சைப்-உன்-நிசா அமிதுல்லா
சைப்-உன்-நிசா அமிதுல்லா | |
---|---|
1970களில் சைப்-உன்-நிசா அமிதுல்லா | |
தாய்மொழியில் பெயர் | জেবুন্নেসা হামিদুল্লাহ |
பிறப்பு | [1] கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா (தற்போது கொல்கத்தா, இந்தியா) | 25 திசம்பர் 1918
இறப்பு | 10 செப்டம்பர் 2000[1] கராச்சி, பாக்கித்தான் | (அகவை 81)
பணி | எழுத்தாளர், ஊடகவியலாளர், வெளியீட்டாளர் |
வாழ்க்கைத் துணை | கே. எம். அமிதுல்லா[1] |
சைப்-உன்-நிசா அமிதுல்லா (Zaib-un-Nissa Hamidullah) (வங்காள மொழி: জেবুন্নেসা হামিদুল্লাহ, உருது: زیب النساء حمیداللہ;25 திசம்பர் 1918-10 செப்டம்பர் 2000) ஒரு பாக்கித்தான் எழுத்தாளரும், பத்திரிகையாளரும் ஆவார். இவர் பாக்கித்தானில் பாக்கித்தானிய இலக்கியம், இதழியல், பெண்ணியம் ஆகியவற்றின் முன்னோடியாக இருந்தார். மேலும், இவர் பாக்கித்தானின் முதல் பெண் பத்திரிக்கை ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் முதல் பெண் கட்டுரையாளராகவும் இருந்தார். கராச்சியில் உள்ள ஒரு தெருவுக்கு சைப் உன் நிசா எனப் பெயர் சூட்டப்பட்டது.
1947 இல் இந்தியப் பிரிப்புக்கு முன், இவர் பல இந்திய செய்தித்தாள்களுக்கு எழுதினார். மேலும் இந்திய செய்தித்தாளில் பத்தி எழுதிய முதல் முஸ்லிம் பெண் இவர். சுதந்திரத்திற்குப் பிறகு, டான் செய்தித்தாளில் இவரது பத்தியில் பாக்கித்தானின் முதல் பெண் அரசியல் விமர்சகராக ஆனார். இவர் டானை விட்டு வெளியேறிய பிறகு, பாக்கித்தானின் முதல் சமூக இதழான மிரரின் நிறுவனர் மற்றும் பதிப்பாசிரியர் ஆனார். பாக்கித்தானின் முதல் பெண் ஆசிரியர் என்ற அந்தஸ்து காரணமாக, இவர் மற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்ட பத்திரிகை குழுக்களில் சேர்க்கப்பட்ட முதல் பெண் ஆனார். இந்த பிரதிநிதித்துவத்தின் ஒன்றில், 1955இல், எகிப்தின் கெய்ரோவில் உள்ள பண்டைய அல்-அசார் பல்கலைக்கழகத்தில் பேசிய முதல் பெண்மணி ஆனார்.[2]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]சைப்-உன்-நிசா அலி கொல்கத்தாவில் உள்ள ஒரு இலக்கியக் குடும்பத்தில் 1921இல் பிறந்தார். இவரது தந்தை எஸ். வாஜித் அலி, நன்கு அறியப்பட்ட உருது கவிஞர் முகம்மது இக்பாலின் எழுத்துக்களை வங்காள மொழியில் மொழிபெயர்த்த முதல் நபர் ஆவார். மேலும் அவர் ஒரு தீவிர வங்காள மற்றும் இந்திய தேசியவாதி மற்றும் எழுத்தாளர் ஆவார். தாயின் இரண்டாவது திருமணத்திலிருந்து இவருக்கு இரண்டு சகோதரர்களும், ஒரு ஒன்றுவிட்ட சகோதரரும் இருந்தனர். கொல்கத்தா இலக்கிய வட்டத்திற்கு ஒரு சந்திப்பு இடமாக இருந்ததால், இவரது தந்தையின் வீடு, அந்த காலத்தின் பெங்காலி சிந்தனையாளர்கள் மற்றும் தத்துவஞானிகளால் நிரப்பப்பட்ட ஆங்கிலோ-இந்தியர் குடும்பத்தில் வளர்ந்தார். இவர் சிறு வயதிலேயே எழுதத் தொடங்கினார். மேலும் இவரது ஆங்கிலத் தாய் மற்றும் பெங்காலி தந்தை இருவரிடமிருந்தும் கணிசமான ஆதரவைப் பெற்றார். ஒரு தனிமையான குழந்தை, சைப்-உன்-நிசா தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் வழிமுறையாக கவிதை எழுதுவதை எடுத்துக் கொண்டார். இவருடைய பிந்தைய எழுத்து வங்காளம் மற்றும் பஞ்சாபின் கிராமப்புறம், இவருடைய தந்தையின் பிறந்த ஊரான போரோடாஜ்பூர் உட்பட (ஜானாய், ஹூக்லிக்கு அருகில் உள்ள ஒரு கிராமம்) பயணங்களால் பாதிக்கப்பட்டது. .இவர் லோரெட்டோ ஹவுஸ் ஆங்கிலப் பள்ளியில் படித்தார் . இவர் தனது முதல் கவிதையை தி இல்லசுடிரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியாவில் 1933இல் 15 வயதில் வெளியிட்டார். 18 வயதில், இங்கிலாந்தின் டெய்லி மிரர் நடத்திய ஒரு கவிதை போட்டியில் இவர் "இந்திய நட்சத்திரம் " என வெளியிட்ட ஒரு கவிதைக்காக பரிசை வென்றார் - பின்னர் டெய்லி மிரர் டான் குழுமத்தின் ஒரு பகுதியாக மாறியது.
இறப்பு
[தொகு]பேகம் அமீதுல்லா 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று தனது 81 வது வயதில் இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 M.H. Askari (12 September 2000). "Zaib-un-Nissa Hamidullah passes away". Pakistan: Dawn இம் மூலத்தில் இருந்து 25 பிப்ரவரி 2002 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20020225122550/http://www.dawn.com/2000/09/12/nat10.htm.
- ↑ "Begum Zaibunnissa Hamidullah". Dawn இம் மூலத்தில் இருந்து 1 டிசம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041201155957/http://www.dawn.com/2000/09/12/ed.htm#2.
வெளி இணைப்புகள்
[தொகு]- Shamsie, Muneeza (1997). A Dragonfly in the Sun: An Anthology of Pakistani Writing in English. Karachi: Oxford University Press.
- Niazi, Zamir (1986). The Press in Chains. Karachi: Royal Book Company.
- Rahman, Tariq (1991). A History of Pakistani Literature in English. Lahore: Vanguard.
- Hamidullah, Zaib-un-Nissa (1958). The Young Wife and Other Stories. Karachi: Mirror Publications.
- Hamidullah, Zaib-un-Nissa (1972). Poems. Karachi: Mirror Publications.
- Ispahani, Akhtar (1 August 1997). "Through The Looking-Glass". Newsline: pp. 141–144.
- Noorani, Asif (21 May 1997). "Zaib-un-Nisa Hamidullah: Mirror to the past". The Review (Dawn Group): pp. 20–22.
- The Mirror. Karachi: Mirror Publications. 1951–1972.
- "Begum Zaibunnissa Hamidullah". Dawn இம் மூலத்தில் இருந்து 1 டிசம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041201155957/http://www.dawn.com/2000/09/12/ed.htm#2.
- "Begum Hamidullah". Dawn இம் மூலத்தில் இருந்து 3 மே 2001 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20010503131844/http://www.dawn.com/2000/09/18/letted.htm#13.
- The Young Wife and Other Stories, Oxford University Press பரணிடப்பட்டது 2011-10-05 at the வந்தவழி இயந்திரம்