டிரைடெண்ட் சென்னை
டிரைடெண்ட், சென்னை Trident, Chennai | |
---|---|
சென்னையில் அமைந்துள்ள டிரைடெண்ட் உணவுவிடுதி | |
விடுதி சங்கிலி | ஓபராய் குழுமம் |
பொதுவான தகவல்கள் | |
இடம் | சென்னை, இந்தியா |
முகவரி | |
ஆள்கூற்று | 12°59′37″N 80°11′10″E / 12.9935°N 80.1860°E |
திறப்பு | மார்ச் 1988 |
மேலாண்மை | ஓபராய் அசோசியேட்டட் ஹோட்டல் லிமிடெட் |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | கோரமண்டல் பொறியியல் |
மேம்பாட்டாளர் | இஐஹச் அசோசியேட்டட் ஹோட்டல் லிமிடெட் |
பிற தகவல்கள் | |
அறைகள் எண்ணிக்கை | 157 |
தொகுப்புகளின் எண்ணிக்கை | 10 |
உணவகங்களின் எண்ணிக்கை | 3 |
வலைதளம் | |
டிரைடெண்ட் சென்னை |
டிரைடெண்ட் சென்னை (ஆங்கிலம்: Trident, Chennai) என்பது தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை மீனம்பாக்கத்தில் ஒபராய் குழுமத்திற்குச் சொந்தமான ஓர் ஐந்து நட்சத்திர விடுதியுடன் கூடிய உணவகம் ஆகும்.[1] மேலும் இந்த விடுதியானது சென்னை நகரின் மையப்பகுதியிலிருந்து சுமார் 20 நிமிட பயண தூரத்தில் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் செல்லும் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ளது. ஓபராய் குழுமத்தினால் நிர்வகிக்கப்படும் இந்த விடுதியானது 5 ஏக்கர்கள் (2.0 ha) நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது.[2]
உணவுவிடுதி மற்றும் வசதிகள்
[தொகு]டிரைடெண்ட் சென்னை உணவு விடுதியானது ஓபராய் குழுமத்தால் நிர்வாகிக்கப்படும் இவ்விடுதியில் நூற்று ஐம்பத்தி ஏழு அறைகள் மற்றும் பத்து அறைத் தொகுப்புகள், சினமென் மற்றும் சமுத்ரா என்னும் உணவகங்கள் மற்றும் ஆர்காட் அருந்தகம் உட்பட மொத்தம் நூற்று அறுபத்தேழு அறைகள் உள்ளன. மேலும் முதலாம் ஆலாப் மற்றும் இரண்டாம் ஆலாப் சந்திப்பு அறைகள் ஒருங்கிணைத்து 4,356 சதுர அடிகள் (404.7 m2)ளில் 375 பேர் தங்கும் திறன் கொண்டவை. செட்டிநாடு சந்திப்பு அறை 880 சதுர அடிகள் (82 m2)ளில் 45 பேர் தங்கும் வசதி கொண்டது. முதலாம் ட்ரைடெண்ட் சந்திப்பு அறையில் பதினைந்து பேரும் இரண்டாம் டிரைடெண்ட் மற்றும் மூன்றாம் டிரைடெண்ட் சந்திப்பு அறைகளில் தலா ஆறு பேர் தங்கலாம்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Category : 5 Star". List of Approved Hotels as of : 06/01/2013. Ministry of Tourism, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 6 Jan 2013.
- ↑ CN Traveller (8 September 2011). "Chennai's best business hotels". Condé Nast Traveller. CNTraveller.in. பார்க்கப்பட்ட நாள் 17 July 2021.
- ↑ "Trident, Chennai Fact Sheet" (PDF). டிரைடெண்ட், சென்னை. பார்க்கப்பட்ட நாள் 2013-03-07.