செரோனியா சமர் (கிமு 338)
செரோனியா சமர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் பிலிப்பின் கீழ் மக்கெடோனியாவின் விரிவாக்கம் பகுதி | |||||||||
கேசலின் இல்லஸ்ட்ரேட்டட் யுனிவர்சல் இஸ்டரியில் இருந்து, செரோனியா சமரின் 1882 சித்தரிப்பு. |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
பலம் | |||||||||
| 35,000 | ||||||||
இழப்புகள் | |||||||||
140 கொல்லப்பட்டனர் |
|
||||||||
செரோனியா சமர் (Battle of Chaeronea (338 BC) என்பது கிமு 338 இல், போயோட்டியாவில் உள்ள செரோனியா நகருக்கு அருகில் நடந்த ஒரு சமர் ஆகும். இது இரண்டாம் பிலிப்பின் தலைமையிலான மாக்கெடினியாவிற்கும் ஏதென்சு மற்றும் தீப்சு ஆகிய நகர அரசுகளின் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே நடந்த சமராகும். கிமு 339-338 இல் பிலிப்பின் இறுதிப் போர்த் தொடர்களின் உச்சக்கட்டமாக இந்தப் போர் இருந்தது. இதன் முடிவில் மாசிடோனியர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு தீர்க்கமான ஒரு வெற்றி கிடைத்தது.
மூன்றாம் புனிதப் போரை முடித்துக்கொண்டு, வட ஏஜியனில் தனது மேலாதிக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள ஏதுவாக ஏதென்சுடன் தனக்கு இருந்துவந்த பத்து ஆண்டுகால மோதலை பிலிப் முடிவுக்கு கொண்டுவந்தார். அமைதி உடன்பாட்டைக் கொண்டுவந்ததன் வழியாக, கிமு 346 இல், போரினால் பாதிக்கப்பட்ட கிரேக்கத்தில் அமைதியைக் கொண்டுவந்தார். அதன் பிறகு பிலிப்பின் மிகவும் விரிவாக்கப்பட்ட இராச்சியம், ஆற்றல்வாய்ந்த படை, ஏராளமான வளங்கள் போன்றவை அப்போது அவரை கிரேக்கத்தின் நடைமுறைப்படியான தலைவராக்கியது. கிமு 346க்குப் பிறகு பல சுதந்திர நகர அரசுகளுக்கு பிலிப்பின் அதிகாரம் ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்கபட்டது. குறிப்பாக ஏதென்சின், அரசியல்வாதியான டெமோஸ்தனிஸ் பிலிப்பின் செல்வாக்கிலிருந்து ஏதென்சை விலகுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். கிமு 340 இல், பிலிப்பின் பிரதேசங்களுக்கு எதிராக போர் நடவடிக்கை எடுக்கவும், பிலிப்பால் முற்றுகையிடப்பட்ட பைசாந்தியத்தில் உள்ள அகாமனிசியர்களுடன் கூட்டுச் சேரவும் ஏதெனிய சட்டசபையில் டெமோஸ்தீனஸ் வலியுறுத்தினார். இந்த நடவடிக்கைகள் பிலிப்புடனான உடன்படிக்கை விதிமுறைகளுக்கு எதிராக இருந்தன. மேலும் அவை போர் பிரகடனத்திற்கு இணையானவையாக இருந்தன. கிமு 339 கோடையில், பிலிப் தனது படைகளை தென் கிரேக்கத்தை நோக்கி வழிநடத்தினார். இது அவருக்கு எதிராக ஏதென்சு மற்றும் தீப்சு தலைமையில் சில தெற்கு கிரேக்க அரசுகளைக் கொண்ட ஒரு கூட்டணியை உருவாக்கத் தூண்டுகோலானது.
பல மாத முட்டுக்கட்டைக்குப் பிறகு, தீப்சு மற்றும் ஏதென்சுக்கு அணிவகுத்துச் செல்லும் முயற்சியின் ஒரு பகுதியாக பிலிப் இறுதியாக போயோட்டியாவிற்கு முன்னேறினார். அவரை எதிர்த்து, செரோனியாவுக்கு அருகில் பாதைதைத் தடுத்தது, நேச நாட்டு இராணுவம் வலுவான அளவில் நிலைகொண்டது. அடுத்தடுத்த போர் குறித்த விவரங்கள் குறைவாகவே உள்ளன. ஆனால் நீண்ட சமருக்குப் பிறகு மாசிடோனியர்கள் கூட்டணிப் படைகளை இரு பக்கங்களிலிம் சுற்றிவளைத்து நசுக்கினர். இதனால் அவர்கள் தோல்வியடைந்தனர்.
இந்த போர் பண்டைய உலகில் மிகவும் தீர்க்கமான ஒன்றாக விவரிக்கப்பட்டுள்ளது. இப்போரில் ஏதென்சு மற்றும் தீப்சின் படைகள் அழிக்கப்பட்டதைத், தொடர்ந்து போர் முடிவுக்கு வந்தது. தெற்கு கிரேக்கம் மீது எசுபார்த்தாவைத் தவிர அனைத்து அரசுகளும் ஏற்றுக்கொண்ட ஒரு தீர்வை பிலிப் தான் விரும்பியபடி திணிக்க முடிந்தது. இதன் விளைவாக கொரிந்து கூட்டணி பிலிப்பால் உருவாக்கப்பட்டது. இதில் இருந்த அனைத்து பங்கேற்பாளர்களையும் மாசிடோன் உள்ளட்ட அரசுகளை ஒருவருக்கொருவர் நட்பு நாடுகளாக ஆக்கியது. பிலிப் அமைதிக்கான உத்தரவாதமாக இருந்தார். இதையொட்டி, பிலிப் நீண்டகாலமாகத் திட்டமிட்டிருந்த அகாமனிசியப் பேரரசுக்கு எதிரான ஹெலனிக் முழுமைக்குமான கூட்டணிப் படைகளின் ஸ்ரடிகெசாக (தளபதி) தேர்ந்தெடுக்கபட்டார். இருப்பினும், போர்த்தொடருக்கான பொறுப்பை ஏற்கும் முன், பிலிப் படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு பாரசீகத்துடனான போருக்கான பொறுப்பு அவரது மகன் அலெக்சாந்தர் வசம் வந்து சேர்ந்தது.
பின் விளைவுகள்
[தொகு]பண்டைய வரலாற்றில் மிகவும் தீர்க்கமான போர்களில் ஒன்றாக இது இருந்தது என்று காக்வெல் கூறுகிறார்.[3] பிலிப்பின் முன்னேற்றத்தைத் தடுக்கும் வலிமையான இராணுவம் இல்லாது போனதால், போர் திறம்பட முடிவுக்கு வந்தது.[3] போர்க்களத்தில் சிறைப்பட்ட தீபன்களை அடிமைகளாக விற்றுவிடும்படி செய்தார். ஏதென்சு மற்றும் கொரிந்தில், நகர மதில் சுவர்களை மீண்டும் கட்டுவதற்கான அவநம்பிக்கையான முயற்சிகளை வரலாற்றுப் பதிவுகள் காட்டுகின்றன.[4] இருப்பினும், பிலிப்புக்கு எந்த நகரத்தையும் முற்றுகையிடவோ அல்லது அதைக் கைப்பற்றும் எண்ணமோ இல்லை. அவர் பாரசீகர்களுக்கு எதிராக நடத்த திட்டமிட்டிருந்த போர்த் தொடருக்காகாக தெற்கு கிரேக்கர்களை தனது கூட்டாளிகளாக விரும்பினார். மேலும் அவர் போர்த்தொடருக்குச் செல்லும்போது தனக்கு பின்னால் ஒரு நிலையான கிரேக்கத்தை விட்டுச் செல்ல விரும்பினார்; எனவே மேலும் சண்டையிடுவது அவரது நோக்கங்களுக்கு எதிரானதாக கருதினார்.[4] பிலிப் முதலில் தீப்சுக்கு அணிவகுத்துச் சென்றார். அது அவரிடம் சரணடைந்தது; அவர் தன்னை எதிர்த்த தீபன் தலைவர்கள் சிலரை சிரச்சேதம் செய்தார். சிலரை நாடு கடத்தினார். மேலும் முன்பு நாடுகடத்தப்பட்டிருந்த மாசிடோனிய சார்பு தீபன்களை நினைவுகூர்ந்தார். தனக்கு அடங்கி நடக்க்கூடிய ஒரு சிலரை அதிகாரப் பீடத்தில் அமர்த்தினார். மேலும் ஒரு மாசிடோனிய துணைப்படையை காட்மியா கோட்டையில் நிறுவினார்.[5] முந்தைய போர்களில் தீப்சால் அழிக்கபட்ட பிளாட்டீயா, தெஸ்பியா ஆகிய போயோசியன் நகரங்களை மீண்டும் நிறுவவும் அவர் உத்தரவிட்டார். பொதுவாக, பிலிப் தீபன்களை கடுமையாக நடத்தினார். மாசிடோனியர்களிடிம் போர்க்கைதிகளாக பிடிபட்ட தீபன்களை மீட்கவும், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கும் கூட அவர்கள் பணம் செலுத்தவேண்டி இருந்தது. இருப்பினும், அவர் போயோடியன் கூட்டமைப்பை கலைக்கவில்லை.[5]
மாறாக, பிலிப் ஏதென்சை மிகவும் மென்மையாக நடத்தினார். ஏதெனியன் இரண்டாவது கூட்டணி கலைக்கப்பட்டாலும், ஏதெனியர்கள் சமோசில் தங்கள் குடியேற்றத்தை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் போர்க்களத்தில் சிறை பிடிபட்ட ஏதெனியர்கள் மீட்புத் தொகையின்றி விடுவிக்கப்பட்டனர்.[6] அதன் அரசாங்க அமைப்பிலோ, அல்லது அதன் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த சாமோஸ், லெனோஸ் முதலிய சில தீவுகள் விசயத்திலோ தலையிடவில்லை. கெர்சோனிசை மட்டும் தன் வசப்பணுத்திக் கொண்டார். பிலிப்பின் நோக்கங்கள் முற்றிலும் தெளிவாக இல்லை. ஆனால் இதில் ஒரு சாத்தியமான விளக்கம் என்னவென்றால், அவர் பாரசீகர்களுக்கு எதிரான தனது போர்த்தொடரில் ஏதெனியன் கடற்படையைப் பயன்படுத்தவேண்டிவரும் என்று கருதினார். ஏனெனில் மாசிடோனியா கணிசமான அளவு கடற்படையைக் கொண்டிருக்கவில்லை; எனவே அவர் ஏதெனியர்களுடன் நல்லுறவில் இருக்க வேண்டியிருந்தது.[6]
பிலிப் தன்னை எதிர்த்து போரிட்ட மற்ற அரசுகளான கொரிந்து மற்றும் சால்சிசுடனும் அமைதி உடன்பாடு செய்து கொண்டார். இவை இரண்டிலும் மாசிடோனிய துணைப்படைகள் நிறுவப்பட்டன.[7] பின்னர் அவர் மோதலில் பங்கேற்காத எசுபார்த்தாவைச் சமாளிப்பதில் கவனம் செலுத்தினார். கலந்துரையாடல்களில் ஈடுபட அழைத்த பிலிப்பின் அழைப்பை எசுபார்த்தா மறுத்தது. பிலிப் லாசிடெமோனியாவை அழித்தார். அதன் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளை கைப்பற்றி ஆர்கோஸ் போன்ற அரசுகளுக்கு பகிர்ந்து அளித்தார். எசுபார்த்தாவைத் தாக்கவில்லை[8] என்றாலும், அதன் அதிகார எல்லையைச் சுருக்கிவிட்டார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Demosthenes. Letters, 4.8.
- ↑ Demosthenes. De Corona, 18.237.
- ↑ 3.0 3.1 Cawkwell 1978, ப. 148.
- ↑ 4.0 4.1 Cawkwell 1978, ப. 166.
- ↑ 5.0 5.1 Cawkwell 1978, ப. 167–168.
- ↑ 6.0 6.1 Cawkwell 1978, ப. 167.
- ↑ Cawkwell 1978, ப. 168.
- ↑ Cawkwell 1978, ப. 169.