrieved 2013-01-05.
- ↑ http://www.shaivam.org/siddhanta/spg_nv_panycha_budha_thalam.htm