சைபுதீன் ஐபக்
Amir al-Majlis Malik சைபுதீன் ஐபக் யுகாந்தத் | |
---|---|
மாலிக் சைபுதீன் ஐபக்கின் நாணயம் கி.பி. 1230-31 தேதியிட்டவை | |
பீகாரின் ஆளுநர் | |
பதவியில் -1232 | |
ஆட்சியாளர் | சம்சுத்தீன் இல்த்துத்மிசு |
பின்னவர் | துக்ரால் துகன் கான் |
வன்காளத்தின் ஆளுநர் ( இலக்னௌதி ) | |
பதவியில் 1232-1236 | |
முன்னையவர் | அலாவுதீன் ஜானி |
பின்னவர் | அவார் கான் ஐபக் (ஆக்கிரமிப்பாளர்), துக்ரால் துகன் கான் |
மாலிக் சைப் உத்-தின் ஐபக் யுகாந்தத் (Malik Saif ad-Dīn Aibak Yughantat) 1232 முதல் 1236 வரை தில்லியின் மம்லுக் வம்சத்தின் கீழ் வங்காளத்தின் ( லக்னௌதி ) ஆளுநராக இருந்தார். வங்காளத்தை ஆட்சி செய்த அடிமை அதிகாரிகளில் இவர் முதன்மையானவர்.[1]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]ஐபக் தர்கோ -பாரசீக பாரம்பரியத்தின் ஒரு கிதான் ஆவார். இக்தியார் அத்-தின் சுஸ்ட் கபாவின் வாரிசுகளிடமிருந்து இல்துமிஷ் என்பவரால் இவர் அடிமையாக வாங்கப்பட்டார். இவரது கடின உழைப்பு மற்றும் முயற்சிகள் மூலம், இவரது தரவரிசையில் உயர்ந்து, மாலிக்குகள் மத்தியில் மிகவும் சக்திவாய்ந்தவராக ஆனார். மேலும், அமீர் அல்-மஜ்லிஸ் என்றும் பெயரிடப்பட்டார். இவருக்கு 1227 இல் சிர்சா பகுதியின் 28 நிர்வாகப் பிருகளின் நில வருவாயை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.[2] பின்னர் இவர் பீகாரில் பணியமர்த்தப்பட்டார்.
வங்காள ஆளுநர்
[தொகு]வங்காள ஆளுநராக இருந்த அலாவுதீன் ஜானி பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, சுல்தான் சம்சுத்தீன் இல்த்துத்மிசு வங்காளத்தின் அடுத்த ஆளுநராக ஐபக்கை நியமித்தார். ஆளுநராக இருந்தபோது, யானைகளைப் பிடிக்கும் நோக்கத்துடன் தெற்கு வங்காளத்திற்கு ஐபக் ஒரு பயணத்தை மேற்கொண்டார். இவரது பயணம் வெற்றிகரமாக இருந்தது. பல யானைகள் பிடிபட்டது. இவற்றில் பல யானைகளை சுல்தானுக்கு அனுப்பினார். இல்த்துத்மிசு ஐபக் மீது மகிழ்ச்சி அடைந்து இவருக்கு "யுகாந்தத்" என்ற பட்டத்தை வழங்கினார்.[3][4] ஐபக் தனது மகளை மாலிக் கமாருதின் கிரண் திமூர் கானுக்கு மணமுடித்தார்.[5]
இறப்பு
[தொகு]கி.பி 1236 ஆம் ஆண்டு ஏப்ரலில் இவர் அவார் கான் ஐபக் என்ற கிளர்ச்சித் தலைவரால் படுகொலை செய்யப்பட்டார் அல்லது விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் அவார் கான் விரைவில் தோற்கடிக்கப்பட்டார். மேலும் சைபுதீனின் மரணத்தைத் தொடர்ந்து வங்காளத்தின் ஆளுநராக துக்ரல் துகான் கானை சுல்தான் இல்த்துத்மிசு நியமித்தார்.[6]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kumar, Sunil (1994). When Slaves were Nobles: The Shamsi Bandagan in the Early Delhi Sultanate. தில்லி பல்கலைக்கழகம்.
- ↑ Minhaj Siraj (1864). W. Nassau Lees; Maulawi Khadim Hosain; Abd al-Hai (eds.). Tabaqat-i-Nasiri. கொல்கத்தா. pp. 238–248.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ வார்ப்புரு:Cite Banglapedia
- ↑ Mandal, Sushila (1963). বাংলাদেশের ইতিহাস: মধ্যযুগ (in Bengali). Prakash Mandir.
- ↑ Shahnawaz, Fazeela (2014). Socio-Cultural Life of the Shamsi Nobles. Anamika Publishers.
- ↑ King Lists, Bengal (History Files)