தர்சனா ராஜேந்திரன்
தர்சனா ராஜேந்திரன் | |
---|---|
தேசியம் | இந்தியா |
பணி | பாடகி, நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2014–தற்போது வரை |
தர்சனா ராஜேந்திரன் (Darshana Rajendran) ஓர் திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் இயங்கி வருகிறார். இவர் தனது நடிப்பு வாழ்க்கையை 2014 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான ஜான் பால் வாத்தில் துறக்குன்னு என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கினார்.[1]
திரைத்துறை
[தொகு]ஆஷிக் அபு இயக்கிய மாயநதி படத்தில் நடித்தார். மேலும் ஆஷிக் அபு இயக்கிய வைரஸ் (2019), ஜிஸ் ஜாய் இயக்கிய விஜய் சூப்பரும் பௌர்ணமியும் (2019), அஞ்சலி மேனன் இயக்கிய கூடே மற்றும் ராஜீவ் ரவி இயக்கிய துறைமுகம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கவண் (2017) மற்றும் இரும்புத்திரை (2018) போன்ற படங்களிலும் தர்சனா குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.[2][3][4][5][6]
கல்வி
[தொகு]தர்சனா தனது பள்ளிப்படிப்பை சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளியிலும், எர்ணாகுளத்தில் உள்ள கிரிகோரியன் பப்ளிக் பள்ளியிலும் முடித்தார். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றார். பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தின் சிட்டி கல்லூரியில் நிதிப் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
பின்னர் சென்னையில் உள்ள நிதி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குறும்பொருளியல் துறையில் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில், இவர் நாடகத்தில் மிகுந்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். மற்றும் பல ஆங்கில நாடகங்களில் நடித்தார்.
சான்றுகள்
[தொகு]- ↑ Menon, Akhila (9 July 2014). "Darshana: The new kid from theatre". Filmibeat.
- ↑ "Darshana Rajendran: In the past decade, it has become easier for actors to get opportunities - Times of India". The Times of India.
- ↑ "Darshana Rajendran in Vineeth Sreenivasan directorial 'Hridayam'". The News Minute. 2019-12-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-01.
- ↑ "Roshan Mathew, Darshana Rajendran join Aashiq Abu project". The New Indian Express.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-22. பார்க்கப்பட்ட நாள் 2022-07-06.
- ↑ "'മായാനദി' മുതൽ 'വൈറസ്' വരെ; ദർശന രാജേന്ദ്രൻ പറയുന്നു".