உள்ளடக்கத்துக்குச் செல்

சைதாப்பேட்டை குருலிங்க சுவாமிகள் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைதாப்பேட்டை குருலிங்க சாமிகள் ஜீவசமாதி கோயில்

குருலிங்க சுவாமிகள் கோயில் என்பது சென்னை மாவட்டம் சைதாப்பேட்டையில் அமைந்துள்ள சித்தர் சமாதிக் கோயிலாகும். [1] இக்கோயில் காரணீசுவரர் கோயில் தெருவில் அமைந்துள்ளது. குருலிங்க சாமிகளின் பிறப்பு, பெற்றோர் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. [1]

குருலிங்க சாமிகள் சிவத்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறு யாத்திரையாக செல்லும் வழியில் காரணீசுவரரை தரிசிக்க சைதாப்பேட்டை வந்தார். அக்கோயிலின் அழகும், அமையும் குருலிங்க சுவாமிகளை சைதாப்பேட்டையிலேயே தங்கும் படி வைத்துவிட்டது.[1]

சாமிகளை தரிசிக்க சில பக்தர்கள் வந்தார்கள். அவர்களுக்கு தன்னுடைய இடது கையில் உதித்த லிங்கத்தினை குருலிங்கர் தந்தார். அதனால் குருலிங்கரை சித்தர் என மக்கள் அறிந்து கொண்டார்கள். குருலிங்கருக்கு தனி பக்தர் கூட்டம் உருவானது. [1]

சைதைப்பகுதியிலேயே ஜீவசமாதி அடைய இடம் தேடினார். ஒரு செல்வந்தரின் இடத்தினை ஜீவசமாதிக்கு தர கோரினார். ஆனால் முதலில் மறுத்த செல்வந்தர் குருலிங்கரின் திருவருளால் இடத்தினை தந்தார். காரணீசுவரர் கோயில் அமைந்துள்ள தெருவிலேயே குருலிங்க சாமிகள் கிபி 1887ம் வருடம் ஜீவ சமாதி அடைந்தார். [1]

ஆதாரங்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 குருலிங்க சாமிகள் சைதாப்பேட்டை - தினமலர் கோயில்கள்