உள்ளடக்கத்துக்குச் செல்

ஆங்காங் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆங்காங் திரைப்படம்
Cinema of Hong Kong
நகர இயற்கைப் பின்னணியில் அடிமனைமேல் அமைந்த வெண்கலச் சிலை. அடிமனை நான்கு மூடுபலகங்களால் ஒரு பேழையாகப் பூட்டப்பட்டுள்ளது. இந்தப் பெண்சிலை ஒளிப்படப் படலங்களால் போர்த்தப்பட்டுள்ளது. சிலையின் பார்வை மேல்நோக்கியும் இட்து கை மேலுயந்து சுடர்தாங்கும் கோளமொன்றை ஏந்தியுள்ளது.
ஆங்காங்கில் திசிம் சா திசூயி நகரில் அமைந்த திரைப்பட நட்சத்திரங்களின் வளாகத்தில் நிறுவப்பட்ட ஆங்காங் திரைப்பட விருது உருப்பளிங்கு ஆகும்.
திரைகளின் எண்ணிக்கை204 (2011)[1]
 • தனிநபருக்கு100,000 பேருக்கு 3.1 பேர் (2011)[1]
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2005-2009)[2]
மொத்தம்56 (சராசரி)
Number of admissions (2010)[4]
மொத்தம்22,500,000
 • தனி நபருக்கு3.2 (2010)[3]
நிகர நுழைவு வருமானம் (2014)[5]
மொத்தம்ஆங்காங் டாலர்1.65 பில்லியன்

ஆங்காங் திரைப்படம் (cinema of Hong Kong) () என்பது சீனமொழித் திரைப்பட முதன்மை வரலாற்றிழைகளில் மூன்றனுள் ஒன்றாகும். மற்றவை தைவானியத் திரைப்படம், சீனத் திரைப்படம் என்பனவாகும். ஆங்காங் முந்தைய பிரித்தானியக் குடியேற்ற நாடாக விளங்கியமையால், ஆங்காங் திரைப்படம் சினப்படங்களையும் தைவானியத் திரைப்படங்களைவிட, தனி அரசியல், பொருளியலான விடுதலையைப் பெற்றிருந்தது. இது உலகளாவிய சீன மக்களின் திரைப்பட மையமாக வளர்ந்தது.

பல பத்தாண்டுகளாக, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அடுத்தபடி மூன்றாம் மிகப்பெரிய இயங்குபடத் தொழில்துறையாகவும் ஏற்றுமதியில் இரண்டாவதாகவும் விளங்குகிறது.ஆங்காங் திரைப்படத் தொழில் 1990 களுக்கு இடையில் நெருக்கடிக்கு ஆட்பட்டது. 1997 ஜூலையில் ஆங்காங் சீன இறையாண்மையில் இணைந்தது. இருந்தாலும் ஆங்காங் திரைப்படம் தனது தனி அடையாளத்தையோ உலக அளவிலான முதன்மைப் பங்களிப்பையோ இழக்காமல் காத்துவருகிறது. மேற்குலகில் ஆங்காங்கின் சீரிய பாப் திரைப்பட வகைமை (ஆங்காங்கின் வீரப்புனைவு) வலிவான தாக்கத்தைச் செலுத்திவருகிறது. இது இப்போது உலக முதன்மைப்போக்கு வகைமையில் தொடர்ந்து அமைதலோடு பிறநாட்டுத் திரைப்படங்களில் மீளாக்கப்படும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.

பொருளியலாக, பண்பாட்டு, ஆக்கநிலை மதிப்பு கூட்டிய திரைப்படத் தொழிலின் பங்களிப்பு ஆங்காங்கின் பொருளியலில் 5% ஆக அமைகிறது.[6]

ஆங்காங் திரைப்படத் தொழில்

[தொகு]

உலகத் திரைப்பட்த் தொழில்கள் பலவற்றுக்குக் கிடைக்கும் அரசின் உதவி ஆங்காங் திரைப்பட்த் தொழிலுக்கு கிடைப்பதில்லை. இது முழுக்க முழுக்க வணிகவியலாகவே இயங்குகிறது. அரசின் சலுகைகளோ இறக்குமதி ஒதுக்கீடுகளோ இதற்குக் கிடைப்பதில்லை. இது குழுமப் பொருளியல் நடைமுறையைப் பின்பற்றித் தன் வெற்ரிக்கு நகைச்சுவை, வீரப்புனைவு. காதல் சார்ந்த வாய்பாடுகளையும் காட்சித் தொடர்களையும் சிலவற்ரின் மீளாக்க்கங்களையும் பயன்படுத்துகிறது.

ஆங்காங் திரைப்படம் ஆலிவுட்டின் பல கூறுபாடுகளைப் பின்பற்ருகிறது. எடுத்துகாட்டாக, அச்சுறுத்தும் பாணி, விரைவான படமாக்கப்பாணி போன்றவற்றை பயன்கொள்கிறது. அனைத்து கடன்பெறலும் சீன சீன இசைநாடக்க் கூறுகளைக் கொண்டும் சீனக் கலைவடிவங்களைக் கொண்டும் நிரப்பி மேளைய நடப்பியலைத் தவிர்த்து மரபுப்பாணியாக்கத்தில் கவன்ஞ் செலுத்துகிறது. மேலும் நெகிழ்வும் விரைவும் மிக்க படமாக்க முறையோடு, வீரப்ப்புனைவையும் மீநடப்பியலையும் கலந்து மேற்கத்திய மக்களின் நயப்பை எளிதாக ஈட்டிவிடுகிறது.

ஆங்காங் திரைப்படத்துறை 2010 இல் 1.339 பில்லியன் ஆங்காங் டாலர்களையும் 2011 இல் 1.379 பில்லியன் டாலர்களையும் ஈட்டியது. ஆங்காங்கில் மட்டும் 2011 இல் 56 ஆங்காங் திரைப்படங்களும் 220 அயல்நாட்டுப் படங்களும் வெளியிடப்பட்டன.[7]

ஆங்காங் திரைப்படம் 2017 இல் 1.85 பில்லியன் ஆங்காங் டாலர்களை ஈட்டியது. ஆனால், இது 2016 இல் ஈட்டிய 1.95 பில்லியன் ஆங்காங் டாலர்களை விடக் குறைவானதாகும். 2017 இல் 331 திரைப்படங்கள் வெளியிடப்பட்டன. ஆனால் இது முந்தைய ஆண்டின் வெளியீடான 348 திரைப்படங்களின் எண்ணிக்க்கையில் குறைந்ததே ஆகும்.[8]

பாதீடுகள்

[தொகு]

அமெரிக்காவை ஒப்பிடும்போது ஆங்காங் திரைப்படங்கள் மிகத் தழ்வான பாட்டீட்டுச் செலவிலேயே எடுக்கப்படௌகின்றன.[9] பெரிய நடிகரைக் கொண்டு நல்ல புடழடைய எடுக்கப்படும் திரைப்பட ஆக்கச் செலவு ஏறதாழ, 5 மில்லியன் அமெரிக்க டாலராக அமைகிறது (யாங்கும் மற்ரும் பிறர்., 1997). ஒரு திரைப்பட்த்தின் தாழ்ந்த ஆக்கச் செலவாக இமில்லியன் அமெரிக்க டாலரினும் குறைந்த்தாக அமைகிறது. அவ்வப்போது, உலகப் பார்வையாளருக்காக ஜாக்கிசான் அல்லது சுட்டீவன் சோ போன்ற மிகப் பெரிய நடிகரை வைத்து உயர்கேளிக்கைத் திரைப்படங்களின் ஆக்கச் செலவு 20 மில்லியன் அமெரிக்க டாலரை விட மிஞ்சுவதுண்டு. ஆனால், இத்தகைய படங்கள் விதிவிலக்கானவையே.[9] னஆங்காங்கின் டாலரின் தழ்ந்த மதிப்பையும் தரப்படும் கூளியையும் ஒப்பிடும்போது மேற்கூறிய திரைப்பட ஆக்கச் செலவு ஆடம்பரமானதும் கண்ணைப் பறிக்கக் கூடியதாகவும் உள்ளது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Table 8: Cinema Infrastructure - Capacity". UNESCO Institute for Statistics. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Average national film production". UNESCO Institute for Statistics. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Cinema - Admissions per capita". Screen Australia. Archived from the original on 9 November 2013. பார்க்கப்பட்ட நாள் 9 November 2013.
  4. "Table 11: Exhibition - Admissions & Gross Box Office (GBO)". UNESCO Institute for Statistics. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Kevin Ma (6 January 2015). "Transformers, Chickensss rule 2014 HK b.o." Film Business Asia. பார்க்கப்பட்ட நாள் 6 January 2015.
  6. "Robust film industry is in our best interest" (in en). South China Morning Post. http://www.scmp.com/comment/insight-opinion/article/2080338/hong-kongs-film-industry-worth-backing. 
  7. Karen Chu (2012-01-02). "'Transformers' Tops Hong Kong Box Office for 2011". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் 2012-07-14.
  8. Liz Shackleton (2018-01-03). "Hong Kong box office shrinks for second year in a row". Screen Daily. பார்க்கப்பட்ட நாள் 2018-07-24.
  9. 9.0 9.1 Fu, Poshek; Desser, David (editors), The Cinema of Hong Kong : history, arts, identity, Cambridge, UK ; New York, NY : Cambridge University Press, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-77235-4. Cf. pp, 26,31,37,77 etc. (Alternate source in PDF format)

மேலும் படிக்க

[தொகு]

ஆங்கிலம்

[தொகு]

ஆங்காங் திரைப்படங்கள்

[தொகு]

ஆங்காங் திரைப்படங்கள் சார்ந்தன

[தொகு]

பிற மொழிகளில்

[தொகு]

பிரெஞ்சு

[தொகு]

செருமனி

[தொகு]

இத்தாலி

[தொகு]

எசுப்பானியம்

[தொகு]
  • Escajedo, Javier, Carles Vila, and Julio Ángel Escajedo. Honor, plomo y sangre: el cine de acción de Hong Kong. [S.l.]: Camaleón, 1997. (எசுப்பானியம்)
  • (Tortosa,) Domingo López. Made in Hong Kong: Las 1000 Películas que Desataron la Fiebre Amarilla. Valencia: Midons Editorial, S.L.: 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-89240-34-5. (எசுப்பானியம்)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்காங்_திரைப்படத்துறை&oldid=3950492" இலிருந்து மீள்விக்கப்பட்டது