டி. வி. ராஜேஷ்
டி. வி. இராஜேசு | |
---|---|
சட்டப் பேரவை உறுப்பினர், கேரளம் | |
பதவியில் 2011 - தற்போது வரை | |
தொகுதி | கல்லுயாசேரி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 சனவரி 1974 கல்யாசேரி, கண்ணூர், கேரளம் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
துணைவர் | வி. பி. சீனா |
பிள்ளைகள் | தியா |
வாழிடம் | கல்யாசேரி |
டி. வி. இராஜேசு (T. V. Rajesh, பிறப்பு: 11 சனவரி 1974) கேரள மாநிலத்தைச் சார்ந்த இந்திய அரசியல்வாதியும் கேரள சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அவர் கேரளாவின் கல்லுயாசேரி சட்டமன்றத் தொகுதியின் பிரதிநிதியாகவும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) கட்சியிலும் உறுப்பினராகவும் உள்ளார்.[1] இராஜேசு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கேரள மாநிலக் குழுவின் தலைவராகவும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநிலக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]டி. வி. இராஜேசு, குலபுரம், சண்டிகட்டி மற்றும் மாதவியின் மகனாக கண்ணூரில் பிறந்தார். அவர் செரத்தியாம் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்தார். அதன் பிறகு கண்ணூர் பையனூர் கல்லூரியில் இருந்து பட்ட அறிமுக வகுப்பு மற்றும் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். அவர் அரசு சட்டக்கல்லூரி, திருவனந்தபுரத்தில் சட்டத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]டி. வி. இராஜேசு இந்தியாவின் மாணவர் சம்மேளனத்தின் (SFI) செயலாளராக அரசியலில் நுழைந்தார். பின்னர் அவர் இந்தியாவின் ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பில் நுழைந்தார். பல்வேறு வேலைநிறுத்தங்கள் மற்றும் இயக்கங்களில் தீவிரமாகப் பங்கு பெற்றார். அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கேரள மாநிலக் குழுவின் தலைவர் ஆவார். அவருடைய அரசியல் செயற்பாடு, உயர்நிலைப் பள்ளி மாணவராக இருந்த நாட்களிலிருந்தே மாணவர் போராட்டங்களை நடத்துவதற்கு வழிவகுத்தது. கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கங்களுக்கு எதிராகப் பல போராட்டங்களின் ஒரு பகுதியாக இவர் இருந்துள்ளார். கடந்த காலங்களில் இவரது போராட்டங்கள் மிருகத்தனமாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த அடுக்குமுறையின் காரணமாக 87 நாட்கள் இவர் சிறையிலிருந்தார்.
2002-ஆம் ஆண்டில் இந்திய மாணவர் சம்மேளனத்தின் மாநில செயலாளராகவும், 2003-ஆம் ஆண்டில் தேசிய இணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மே மாதம் இவர் கல்லுயாசேரி தொகுதியில் இருந்து கேரள சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கிட்டத்தட்ட 30000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2012-ஆம் ஆண்டில் கேரள மாநில மாநாட்டில், இவர் கட்சியின் மாநிலக் குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2011 கல்லுயாசேரி தேர்தல் முடிவுகள்
[தொகு]கல்லுயாசேரி சட்டமன்றத் தொகுதியில் 2011 சட்டமன்றத் தேர்தலின் போது இருந்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 1,57,384 ஆக இருந்தது.[2]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | வாக்கு விழுக்காடு |
---|---|---|---|
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | டி. வி. இராஜேசு | 73,190 | 58.62 |
இந்திய தேசிய காங்கிரசு | பி. இந்திரா | 43,244 | 34.64 |
பாரதிய ஜனதா கட்சி | சிறீநாத் இரவி வர்மா | 5,499 | 4.40 |
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி | ஏ. பி. மஹ்மூத் | 2,281 | 1.83 |
பகுஜன் சமாஜ் கட்சி | கே. கோபாலகிருஷ்ணன் | 640 | 0.51 |
2016 கல்லுயாசேரி தேர்தல் முடிவுகள்
[தொகு]கல்லுயாசேரி சட்டமன்றத் தொகுதியில் 2016 சட்டமன்றத் தேர்தலின் போது இருந்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 1,77,121 ஆக இருந்தது.[3]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | வாக்கு விழுக்காடு |
---|---|---|---|
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | டி. வி. இராஜேசு | 83,006 | 59.83 |
இந்திய தேசிய காங்கிரசு | அம்ரிதா இராமகிருஷ்ணன் | 40,115 | 28.91 |
பாரதிய ஜனதா கட்சி | கே. பி. அருண் | 11,036 | 7.95 |
சுயேச்சை | சுனில் கோயிலேரியன் | 1,455 | 1.05 |
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி | கே. சுபைர் | 1,435 | 1.03 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "DYFI lays siege to job exchanges". தி இந்து. 6 September 2011. http://www.thehindu.com/news/states/kerala/article2427342.ece. பார்த்த நாள்: 27 September 2011.
- ↑ "Kerala Niyamasabha Election Results 2011, Election commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.
- ↑ "Kerala Niyamasabha Election Results 2016, Election commission of India". eci.gov.in.