தாய்லாந்து திரைப்படத்துறை
தாய்லாந்து திரைப்படத்துறை | |
---|---|
திரைகளின் எண்ணிக்கை | 757 (2010)[1] |
• தனிநபருக்கு | 1.2 ஒன்றுக்கு 100,000 (2010) |
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2005-2009)[2] | |
மொத்தம் | 45 (சராசரி) |
Number of admissions (2010)[3] | |
மொத்தம் | 28,300,000 |
நிகர நுழைவு வருமானம் (2012)[4] | |
மொத்தம் | $142 மில்லியன் |
தாய்லாந்து திரைப்படத்துறை (Cinema of Thailand) என்பது தாய்லாந் நாட்டில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும்.
தாய்லாந்தின் திரைப்படத்துறையின் ஆரம்பம் அரசர் சுலலாங்கொர்ன் என்பவர் 1897 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் பேர்ன் நகருக்கு விஜயம் செய்தபோது ஆரம்பிக்கப்பட்டது. 1990 களில் தாய் அரச குடும்பம் மற்றும் உள்ளூர் வணிகர்கள் முதலில் திரைப்படத் தயாரிப்புக் கருவிகளைக் கொண்டு வந்து வெளிநாட்டு திரைப்படங்களைக் காட்சிப்படுத்தத் தொடங்கினர். 1920 களில் உள்ளூர் திரைப்படத் தொழில் தொடங்கப்பட்டது. 1930 களில் தாய் திரைப்படத்துறை அதன் முதல் பொற்காலகாலத்தை கொண்டிருந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தாய்லாந்து திரைப்படத்துறை மீள் எழுச்சி அடைந்தது. நூற்றுக்கணக்கான 16 மிமீ திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டது. அவற்றில் பல சண்டைத் திரைப்படங்கள் ஆகும்.
வரலாறு
[தொகு]லூமியேர் சகோதரர்கள் 1894 ஆம் ஆண்டில் தென்கிழக்காசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர், மேலும் ஜூன் 9, 1897 இல் 'தி வண்டர்டெர்புல் பரிசின் சினிமாட்டோக்ராபர்' என்ற திரைப்படத்தை பேங்காக்கில் திரையிடப்பட்டது.[5] இது தான் தாய்லாந்தில் அறியப்பட்ட முதல் திரைப்படத் திரையிடலாகும். அதே ஆண்டில் மன்னர் சுலலாங்கொர்ன் ஐரோப்பாவிற்கு விஜயம் செய்த காட்சிகள் படமாக்கப்பட்டு தாய்லாந்திற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன் மன்னனின் சகோதரான இளவரசர் தொங்தெய்ம் சம்பாசத்ரா வாங்கிய திரைப்பட உபகரணங்களும் காட்சிப்படுத்தப்பட்டது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Table 8: Cinema Infrastructure - Capacity". UNESCO Institute for Statistics. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2020-12-10.
- ↑ "Average national film production". UNESCO Institute for Statistics. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2020-12-10.
- ↑ "Table 11: Exhibition - Admissions & Gross Box Office (GBO)". UNESCO Institute for Statistics. Archived from the original on 2013-11-03. பார்க்கப்பட்ட நாள் 2020-12-10.
- ↑ "International Box Office: 13 Hot Emerging Markets". The Hollywood Reporter.
- ↑ Anchalee Chaiworaporn, The Birth of Film Screening in Thailand பரணிடப்பட்டது 2007-11-01 at the வந்தவழி இயந்திரம், Thai film foundation
- ↑ Prince Sanbassart (Prince Thongthamthawanwong) - The Father of Thai Filmmaking. பரணிடப்பட்டது 2007-11-01 at the வந்தவழி இயந்திரம், Thai film foundation