உள்ளடக்கத்துக்குச் செல்

ஜூரோங் ஊர்வன பூங்கா

ஆள்கூறுகள்: 1°19′15″N 103°42′32″E / 1.3209°N 103.7089°E / 1.3209; 103.7089
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜூரோங் ஊர்வன பூங்கா
Map
1°19′15″N 103°42′32″E / 1.3209°N 103.7089°E / 1.3209; 103.7089
திறக்கப்பட்ட தேதி~1959
மூடப்பட்ட தேதி2006[1]
அமைவிடம்ஜூரோங் மாவட்டம், சிங்கப்பூர்
நிலப்பரப்பளவு2 ha (4.9 ஏக்கர்கள்)[2]
உயிரினங்களின் எண்ணிக்கை50+[2]

ஜூரோங் ஊர்வன பூங்கா (Jurong Reptile Park) என்பது சிங்கப்பூரின் ஜுராங் மாவட்டத்தின் பூன் லே திட்டமிடல் பகுதியில் அமைந்துள்ள விலங்கியல் பூங்கா ஆகும். இப்பூங்கா 2 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள ஊர்வன மிருகக்காட்சிசாலை. இது ஆசியாவின் மிகப்பெரிய ஊர்வன பூங்காவாக இருந்தது.

இந்த ஊர்வன பூங்கா செயல்பாட்டிற்கு 2003 வரை ஜுராங் கால்பந்து குழு நிதியுதவி அளித்தது.

விலங்குகள் மற்றும் கண்காட்சிகள்[தொகு]

ஜூரோங் ஊர்வன பூங்காவில் முதலை, கொமோடோ டிராகன், அனகோண்டா பாம்பு, மலைப்பாம்பு, நாகப்பாம்பு மற்றும் ஆமை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஊர்வன சிற்றினங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றில் கிட்டத்தட்ட பாதிக்கு மேற்பட்டவை நச்சுத்தன்மை கொண்டவை.[2][3] இதில் பேரோந்திகள், நூற்றுக்கணக்கான முதலைகள் வாழும் பகுதியில் ஒரு நடைபாதை பாலம்,[4] நீருக்கடியில் கண்காணிப்பு மாடம் மற்றும் ஆசிய வெப்பமண்டலக் காட்டின் ஓசை உட்பட முதலைகளின் இரவு நேரத்தை உருவகப்படுத்திய கேவர்ன் ஆப் டார்க்னசு எனும் இருள் சூழ் பகுதியும் அடங்கும்.[2]

முதலைக்கு உணவு வழங்கும் நிகழ்வும் ஊர்வன படக் காட்சி நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.[2] பார்வையாளர்கள் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றுடன் தங்கள் தாமி படங்களை எடுக்கலாம்.[3] ஊர்வன தோலில் செய்யப்பட்ட தயாரிப்புகளைக் காட்சியறையில் வாங்கலாம்.

மூடல்[தொகு]

சிங்கப்பூரில் 2006ஆம் ஆண்டு ஜூரோங் ஊர்வன பூங்கா மூடப்படும் போது மிகப் பெரிய விலங்குக் காட்சிச் சாலையாக இருந்தது. பிற பிரபலமான உயிரியல் பூங்காக்களாகிய ஜூரோங் பறவைகள் பூங்கா மற்றும் சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலை காரணமாக ஜுராங் ஊர்வன பூங்கா மூடப்பட்டது.[1] இந்த தளம் இப்போது தி வில்லேஜ் @ஜுராங் கில்லால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "The Story of a Crocodile Farm at Upper Serangoon Road". wordpress.com. WordPress. 15 July 2012. பார்க்கப்பட்ட நாள் 13 October 2012.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Jurong Reptile Park". newasia-singapore.com. New Asia Singapore. 15 July 2012. பார்க்கப்பட்ட நாள் 13 October 2012.
  3. 3.0 3.1 "Jurong Reptile Park". singapore.com. AsiaWeb Direct. பார்க்கப்பட்ட நாள் 4 November 2012.
  4. "Singapore Nature Parks". singapore.com. Asia Web Direct. பார்க்கப்பட்ட நாள் 13 October 2012.
  5. "The Village @ Jurong Hill". village.com.sg. The Village. Archived from the original on 20 August 2013. பார்க்கப்பட்ட நாள் 13 October 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூரோங்_ஊர்வன_பூங்கா&oldid=4012084" இலிருந்து மீள்விக்கப்பட்டது