சோஜோர்னர் ட்ரூத்
சோஜோர்னர் ட்ரூத் | |
---|---|
1870ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒளிப்படம், ரண்டல் எசுடூடியோசிலிருந்து | |
பிறப்பு | இசபெல்லா பௌம்ஃப்ரீ c. 1797 சுவார்ட்கில்,நியூயார்க் |
இறப்பு | பேட்டில் கிரீக், மிச்சிகன் | நவம்பர் 26, 1883 (அகவை 86)
பணி | வீட்டு வேலையாள், எழுத்தாளர், அடிமைத்தன ஒழிப்பாளர் |
பெற்றோர் | ஜேம்சு, எலிசபெத் பௌம்ஃப்ரீ |
சோஜோர்னர் ட்ரூத் (Sojourner Truth) (c. 1797 – நவம்பர் 26, 1883) என்பது 1843ஆம் ஆண்டில் தானே புனைந்து கொண்ட பெயராகும். இசபெல்லா பௌம்ஃப்ரீ (Isabella Baumfree) என்ற இயற்பெயருடைய இவர் ஓர் ஆபிரிக்க-அமெரிக்க அடிமைத்தன ஒழிப்பாளரும் பெண்ணிய போராளியும் ஆவார். நியூயார்க்கில் உள்ள சுவார்ட்கில்லில் அடிமைகளான பெற்றோர்களுக்குப் பிறந்தவர் ட்ரூத். அடிமைத்தளையை கழற்றி எறிந்த இவர் 1851ஆம் ஆண்டு அக்ரோன், ஓகியோவில் ஓகியோ பெண்கள் உரிமை மாநாட்டில் ஆற்றிய "நான் ஓர் பெண்ணல்லவா" (Ain't I a Woman? )என்ற உரை மிகவும் புகழ் பெற்றது.
இளமைப் பருவம்
[தொகு]இவர் தன் பெற்றோருக்குப் பிறந்த பல குழந்தைகளில் இளைய மகளாகப் பிறந்தவர். கானாவில் இருந்து அழைத்துவரப்பட்ட கூலித் தொழிலாளியான ஜேம்ஸ் இவரது தந்தை. எலிசபெத் கினியா நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட அடிமைகளுள் ஒருவர். அடிமைகளாய் இருந்த இவரது பெற்றோரை கேணல் ஹார்டன்பெர்க் என்னும் செல்வந்தர் வாங்கினார். தன் தோட்டத்தில் வேலை வழங்கினார். முதலாளி இறந்த பின்னர், ட்ரூத் மற்றொருவருக்கு விற்கப்பட்டார். இவருக்கு டச்சு மொழி மட்டுமே தெரிந்திருந்தது.[1] நீலி என்ற புதிய முதலாளி தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறியுள்ளார். பின்னர், மார்டினஸ் ஷ்கிரைவர் என்பவரிடம் விற்கப்பட்டார்.. பதினெட்டு மாதங்கள் அங்கு வேலை பார்த்தார். மீண்டும் மற்றவருக்கு விற்கப்பட்டார். இவரது முதலாளிகளின் கொடுமையால் வாழ்க்கை துன்பகரமாக அமைந்தது.
1815 ஆண்டில், அண்டை தோட்டத்தில் வேலை பார்த்த ராபர்ட் என்ற அடிமையின் மீது காதல் கொண்டாட். ராபர்ட்டின் முதலாளிக்கு இது பிடிக்காததால் ராபர்ட்டை காயப்படுத்தினார். காயமுற்றமையினால் ராபர்ட் இறந்தார். இவரின் முதலாளி, கிழவராய் இருந்த அடிமைக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்தன.
விடுதலை
[தொகு]1799 ஆண்டில், நியூயார்க் மாநில அரசு அடிமைத்தனத்தை ஒழிக்க சட்டம் இயற்றியது. இந்த சட்டம் நிறைவேறும் ஆண்டிற்கு முன்னரே இவருக்கு விடுதலை வழங்குவதாக இவரது முதலாளி தெரிவித்தார். வேலையை ஒழுங்காக செய்தால் விடுதலை வழங்குவேன் என்றும் சொன்னார். இவருக்கு ஏற்பட்ட உடற்காரணங்களை காரணம் காட்டி, வேலை நிறைவாக இல்லை என்று கூறி மனதை மாற்றிக் கொண்டுவிட்டார். தொடர்ந்து வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். இவரது இளைய மகள் சோபியாவுடன் விடுதலை பெற்று சென்றுவிட்டார். மற்றைய நான்கு குழந்தைகளும் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. நியுயார்க் சட்டத்தை நிறைவேறும் வரை ஐசக் என்பவரிடம் வேலை செய்தார். இவரது முன்னாள் முதலாளி இவர் மகனை ஏமாற்றி விற்றுவிட்டார். நீதிமன்றத்தில் முறையிட்டு சில மாதங்களில் தன் மகனை மீட்டார். வெள்ளையருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த கறுப்பினப் பெண்களுள் முன்னோடி ஆவார்.[2] கிறிஸ்தவ சமயத்தில் ஈடுபாடு கொண்டார். புதிய முதலாளியின் வீட்டில் வீட்டுவேலைகளைச் செய்துவந்தார்.
பேச்சு உரைகள்
[தொகு]1843 ஆண்டில் தன் பெயரை சோஜோனர் டுரூத் என மாற்றினார். மெத்தடிஸ்ட் கிறிஸ்தவரானார். அடிமைத்தனத்தை எதிர்த்து குரல் கொடுத்தார். நார்த்தாம்டன் கல்விக் கழகத்தில் இணைந்தார். அது அடிமைத்தான ஒழிப்பாளர்களால் நிறுவப்பட்டது. மகளிரின் உரிமைக்காகவும், சமய நல்லிணக்கத்துக்காகவும் போராடியது. இருநூற்றுக்கும் அதிகமானவர்களைக் கொண்டிருந்த இந்த இயக்கம், போதிய ஆதரவின்றி பின்னாளில் முடங்கியது. நரேட்டிவ் ஆஃப் சோஜோனர் டுரூத்: எ நார்த்தன் சிலேவ் என்ற தன் நூலை தோழிகளிடம் தந்தார். மாசாசூசெட்சில் நடந்த பெண்களுக்கான உரிமை மாநாட்டில் பேசினார்.
1851 ஆம் ஆண்டில் பேச்சாளார் ஆனார். ஒஹியோ மாநிலத்தில் நடைபெற்ற பெண்ணுரிமை மாநாட்டிலும் கலந்துகொண்டார். இங்கு தான் இவரது பிரபலமான உரையான “நான் பெண்ணல்லவா” நிகழ்த்தப்பட்டது. பின்னாட்களில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் உரைகளை நிகழ்த்தினார்.
பிற உரைகள்
[தொகு]- மாப் கன்வென்சன், 1853: பெண்கள் எப்படியேனும் தங்கள் உரிமைகளைப் பெற்றிடுவர் என முழக்கமிட்டார்.
கேட்பவர்களின் பதிலுரைக்கு ஏற்பவே பேசினார்.
- அமெரிக்க சமவுரிமை கழகம், 1867 : அமெரிக்க சமவுரிமை கழகத்தில் தன் பேச்சை தொடங்கினார். இவரது உரைக்கு வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவரானார்.
உரையை மூன்று பிரிவுகளில் நிகழ்த்தினார். முதல் பிரிவில் கறுப்பினத்து பெண்களின் உரிமைகளைப் பற்றிக் குறிப்பிட்டார். இரண்டாவது பிரிவில், விவிலியம் கதைகளை குறிப்பிட்டு சமவுரிமையின் தேவையை வலியுறுத்தினார். இறுதிப் பிரிவில், மகளிர் வாக்களிப்பதற்கான உரிமையை பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
- நீக்ரோக்களின் விடுதலையை நினைவு கூறும் எட்டாவது ஆண்டு, 1871: மக்கள் அதிகளவில் கூடியிருந்தனர்.
இவரது இளைய பருவத்தைப் பற்றி சிறு குறிப்பை கூறி பேச்சைத் தொடங்கினார். இவரது முதலாளிகளின் கொடுங்குணத்தைப் பற்றியும் கூறிவந்தார். முதலில் வெள்ளையரை வெறுத்ததாகவும், பின்னர் இயேசுவை சரணடைந்ததாகவும், அனைவரையும் விரும்புவதாக தெரிவித்தார். அடிமைகளின் விடுதலையைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, இறைவனிடம் வேண்டிய தன் வேண்டுகோள் பலித்தது என்றும் கூறினார். கறுப்பினத்தவர்களுக்கு இடம் வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
செயற்பாடுகள்
[தொகு]1843இல் அட்வெண்ட் மதப் பிரிவை ஏற்றுக் கொண்டார். நார்த்தாம்டனின் இருந்த வீட்டை விற்றுவிட்டு, மிச்சிகனில் வீடு வாங்கினார். குடிமைப் போரில், அரசிற்கு உதவினார். பல கறுப்பின வீரர்களை தெர்ந்தெடுத்தார். தேசிய மீட்புக் குழுவிலும் முக்கியப் பணியாற்றினார். அமெரிக்கா வாழ் ஆப்பிரிக்கர்களின் முன்னேற்றத்திற்கு உழைத்தார். 1870 ஆண்டில், அடிமைகளுக்கு நிலம் பெற்றுத் தர உதவினார். வெள்ளை மாளிகையில் அதிபரை சந்தித்து இதுகுறித்து பேசினார். அடிமை ஒழிப்பு, பெண்ணுரிமைகள், சிறை சீர்திருத்தம் குறித்து பல உரைகளை நிகழ்த்தினார். இவர் 1883 ஆண்டில் நவம்பர் 26 இல் இறந்தார். மூவாயிரத்திற்கும் அதிகமானோர் கூடி இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நினைவுப் பரிசுகளும் விருதுகளும்
[தொகு]- 1892 - ட்ரூத், ஆபிரகாம் லிங்கனுடன் ஏற்பட்ட சந்திப்பை பிராங்க் கோர்ட்டர் என்பவர் படமாக வரைந்தார்.
- 1969 - இடதுசாரி அமைப்பு தன் பெயரை இவரின் பெயரைக் கொண்டு மாற்றிக்கொண்டது.
- 1971 - நியூ யார்க் நகரில் உள்ள நியூ பாட்சு பல்கலைக்கழகத்தின் நூலகத்திற்கு இவரது பெயர் இடப்பட்டுள்ளது.
- 1987 - அமெரிக்க அரசின் அஞ்சல் துறை இவரின் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது.
- 1997 - நாசாவின் செவ்வாய் கோளை ஆய்வதற்கான திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ரோபோவிற்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.
- 2002 - மொலேஃபி கேடே அசாண்டே என்ற கல்வியாளர், உயர்ந்த நூறு அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர்களில் இவரும் ஒருவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சான்றுகள்
[தொகு]- ↑ "Sojourner Truth page". Women in History site. Archived from the original on பிப்ரவரி 3, 2008. பார்க்கப்பட்ட நாள் December 28, 2006.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Memory.loc.gov